Slider

Rasipalan

Tirupur Astrologer Numerology Astrology Tamil Astrology Horoscope in Tamil Jothidam astrology predictions consultation Future Astrology Hindu astrology Indian Jadhagam Best Astrologer famous astrologer in tirupur astrologer tirupur famous astrologer in tamilnadu astrologer Traditional consultations salem coimbatore Tirupur Madurai Gopichetipalayam Avinashi sathy Trichy erode jothidar erode astrologer tamil jothidar tirupur tamilnadu jothidar.jathagam parpavar jathaga porutham josiyam parpavar best jothidar tirupur tirupur jothidar tirupur jothidam Most popular Josiyam mobile horoscope Online Astrology online Horoscope tirupur astro tirupur jathagar jothidam tirupur jothidar in jothidar in tirupur prasanna jothidam tirupur vastu jothidar nalla astrologer tirupur Rasi palangal sanipeyarchi palangal guruperchi palangal Tamil-prediction Horoscope in Tamil Tamil Jothidam Astrologer in Tamilnadu Tamil Jothidar Astrologer in Ariyalur Astrologer in Chennai Astrologer in Coimbatore Astrologer in Cuddalore Astrologer in Dharmapuri Dindigul Astrologer in Erode Astrologer in Kanchipuram Kanyakumari Astrologer in Karur Astrologer in Krishnagiri in Madurai Astrologer in Nagapattinam Namakkal Astrologer in Nilgiris Astrologer in Perambalur Pudukkottai Astrologer in Ramanathapuram Astrologer in Sivaganga Astrologer in Thanjavur Theni Astrologer in Thoothukudi Tiruchirappalli Astrologer in Tirunelveli Astrologer in Tiruvallur Tiruvannamalai Astrologer in Tiruvarur Vellore Astrologer in Viluppuram Astrologer in Virudhunagar Chart Astrology Consultation Astrology Horoscope Astrology online Astrology Predictions Services Best astrologer Best astrologer tirupur Best Jothidar Tirupur Jothidar famous astrologer in tirupur Good Astrologer In tirupur Good Astrologer In Tamil Nadu Tamil Jothidam Vedic astrology Specialist in Astrology Greatest Computer Astrologer in tirupur famous astrologers in Best astrologers astrologers in tirupur astrologers experts in tirupur astrologers experts in Tamil Nadu Specialist in Astrology Tamil Nadu Astrologers astrologers experts in tirupur chennai komarapalayam best astrologer chennai numerology astrology in tamil numerology

Our service running text

கிரக தோஷங்களினால் காதல் பிரச்சினை, திருமணத்தடை, கணவன் மனைவி பிரச்சினை, குழந்தையின்மை, தொழில் நஷ்டம், வேலை வாய்ப்பின்மை, பதவி உயர்வு தடங்கள், எதிரிகள் தொல்லை, கடன் தொல்லை, மனம் நிம்மதி யின்மை, நோயினால் பல்வேறு உடல் உபாதைகள் போன்ற அனைத்தும் ஏற்ப்படும். அவற்றிலிருந்து விடுபட்டு நீண்ட ஆயுளும் நிறந்த செல்வமும் பெற்று வளமுடன் வாழ எம்மை அனுகவும். | ஜோதிடம் | ஆன்மிகம் | மந்திரம் | திருமண பொருத்தம் | ஜாதகம் | ஜாமக்கோள் ஆருடம் | ராசி பலன் | சந்திர நாடி | பிருகு நாடி | ஜெம்ஸ் | பட்சி | டாரட் | குரு நாடி | சனி நாடி | மருத்துவ ஜோதிடம் | கர்மா பரிகாரம் | தாம்பூல பிரசன்னம் | கேபி | சோழிய பிரசன்னம் | தேவபிரசன்னம் | எண் கணிதம் | பெயர் பட்டியல்|

Wednesday, December 20, 2017

Sani peyarchi palangal 2018 - Mesha rasi:



சனி பெயர்ச்சி பலன்கள் - மேஷ ராசி:

மேஷ ராசிக்காரர்களுக்கு மார்கழி 4உ (19-12-2017)சனி தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிருக்கிறார்.இது மேச ராசிக்கு 9ஆம் இடம், பாக்கியஸ்தானம். அரசங்க வேலை வாய்ப்பு, அரசு கடன் உதவி, உற்றார் உறவினர்கள் பகை நீங்கி ஒன்றூ சேர்வது, வாகன யோகம் ,புனித பயணங்கள் மற்றூம் அனைத்து நன்மைகளூம் ஏற்படும்.
ஜோதிடம் கற்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும் : 
முருகு ஜோதிட பயிற்சி மையம் Cell: 9894720277

Sani peyarchi palangal 2018 - Rishaba Rasi :


சனிப்பெயர்ச்சி பலன்கள் - ரிசபம் ராசி :

ரிசப ராசிக்காரர்களூக்கு சனி 19-12 - 2017 தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் இது நல்ல இடமல்ல, குடும்பத்தில் பணக்கஸ்டம் ஏற்படும். வியாபாரத்தில் நஸ்டம் ஏற்படும். ஒரு சிலருக்கு உயிர் கண்டம் ஏற்பட வாய்ப்புள்ல்து. அஷ்டம சனி காலமாகும்.
ஜோதிடம் கற்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும் : 
முருகு ஜோதிட பயிற்சி மையம் Cell: 9894720277

Sani peyarchi palangal 2018 - Mithuna Rasi :


சனி பெயர்ச்சி பலன்கள் - மிதுனம் ராசி :

மிதுன ராசிக்காரர்களூக்கு 19-12-2017உ சனி பெயர்ச்சி சனி 7ஆம் இடத்தில் இருப்பது சரியல்ல. கெண்டகச்சனி காலமாகும்..பணக்கஸ்டம் ஏற்படும். திருமணத்தடை அல்லது, விவாக்ரத்து ஏற்படும். ஆனால் பெற்றோர் பெயரில் சொத்து வாங்க நேரிடும்.
ஜோதிடம் கற்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும் : 
முருகு ஜோதிட பயிற்சி மையம் Cell: 9894720277

sani peyarchi palangal 2018 - Kadaga Rasi :

சனி பெயர்ச்சி பலன்கள் - கடகம் ராசி :

சனி பெயர்ச்சி கடக ராசிக்காரர்களூக்கு 19-12-2017 உ 6 ஆம் இடமாகிய தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்..இது நல்ல இடமல்ல நோய் எதிரி ஸ்தானமாகும் கோர்ட் கேஸ் வழக்குகளை சந்திக்க நேரிடும். வெளி நாடு சென்று கல்விபயில நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடம் மாற்றம் ,இலாகா மாற்றம் ஏற்படும். மனைவி வழியில் சன்டை சச்சரவு ஏற்படும்.குடும்பத்தில் பண கஸ்டம், மனக்கஸ்டம் ஏற்படும்.
ஜோதிடம் கற்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும் : 
முருகு ஜோதிட பயிற்சி மையம் Cell: 9894720277

sani peyarchi palangal 2018 - Simma Rasi :


சனிபெயர்ச்சி பலன்கள் -சிம்மம் ராசி :
சனிபெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களூக்கு 19-12-2017உ சனி தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.ராசியிலிருந்து 5ஆம் இடம் உகந்த இடம். நீண்டகாலமாக மற்றவர் கையில் குத்தகையில் இருந்த பூர்வீக சொத்து தற்சமயம் வந்து சேரும். பொருளாதார தட்டுப்பாடு நீங்கும் குலதெய்வ வழிபாடு நடக்கும். நர்சரி புஷ்ப வகை வியாபாரத்தில் நல்ல பலன் கிடைக்கும் குடும்பத்தில் சுப காரியம் நடக்கும்..
ஜோதிடம் கற்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும் : 
முருகு ஜோதிட பயிற்சி மையம் Cell: 9894720277

sani peyarchi palangal 2018 - Kanni Rasi :



சனிப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி ராசி:
சனிப்பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு 19-12-2017உ சனிதனுசு ராசிக்கு மாறூகிறார். இரு 4ஆம் இடமாகும்.அர்த்தாஷ்டம சனி ஸ்தானமாகும். இதனால் மறைமுகஎதிரிகளால் பல தொல்லைகள் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி குறைவு உண்டாகும்.சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும். வெளினாடு சென்றவர்கள் நஸ்டப்பட்டு வீடு திரும்ப நேரிடும். விவாகரத்து செய்ய நிணைப்பவர்களின் எண்ணம் நிறை வேரும். சிலருக்கு மறு தாரம் நடக்கும்.
ஜோதிடம் கற்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும் : 
முருகு ஜோதிட பயிற்சி மையம் Cell: 9894720277

sani peyarchi palangal 2018 - thulam rasi:


சனிப் பெயர்ச்சி பலன்கள் -துலாம் ராசி:
சனிப் பெயர்ச்சி துலா ராசிக்காரர்களுக்கு 19-12-2017 உ சனி தனுசு ராசிக்கு மாறுகிறார். இது ராசிக்கு 3ஆம் இடமாகு. இது சகோதர சனி ஸ்தானமாகும். கால் நடை வகையில் ந்ஸ்டம் ஏற்படும். விச ஜந்துக்களால் துர்பலன் ஏற்படும். விவசாயம் நன்றாக நடக்கும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும்.தாய் வ்ழியில் சண்டை சச்சரவு ஏற்படும்.பட்டு ஜவுளி விளையாட்டு சாமாங்கள் வியாபாரம் நன்றாக விற்பனை யாகும். பொதுவாக நண்மையும் தீமையும் கலந்தே நடக்கும்.
ஜோதிடம் கற்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும் : 
முருகு ஜோதிட பயிற்சி மையம் Cell: 9894720277

Sani peyarchi palangal 2018 - Viruchiga Rasi:


சனிப் பெயர்ச்சி பலன்கள் -விருச்சிகம் ராசி:

சனிப் பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு 19-12-2017உ சனி இரண்டாமிடமான தனுசு ராசிக்கு மாறுகிறார்..இது தன ஸ்தானமாகும். பாதசனி காலமாகும். மாமியார் வீட்டு சொத்து சேரும்படியான யோகம் உண்டு.தன் குடும்பத்தில் ஜுரம் ஏற்பட்டு சிலருக்கு கெண்டம் ஏற்படலாம். சிலருக்கு மாரடைப்பு. நோயால் பாதிப்பு ஏற்படும்.
ஜோதிடம் கற்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும் : 
முருகு ஜோதிட பயிற்சி மையம் Cell: 9894720277

Sani peyarchi palangal 2018 - Thanusu Rasi


சனிப் பெயர்ச்சி பலன்கள் - தனுசு ராசி : 
சனிப் பெயர்ச்சி தனுசுராசிக்காரர்களுக்கு 19-12-2017உ விருச்சிகராசியிலிருந்து தனுசு ராசிக்கு சனி வருகிறார். இது நல்ல இடமல்ல ஏழரை ஆண்டு ஜென்ம சனி ஸ்தானமாகும்..உடல் ஆரோக்யம் குரைபாடு சோம்பல், எற்படும். 2ஆம் சுற்று பொங்கு சனி காரர்களுக்கு வங்கிகளின் மூலம் கடன் பெற்று வியாபாரம் செய்ய. நேரிடும் கட்டட வேலையில் உள்ளவர்களுக்கு கணிசமான லாபம் கிடைக்கும்.
ஜோதிடம் கற்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும் : 
முருகு ஜோதிட பயிற்சி மையம் Cell: 9894720277


Sani Peyarchi Palankal 2018 - Magaram Rasi



சனிப் பெயர்ச்சி பலன்கள் - மகர ராசி :
சனிப் பெயர்ச்சி மகர ராசிக்காரர் களுக்கு 19-12-2017உ தனுசு ராசிக்கு சனி பெயர்ச்சி அடைகிறார். 12ஆம் இடத்தில் இருப்பது உகந்த இடமல்ல.ஏழரை ஆண்டு விரைய சனி ஸ்தானமாகும். ராசியாதிபதி சயாய் இருப்பதால். அதிக விரையம் செய்ய மாட்டார். விமானம், ரயில், கப்பல் தரை வாகனம் இதில் பிரயணம் செய்பவர்களுக்கு சிறு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.கடல் கடந்த வியாபாரம் செய்ய நல்ல லாபம் தரும். பெட்ரோல், டீசல், மண்ணெண்ணைய் வியாபாரத்தில் நல்ல லாபம் தரும். நெடுஞ்சாலை உணவு விடுதி நல்ல பலன் தரும்.

ஜோதிடம் கற்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும் : 
முருகு ஜோதிட பயிற்சி மையம் Cell: 9894720277

Sani Peyarchi palankal 2018 - Kumba Rasi:




சனிப் பெயர்ச்சி பலன்கள் - கும்ப ராசி:

சனிப் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு 19-12-2017 உதனுசு ராசிக்கு சனி பெயர்ச்சி அடைகிறார்.இது ராசிக்கு 11ஆம் இடமாகு. லாப சனி ஸ்தானமாகும். நீண்டகாலம் வராத பணம் உங்களுக்கு வந்துசேரும். திருமண மண்டபம் தங்கு விடுதி கட்ட நல்ல லாபம் தரும். வியாபாரதில் விரும்பிய லாபம் கிடைக்கும். உத்தியோக உயர்வு எற்படும். திருமணம் நடைபெரும். அரசு வேலைவாய்ப்பு எற்படும்.

ஜோதிடம் கற்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும் : முருகு ஜோதிட பயிற்சி மையம் Cell: 9894720277

Sani Peyarchi Palankal 2018 - Meena Rasi :



சனிப்பெயர்ச்சி பலன்கள் - மீன ராசி

சனிப்பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு 19-12-2017உ சனி தனுசு ராசிக்கு வருகிறார்.இது 10ஆம் இடமாகும்.விரோதிகளின் தொல்லைகள் நீங்கி நிம்மதி ஏற்படும். பணத்தட்டுப்பாடு குறையும். எந்த வேலை செய்தாலும் நஸ்ட பலனும், பழைய பொருள்கள் வங்கி இதனால் போலீஸ் வழக்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இடம் மாறுதலும் உண்டு.

ஜோதிடம் கற்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும் :
முருகு ஜோதிட பயிற்சி மையம் Cell: 9894720277

Sunday, October 8, 2017

Rasi Palan 2018 Kumbam Rasi | 2018 ராசி பலன் கும்ப ராசி




Ø  ராசி : கும்பம்
Ø  நட்சத்திரம் : அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய
Ø  அதிஷ்ட கல் : நீலக்கல்
Ø  அதிஷ்ட வண்ணம் : பழுப்பு நிற
Ø  அதிஷ்ட எண் : 5, 6, 8
Ø  அதிஷ்ட திசை : மேற்கு

2018 ராசி பலன் - கும்ப ராசி (2018 Rasi Palan Kumbam Rasi)

 நிதானமாக செயல்பட்டு, வெற்றிக் கனியைப் பறிக்கும் தன்மையுள்ள கும்பராசி அன்பர்களே!
மனதில் இருந்த உளைச்சல் மறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். ஜூன் மாதத்திற்கு பிறகு செலவை குறைக்கவும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். வீட்டிற்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். கணவன்- மனைவி இடையே அன்பு நீடிக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். அதுவும் ஜூன் மாதத்திற்குள் நிறைவேறும். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தையே வேறு ஊருக்கு மாற்ற வேண்டியது வரலாம். அனாவசிய செலவை தவிர்க்கவும்.

தொழில், வியாபாரம்:
தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க அனு கூலம் உண்டு. ஆனால், அதை ஜூன் மாதத்திற்குள் ஆரம்பித்தால் மிகச்சிறப்பாக நடக்கும். தாமதமாகத் தொடங்கினால், அதிகமாக உழைத்து சிரமப்பட்டு தொழிலைக் காப்பாற்ற வேண்டியது வரும்.

பணியாளர்கள்:
பணியாளர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆனால், ஜூன் மாதத்திற்கு பிறகு வேலையில் பளு அதிகரிக்கும். வேலையின்றி இருப்பவர்கள் ஜூன் மாதத்துக்குள் வேலையைத் தேடிக்கொள்ளவும். அதற்கு அனுகூலமான வாய்ப்பும் இருக்கிறது. அக்டோபர், நவம்பர் மாதங் களில் போலீஸ் மற்றும் பாதுகாப்புத் துறையில் வேலை பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர்.

பெண்கள்:
கணவருடன் கருத்து மோதல் கொள்ளாமல் பவ்வியமாக நடந்து கொள்வது நல்லது. ஜூனுக்குப் பிறகு பொறுமை பெருமை தரும். திருமண முயற்சிகளை ஜூனுக்குள் முடித்து விடுவது நல்லது. ஆண்டின் ஆரம்பத்தில் நகை வாங்கலாம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சலுகைகள் கிடைக்கும்.

மாணவர்கள்:
இந்த கல்வி ஆண்டில் முன்னேற்றத்தை காணலாம். ஆனால் அடுத்த ஆண்டு, கடும் முயற்சி எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.

விவசாயிகள்:
முதல் ஐந்து மாதங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். அதன்பின், விவசாயத்தை நடத்த சிறு சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கலாம். இருப்பினும், பாதகமான நிலை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. சிலர் புதிய நிலம் வாங்குவர். நவீன கருவிகள் மூலம் செய்யும் சாகுபடியில் நல்ல பலன் கிடைக்கும்.


கும்ப ராசி பரிகாரம்: ( Pariharam - Kumba Rasi ):

மேலே கொடுக்கப்பட்டவை பொதுவான பலன்கள். ஆனால்  உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்துள்ள நிலை, மற்ற கிரகங்கள் அவற்றைப் பார்க்கும் நிலை அதனால் உங்களுக்கு ஏற்படவிருக்கும் நன்மை அல்லது பாதிப்புகளை அறிந்துகொள்ள ஜோதிடரை தொடர்புகொள்ளுங்கள்

கணித ஜோதிடர் சுப்பிரமணியம் M.A., Astro.,  Cell: 9894720277

Rasi Palan 2018 - Mesham Rasi | ராசி பலன் 2018 - மேஷம் ராசி





Ø ராசி : மேஷம்
Ø நட்சத்திரம்: அசுவினி, பரணி, கார்த்திகை 1-ஆம் பாதம் முடிய
Ø அதிஷ்ட கல்: பவளம்Ø அதிஷ்ட 
வண்ணம்: சிகப்புØ அதிஷ்ட எண் : 1, 3, 9
Ø அதிஷ்ட திசை : தெற்கு



2018 Rasi Palan Mesha Rasi | 2018 ராசி பலன் மேஷ ராசி



மனஉறுதியுடன் செயலாற்றி வெற்றி வாகை சூடும் மேஷ ராசி அன்பர்களே!
இந்த ஆண்டு உங்களின் கவலைகள் படிப்படியாகக் குறையும். புதிய வீட்டுக்குக் குடிபெயரும் வாய்ப்பு உண்டாகும். ஒரு சிலருக்கு வழக்கொன்றில் வழங்கப்படும் சாதகமான தீர்ப்பினால் வருமானம் பெருகும். தடைபட்டிருந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் ஏற்பட்ட விரோதங்கள் மறையும். உங்களின் களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் எதிர்பார்த்ததற்கும் மேலான உதவிகளைச் செய்வார்கள். உடல் ஆரோக்யம் சிறப்படையும். அரசுத் துறைகளின் மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு இந்த ஆண்டில் பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். அலுவலகத்தில் உங்கள் மரியாதை உயரும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அதேநேரம் எவரைப் பற்றியும் புறம் பேசாமல், சக ஊழியர்களின் நட்பைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகவும், கோபப்படாமலும் நடந்துகொண்டால் நல்ல லாபங்களை அள்ளலாம். மற்றபடி கடுமையான போட்டிகளையும் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் வெற்றிகரமாக முடிவடையும். கூட்டாளிகள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். அதேசமயம் புதிய முதலீடுகளில் கவனமாக இருக்கவும்.

விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி நன்றாக இருக்கும். பழைய குத்தகை பாக்கிகள் வசூலாகும். பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு செலவு செய்வீர்கள். பாசன வசதிகளில் கவனம் செலுத்துவீர்கள். கால்நடைகளுக்கு சிறிது செலவு செய்ய வேண்டியிருக்கும். சக விவசாயிகளிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.
அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். அதே சமயம் நண்பர்கள் போல் பழகும் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும். பொதுவாகவே பிறரிடம் பேசும் நேரத்தில் நிதானம் தேவை. எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிப் பரப்பும் அவதூறுகள் குறித்துக் கவலைப்பட வேண்டாம். மற்றபடி உங்களின் பணியாற்றும் திறன் கண்டு கட்சி மேலிடம் உங்களுக்குப் புதிய பதவிகளை அளிக்கும். இதனால் பொறுப்புகள் கூடும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். பண வரவு அமோகமாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். ரசிகர்களின் ஆதரவோடு வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் வாய்ப்புகளும் கிடைக்கும்.

பெண்மணிகளுக்குக் கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். பண வரவு சீராக இருக்கும். உடல் ஆரோக்யம் சிறப்பாக அமையும். ஆன்மீகச் சுற்றுலா சென்று வரும் ஆண்டாக இது அமையும். எங்கும், எப்போதும் பேசும் நேரத்தில் நிதானம் தேவை. மாணவமணிகள் கல்வியிலும், விளையாட்டிலும் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். யோகா, ப்ராணாயாமம் போன்றவைகளைச் செய்து மனதை ஒருநிலைப்படுத்துவீர்கள்.


மேஷம் ராசி பரிகாரம்  ( Pariharam - Mesham Rasi ):

மேலே கொடுக்கப்பட்டவை பொதுவான பலன்கள். ஆனால்  உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்துள்ள நிலை, மற்ற கிரகங்கள்  அவற்றைப் பார்க்கும் நிலை அதனால் உங்களுக்கு ஏற்படவிருக்கும் நன்மை அல்லது பாதிப்புகளை அறிந்துகொள்ள ஜோதிடரை தொடர்புகொள்ளுங்கள் 
கணித ஜோதிடர் சுப்பிரமணியம் M.A., Astro.,  Cell: 9894720277


2018 புத்தாண்டு பலன்கள் மேஷம், வருட பலன் 2018 மேஷ ராசி, தமிழ் இராசி பலன் மேஷம், ஜோசியம், 2018 ஆண்டு பலன் மேஷ ராசி, வார ராசி பலன் மேஷம், 2018 மாத ராசி பலன் மேஷ ராசி, தமிழ் புத்தாண்டு பலன்கள் மேஷ ராசி, ராசிபலன் 2018 மேஷம், Rasi palan 2018 Mesham Rasi, tamil puthandu rasi palan 2018 Mesham Rasi, Rasi Palan In Tamil Mesham, 2018 New Year Wishes Sms, Puthaandu Raasi Palangal 2018 mesha rasi, new year josiyam, mesha rasi palangal 2018.

Rasi Palan 2018 - Rishabam Rasi | ராசி பலன் 2018 - ரிஷபம் ராசி



Ø ராசி : ரிஷபம்
Ø நட்சத்திரம் : கார்த்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிருஷம்
Ø அதிஷ்ட கல் : வைரம்
Ø அதிஷ்ட வண்ணம் : வெள்ளை
Ø அதிஷ்ட எண் : 1, 4, 8
Ø அதிஷ்ட திசை : கிழக்கு

 2018 Rasi Palan Rishaba Rasi | 2018 ராசி பலன் ரிஷப ராசி

வெற்றி சிகரத்தை நோக்கி வீறுநடை போடும் ரிஷபராசி அன்பர்களே! 
உங்களின் ஆறாம் ராசியில் சஞ்சரிக்கும் ராகு பகவான் உங்களுக்கு மனப் பக்குவத்தையும் தருவார். எனவே அதிகம் கவலைப்படத் தேவையில்லை. புதிய முயற்சிகளில் இறங்கி அனுபவம் பெறுவீர்கள். சிரமம் பார்க்காமல் சாகசங்களில் ஈடுபடுவீர்கள். இந்த ஆண்டு சனி பகவான் உங்களின் ரணருண ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வருமானம் சீராக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்களை நடத்துவீர்கள். சிலர், குழந்தைகளை வெளி நாடுகளுக்கு அனுப்பிப் படிக்க வைப்பார்கள். உங்களின் முக்கியத் திட்டங்கள் நிறைவேறும் ஆண்டாக இது அமைகிறது. இதனால் உங்கள் ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தொழிலில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கி முன்னேற்றகரமான திருப்பங்கள் உண்டாகும். கடன்களைத் திருப்பி அடைத்து புதிய சேமிப்புகளிலும் ஈடுபடுவீர்கள். உடல் உபாதைகள் மறைந்து ஆரோக்யம் காண்பீர்கள். நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் மறையும்.

உத்யோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் உடனுக்குடன் பரிசீலிப்பார்கள். அலுவலகத்தில் அனுகூலமான சூழலைக் காண்பீர்கள். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். இடையூறுகளை ஒரு பொருட்டாகவே கருதமாட்டீர்கள். பண வரவில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் எந்தக் குறையும் ஏற்படாது. விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவீர்கள். உங்கள் வேலைத் திறன் பளிச்சிடும்.

வியாபாரிகளின் திட்டங்கள் அனைத்தும் நல்ல லாபத்தைக் கொடுக்கும். கொடுக்கல், வாங்கலில் சிறப்புகள் உண்டாகும். விற்பனைப் பிரதிநிதிகளைப் பல சந்தைகளுக்கும் அனுப்பி உங்கள் விற்பனைக் களத்தைப் பரவலாக்குவீர்கள். ஆயினும் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே விரிவாக்கம் செய்யவும். மற்றபடி திறமையுடன் நீங்கள் செய்து வரும் வியாபாரத்தால் உங்கள் கௌரவமும், அந்தஸ்தும் உயரும்.

விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருந்தாலும் கொள்முதல் விற்பனை சீராக இருக்காது. இடைத்தரகர்கள் உங்களின் லாபத்தில் பங்கு போடக் காத்திருப்பார்கள். சிலர் போட்டிகளையும், வயல் வரப்புச் சண்டைகளையும் சந்திக்க நேரிடும். மற்றபடி சிலருக்குப் பழைய கடன்கள் வசூலாகும். குத்தகை பாக்கிகளைத் திருப்பிச் செலுத்த வாய்ப்புகள் உருவாகும்.

அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். எதிரிகளால் கஷ்டங்கள் உண்டாகாது என்றாலும் அவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் சம்பந்தப்பட்டு மாட்டிக் கொள்ள வேண்டாம்.

கலைத்துறையினர் கடினமாக உழைத்தால்தான் துறையில் வெற்றி வாகை சூடலாம். மற்றபடி உங்கள் வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். உங்கள் திறமைகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதேசமயம் உங்களின் வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களில் மிகவும் கவனத்துடன் இருக்கவும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.

பெண்மணிகள் நன்கு யோசித்த பிறகே பிறரின் வார்த்தைகளை நம்புவீர்கள். கணவரிடமும் குடும்பத்தாரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். உங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றவும்.


மாணவமணிகள் கடினமாக உழைத்துப் படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். சிலருக்கு வெளியூர் சென்று கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும். மனக்குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். தீய நண்பர்களுடனான நட்பைத் துண்டிப்பீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு சாதனை செய்வீர்கள்.


ரிஷபம் ராசி பரிகாரம்  ( Pariharam - Rishabam Rasi ):

மேலே கொடுக்கப்பட்டவை பொதுவான பலன்கள். ஆனால்  உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்துள்ள நிலை, மற்ற கிரகங்கள்  அவற்றைப் பார்க்கும் நிலை அதனால் உங்களுக்கு ஏற்படவிருக்கும் நன்மை அல்லது பாதிப்புகளை அறிந்துகொள்ள ஜோதிடரை தொடர்புகொள்ளுங்கள்

ணித ஜோதிடர் சுப்பிரமணியம் M.A., Astro.,  Cell: 9894720277

2018 புத்தாண்டு பலன்கள் ரிஷபம், வருட பலன் 2018 ரிஷப ராசி, தமிழ் இராசி பலன் ரிஷபம், ஜோசியம், 2018 ஆண்டு பலன் ரிஷப ராசி, வார ராசி பலன் ரிஷபம், 2018 மாத ராசி பலன் ரிஷப ராசி, தமிழ் புத்தாண்டு பலன்கள் ரிஷப ராசி, ராசிபலன் 2018 ரிஷபம், Rasi palan 2018 Rishabam Rasi, tamil puthandu rasi palan 2018 Rishabam Rasi, Rasi Palan In Tamil Rishabam, 2018 New Year Wishes Sms, Puthaandu Raasi Palangal 2018 Rishaba rasi, new year josiyam, Rishaba rasi palangal 2018.

Rasi Palan 2018 - Dhanusu Rasi | ராசி பலன் 2018 - தனுசு ராசி






  • ராசி : தனுசு
  • நட்சத்திரம் : மூலம், பூராடம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
  • அதிஷ்ட கல் : கனக புஷ்பராகம்
  • அதிஷ்ட வண்ணம் : மஞ்சள்
  • அதிஷ்ட எண் : 1, 8, 9
  • அதிஷ்ட திசை  : வடக்கு

2018 Rasi Palan Dhanusu Rasi | 2018 ராசி பலன்  தனுசு ராசி

பெரியவர்களை மதிப்புடன் நடத்தும் தனுசு ராசி அன்பர்களே! 
மாணவமணிகள், படிப்பில் சிறப்பான கவனம் செலுத்துவீர்கள். பாடங்களை முன்னதாகவே படித்து முடித்து, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்; எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவீர்கள். விளையாட்டுகளில் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். பெற்றோர்கள் உங்களுக்குப் பக்க பலமாக இருப்பதால் முயற்சிகளைத் தீவிரப்படுத்தலாம்.

செய்தொழிலில் தினமும் வருமானம் வந்துகொண்டே இருக்கும். இந்த ராசி வாசகர்களில் சிலருக்குப் புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். இந்த ஆண்டு பிற்பாதி உங்கள் லாபஸ்தான ராசியைப் பார்க்கிறார் குரு பகவான். இவர், உங்கள் உழைப்புக்கு மேல் இரு மடங்கு வருமானத்தைத் தருவார்; மற்றவர்களைத் தலைமை தாங்கி வழி நடத்திச் செல்லும் அளவிற்கு உயர்வீர்கள். கல்வி, கேள்விகளில் அரிய சாதனைகள் புரிய வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். செல்வத்தோடு செல்வாக்கும் உயரும். எதிர்பாராத இடங்களிலிருந்து தக்க உதவிகளைப் பெறுவீர்கள். உங்களின் தன்னம்பிக்கை உயரும். பேச்சில் வசீகரமும், நடையில் கம்பீரமும் ஏற்படும். தத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபட மனம் விழையும். உங்களின் செயல்களை முறைப்படுத்திச் செய்வீர்கள்.



உத்யோகஸ்தர்கள், அனைத்து வேலைகளையும் குறித்த காலத்திற்குள் முடித்து, மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கு உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்வீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். சக ஊழியர்களுக்கும் உதவி செய்வீர்கள். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள். கூட்டாளிகளை அரவணைத்துச் சென்று காரியங்களைச் செய்யவும். புதிய சந்தைகளை நாடிச் செல்லும்போது கவனமாக இருக்கவும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும்.



விவசாயிகளுக்கு மகசூல் அதிகரித்து லாபம் பெருகும். கால்நடைகளால் நல்ல வருமானம் கிடைக்கும். எனவே புதிய கால்நடைகளை வாங்குவீர்கள். புதிய முயற்சிகளிலும் ஈடுபடுவீர்கள். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். வழக்குகள் நிலுவையிலிருந்தால் அவை முடிவதில் தாமதம் ஏற்படும்.

அரசியல்வாதிகளைத் தேடிப் புதிய பதவிகள் வரும். செய்கின்ற காரியங்களில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். பொதுநலனோடு இயைந்த சமுதாய நலன் சார்ந்த எண்ணங்களைச் செயல்படுத்த இது உகந்த ஆண்டாக அமைகிறது. தொண்டர்களை அரவணைத்துச் சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். மறைமுக எதிர்ப்புகள் அகலும்.

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்குத் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனாலும் உங்கள் சுய கௌரவத்துக்குப் பங்கம் ஏற்படாது. சக கலைஞர்களின் உதவியால் உங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். 

பெண்மணிகள், குடும்பத்தில் அனுகூலமான சூழ்நிலையைக் காண்பீர்கள். உங்கள் உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்கள் பாசத்தோடு பழகுவார்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். பெரியோரின் ஆலோசனைப்படி நடந்துகொண்டு, குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டாலும் தப்பித்துக்கொள்வீர்கள்.


தனுசு ராசி பரிகாரம்  ( Pariharam - Dhanusu Rasi ):



மேலே கொடுக்கப்பட்டவை பொதுவான பலன்கள். ஆனால்  உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்துள்ள நிலை, மற்ற கிரகங்கள்  அவற்றைப் பார்க்கும் நிலை அதனால் உங்களுக்கு ஏற்படவிருக்கும் நன்மை அல்லது பாதிப்புகளை அறிந்துகொள்ள ஜோதிடரை தொடர்புகொள்ளுங்கள்


கணித ஜோதிடர் சுப்பிரமணியம் M.A., Astro.,  Cell: 9894720277

Rasi palan 2017 in tamil language, tamil rasi palan 2017 in tamil language, tamil puthandu rasi palan 2017 in tamil language, tamil puthandu rasi palan, Rasi Palan In Tamil, Tamil New Year 2017 Puthandu Wishes Sms, Varusha Pirappu Rasi Palan , Tamil Calendar 2017, 2017 Puthandu Palan, 2017 Rasi Palan, Puthaandu Raasi Palangal 2017, new year josiyam, 2017 palangal, 2017 Puthandu Palan, 2017 rasi palan, rasi palan 2017, Tamil Panchangam 2017, Nalla neram, Tamil Daily Calendar 2017, suba muhurtham dates 2017 in tamil, Male female characteristics, Thirumana Porutham, Natchathira Porutham tamil, marriage matching astrology, Mesham Rasi Palan 2017, Rishabam Rasi Palan 2017, Midhunam Rasi Palan 2017, Kadagam Rasi Palan 2017, Simmam Rasi Palan 2017, Kanni Rasi Palan 2017, Male female characteristics, Thulaam Rasi Palan 2017, Viruchigam Rasi Palan 2017, Dhanusu Rasi Palan 2017, Magaram Rasi Palan 2017, Kumbam Rasi Palan 2017, Meenam Rasi Palan 2017, subha muhurtham days in 2017 for marriage, Free 2017 Tamil Rasi Palan, Online Free 2017 Tamil Rasi Palan, Download 2017 Tamil Rasi Palan, Raasi Palan Raasi Palan, Raasi Palan Raasi, Puthandu palangal 2017, 2017 Puthandu Palan, 2017 Rasi Palan, Puthaandu Raasi Palangal 2017, Weekly horoscope, 2017 Weekly Rasi Palan, Monthly horoscope, 2017 Monthly Rasi Palan, Nalla natkkal, Subamuhurtha Natkkal, good days, tamil subamuhurtha days, Information, Josiyam, 2017 Subamuhurtham days, engagement days 2017, Astrology, Horoscope, suba muhurtham, Tamil Muhurtham Dates 2017, Wedding Dates, Tamil Wedding Dates 2017, kalyana muhurtham dates 2017, 2017 government holidays in tamilnadu, rasi natchathiram palan, Male female characteristics, nakshatra palan 2017 Aswini, Bharani, Karthigai, Rohini, nakshatra palan 2017 Mrigasheersham, Thiruvaathirai, Punarpoosam, Poosam, Male female characteristics nakshatra palan 2017 Aayilyam, Makam, Pooram, Uthiram, Hastham, Chithirai, Swaathi, nakshatra palan 2017 Visaakam, Anusham, Kettai, Moolam, Pooraadam, Uthiraadam, nakshatra palan 2017 Thiruvonam, Avittam, Chathayam/Sadayam, Poorattathi, Uthirattathi, Revathi nakshatra palan, Male female characteristics in tamil.

Rasi Palan 2018 - Meenam Rasi | ராசி பலன் 2018 - மீனம் ராசி



Ø  ராசி : மீனம்
Ø  நட்சத்திரம் : பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல்,  உத்திரட்டாதி, ரேவதி முடிய
Ø  அதிஷ்ட கல் : மரகதம்
Ø  அதிஷ்ட வண்ணம் : வெள்ளை
Ø  அதிஷ்ட எண் : 2, 8, 9
Ø  அதிஷ்ட திசை : North - East

மீன ராசி பலன் 2018 | 2018 Rasipalan Meena Rasi;

பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். பிள்ளைகள் நல்ல வழிக்கு திரும்புவார்கள். மகளின் திருமணத்தை வெகுவிமர்சையாக நடத்தி முடிப்பீ£க்ள். மகனுக்கு அதிக சம்பளத்துடன் புது வேலைக் கிடைக்கும். நல்ல வாழ்க்கை துணையும் அமையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். 

தோல்விமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். பணவரவு அதிகரிக்கும் என்றாலும் செலவுகளும் இருக்கும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வருடப் பிறப்பின் போது உங்கள் ராசிநாதன் செவ்வாய் பலம் பெற்று அமர்ந்திருப்பதால் மனப்போராட்டங்கள் குறையும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். உங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திர பதிவு செய்வீர்கள். உடன்பிறந்தவர்களால் உதவிகள் உண்டு. அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். தள்ளிப் போன வழக்கில் தீர்ப்பு சாதகமாகும்.

எண்ணங்களுக்குத் தகுந்த செயல் வடிவம் கொடுப்பீர்கள். எதிரிகளால் தொல்லைகள் ஏற்படாது. உடல் உபாதைகள் ஏதேனும் இருப்பின், இக்கால கட்டத்தில் தீரும். வீண் வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். அலைச்சல்களுடன் நடந்த செயல்கள் நல்லபடியாக முடிவடையும். வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் கை வந்து சேரும். சென்ற இடத்திலெல்லாம் பிரச்சினையை சந்தித்தவர்கள்கூட இந்தக் காலகட்டத்தில் விரும்பி வரவேற்கப்படுவார்கள். சிலர் மனம் விரும்பிய வீட்டிற்குக் குடி பெயர்வார்கள். தக்க சமயத்தில் உயர்ந்தவர்களின் நட்பைப் பெற்று கௌரவக் குறைவு ஏற்படாமல் காக்கப்படுவீர்கள். களவு போயிருந்த பொருட்கள் திரும்பவும் கிடைக்கும். உறுதியின்றிச் செய்த வேலைகளில் ஒரு பிடிப்பு ஏற்பட்டு அவை மளமளவென்று நடந்தேறும்.

உத்யோகஸ்தர்களுக்கு,
பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீராக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்குமென்றாலும் அவர்களிடம், மரியாதைக்குரிய தொலைவில் இருந்து பழகுவது நல்லது. சக ஊழியர்களுடன் நல்ல நட்பு தொடர்வதால் உங்களின் வேலைகள் குறித்த காலத்திற்குள் நிறைவேறிவிடும். உங்களின் வேலைத் திறனைக் கூட்டிக்கொள்ள புதிய அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

வியாபாரிகள்,
போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள். புதிய வாடிக்கையாளர்களையும், புதிய சந்தைகளையும் நாடிச் செல்வீர்கள். இந்த ஆண்டு முழுவதும் கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் சிரமங்கள் உண்டாகாது. விவசாயிகளுக்கு நீர்வரத்து நன்றாக இருக்கும். எனவே குறித்த காலத்தில் விதைத்து அறுவடை லாபத்தை அள்ளுங்கள். விளை பொருட்களின் விற்பனை மிகவும் நன்றாகவே இருக்கும். அதேசமயம் கால்நடைகளால் பலன்கள் உண்டாகாது.

அரசியல்வாதிகள், 
தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் கெüரவம் உயரும். சமுதாயத்தில் அந்தஸ்து உண்டாகும். உங்களின் முயற்சிகள் உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.

கலைத்துறையினர்,
படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர்களுக்காகச் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

பெண்மணிகளுக்கு, 
குடும்பத்தில் அமைதி நிலவும். வெளியூர் மற்றும் வெளிநாட்டிலிருந்து இன்பகரமான செய்திகள் வந்து சேரும். கணவரிடம் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். கணவரின் உறவினர்களோடு வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

மாணவமணிகள்,
படிப்பில் வெற்றி வாகை சூடுவீர்கள். உங்கள் ஞாபக சக்தியும், அறிவாற்றலும் பெருகும். அதேநேரம் விளையாடும் நேரங்களில் கவனமாக இருக்கவும். பெற்றோர்களின் ஆதரவுடன் உங்களின் எதிர்காலக் கல்வித் திட்டங்களைச் செவ்வனே நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

மீனம் ராசி பரிகாரம்: Pariharam - Meenam Rasi ):

  மேலே கொடுக்கப்பட்டவை பொதுவான பலன்கள். ஆனால் உங்களுக்கென்று  ஒரு ஜாதகம் உள்ளது.  உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்துள்ள நிலை, மற்ற கிரகங்களால் அவற்றைப் பார்க்கும் நிலை அதனால் உங்களுக்கு ஏற்படவிருக்கும் நன்மை அல்லது பாதிப்புகளை அறிந்துகொள்ள... தொடர்புகொள்ளுங்கள் 

கணித ஜோதிடர் சுப்பிரமணியம் M.A., Astro., Cell: 9894720277

2018 புத்தாண்டு பலன்கள் மீனம், வருட பலன் 2018 மீன ராசி, தமிழ் இராசி பலன் மீனம், ஜோசியம், 2018 ஆண்டு பலன் மீன ராசி, வார ராசி பலன் மீனம், 2018 மாத ராசி பலன் மீன ராசி, தமிழ் புத்தாண்டு பலன்கள் மீன ராசி, ராசிபலன் 2018 மீனம், Rasi palan 2018 Meenam Rasi, tamil puthandu rasi palan 2018 Meenam Rasi, Rasi Palan In Tamil Meenam, 2018 New Year Wishes Sms, Puthaandu Raasi Palangal 2018 Meena rasi, new year josiyam, Meena rasi palangal 2018.

Rasi Palan 2018 - Magaram Rasi | ராசி பலன் 2018 - மகரம் ராசி






Ø  ராசி : மகரம்
Ø நட்சத்திரம் : உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம்,     அவிட்டம் 2-ஆம் பாதம் முடி
Ø  அதிஷ்ட கல் : நீலக்கல்
Ø  அதிஷ்ட வண்ணம் : நீலம்
Ø  அதிஷ்ட எண் : 5, 6, 8
Ø  அதிஷ்ட திசை : மேற்கு

2018 ராசி பலன் - மகர ராசி (2018 Rasi Palan Magara Rasi)


தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு ஒளிவுமறைவின்றி கற்றுத்தரும் மகர ராசி அன்பர்களே! 
உங்கள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். அனைத்து விஷயங்களையும் நல்ல கண்ணோட்டத்துடன் காண்பீர்கள். பங்கு வர்த்தகத்தில் லாபம் குவியும். அந்த லாபத்தை எதிர்காலத்திற்காகச் சேமிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வீர்கள். தந்தை வழியில் சில அனுகூலங்களைக் காண்பீர்கள். உங்களை எதிர்த்தவர்கள் அடங்குவார்கள்.

ஆண்டின் பிற்பாதிக்குப் பிறகு உங்களின் தொழில் ஸ்தானத்தைப் பார்க்கிறார் குரு பகவான். இதனால் தொழிலில் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு உண்டாகும். மனதில் அமைதி நிலவும். நிம்மதியாக உறங்குவீர்கள். உடல் உபாதைகள் முழுமையாகத் தீர்ந்துவிடும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து சேரும். ஆன்மீகச் சிந்தனையுடன் வாழ்க்கையை நடத்துவீர்கள்.


உத்யோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி உயர்வு கிடைக்கும். இதனால் ஊதியம் உயரும். மேலதிகாரிகள் உங்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உடலில் இருந்த சோர்வும், மனதிலிருந்த குழப்பமும் மறையும். இதனால் உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். சக ஊழியர்கள் உங்களிடம் பகை மறந்து நட்பு பாராட்டுவார்கள். அலுவலகத்தில் சிறப்பான பயிற்சிகளைக் கற்றறிந்து வெற்றியடைவீர்கள்.


வியாபாரிகள், போட்டியாளர்களின் தடைக்கற்களைக் கடக்க சற்று போராட வேண்டியிருக்கும். கூட்டாளிகளை நம்பாமல் நீங்களே முன்னின்று செயல்பட்டால் வியாபாரத்தில் ஏற்படும் குளறுபடிகளைத் தவிர்க்கலாம். பண விஷயத்திலும் உஷாராக இருக்கவும். மற்றபடி சுகத்தை மறந்து கடினமாக உழைப்பீர்கள்.


விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். வங்கிகளிடமிருந்து கடன் கிடைக்கும். நீர் வரத்து நன்றாக இருப்பதால் விவசாயத்தில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். புதிய குத்தகைகளில் லாபம் கொட்டும். கழனிகளை வாங்கி மகிழ்வீர்கள். சேமிப்பு உயரும். பால் வியாபாரத்தாலும், கால்நடைகளாலும் நன்மை உண்டாகும். நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள், உங்களுக்குச் சாதகமாக முடியும்.


அரசியல்வாதிகள், கட்சியின் மேலிடத்தில், கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள். அதேசமயம் தொண்டர்கள் உங்களிடம் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள். அதனால் கோபப்படாமல் விவேகத்துடன் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டு, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மனங்களை வெல்லவும். மற்றபடி சமுதாயத்திற்குப் பயன்படும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிரிகளின் ரகசியத் திட்டங்களை அம்பலப்படுத்திப் புகழடைவீர்கள்.


கலைத்துறையினருக்கு அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.


பெண்மணிகள், குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். அனைவரையும் அனுசரித்துச் செல்லவும். நன்கு யோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுக்கவும். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து சேமிப்புகளில் கவனம் செலுத்தவும். கடுமையான சொற்களை உதிர்க்காமல் நிதானமாகப் பேசவும்.


மாணவமணிகள், படிப்பில் ஏற்படும் இடையூறுகளைச் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். தெளிவான மனதுடன் படித்து நல்ல மதிப்பெண்களை அள்ளுவீர்கள். நண்பர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அதேசமயம் விளையாட்டுகளில் எதிர்பார்த்த வெற்றிகளைப் பெற முடியாமல் போகும்.




மகர ராசி பரிகாரம்  ( Pariharam - Magara Rasi ):



மேலே கொடுக்கப்பட்டவை பொதுவான பலன்கள். ஆனால்  உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்துள்ள நிலை, மற்ற கிரகங்கள்  அவற்றைப் பார்க்கும் நிலை அதனால் உங்களுக்கு ஏற்படவிருக்கும் நன்மை அல்லது பாதிப்புகளை அறிந்துகொள்ள ஜோதிடரை தொடர்புகொள்ளுங்கள்

கணித ஜோதிடர் சுப்பிரமணியம் M.A., Astro.,  Cell: 9894720277
2018 புத்தாண்டு பலன்கள் மகரம், வருட பலன் 2018 மகரம் ராசி, தமிழ் இராசி பலன் மகரம், ஜோசியம், 2018 ஆண்டு பலன் மகரம் ராசி, வார ராசி பலன் மகரம், 2018 மாத ராசி பலன் மகரம் ராசி, தமிழ் புத்தாண்டு பலன்கள் மகரம் ராசி, ராசிபலன் 2018 மகரம், Rasi palan 2018 Magaram Rasi, tamil puthandu rasi palan 2018 Magaram Rasi, Rasi Palan In Tamil Magaram, 2018 New Year Wishes Sms, Puthaandu Raasi Palangal 2018 Magaram rasi, new year josiyam, Magaram rasi palangal 2018.


Rasi Palan 2018 Kadagam Rasi | ராசி பலன் 2018 கடகம் ராசி




Ø ராசி : கடகம்
Ø நட்சத்திரம்: புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்   முடிய
Ø அதிஷ்ட கல்: முத்து
Ø அதிஷ்ட வண்ணம்: இளஞ்சிவப்பு
Ø அதிஷ்ட எண்: 1, 3, 9
Ø அதிஷ்ட திசை: தென்கிழக்கு




2018 Rasi Palan Kadaga Rasi | 2018 ராசி பலன் கடக ராசி :

விடாமுயற்சியுடன் செயலாற்றி வெற்றி காணும் கடக ராசி அன்பர்களே! 



ஒரு விஷயத்தில் கவனம் தேவை! உங்களின் நெருங்கிய நண்பர்களே உங்களை ஏமாற்ற முயற்சிக்கலாம். இதனால் மனதில் குழப்பங்கள் சூழும். இதை முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்களின் கருத்துக்களை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அவற்றை எச்சரிக்கை உணர்வுடன் வெளிப்படுத்துங்கள். மற்றபடி கடினமான வேலைகளையும் சுலபமாகச் செய்து முடிப்பீர்கள். வருமானம் சீராக இருப்பதால் கடன்கள் ஏற்படாது. செய்தொழிலில் ஏற்படும் போட்டிகளை சாதுர்யத்துடன் எதிர் கொள்வீர்கள். தெய்வ வழிபாட்டில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். பணப் புழக்கம் நன்றாக இருக்கும். என்றாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும். அதனால் அனாவசிய செலவுகளைத் தவிர்த்து, முக்கியமான செலவுகளை மட்டுமே செய்யவும்.

குரு பகவானின் கனிந்த பார்வை கிடைக்கப்பெறும் தைரியவீர்ய ஸ்தானத்தால் உங்களின் நடை, உடை, பாவனைகளில் அழகை உண்டாக்குவார். சிலருக்கு நூதன வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பாராத பயணங்களால் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உத்யோகஸ்தர்கள் கடுமையாக உழைத்தாலும் அதில் மேலதிகாரிகள் குற்றம் காண வாய்ப்புண்டு. அதேசமயம் சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக நிற்பார்கள். இதனால் சமாளித்துவிடுவீர்கள். சிலருக்கு அலுவலக ரீதியாக வெளியூரில் சில காலம் தங்கிப் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். அலுவலகத்திலிருந்து கடன் கிடைத்து வாகனம் வாங்கும் யோகமும் பலருக்கு அமையும்.

வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் எந்தக் குறையும் ஏற்படாது. ஆனாலும் எதிலும் கவனமாக இருக்கவும். புதிய முதலீடுகளைக் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே செய்யவும். தேவைக்கேற்ற சரக்குகளை மட்டுமே வாங்கி விற்கவும். அதேசமயம் சந்தைகளில் போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயித்து லாபமடைய நிறையவே வாய்ப்புகள் உள்ளன.

விவசாயிகள் நல்ல விளைச்சலைக் காண்பீர்கள். புதிய குத்தகைகளை நாடிச் செல்வீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். வங்கிக் கடன்களும் கிடைக்கும். அதேநேரம் கால்நடைகளுக்கு சற்று கூடுதலாக செலவு செய்ய நேரிடும். மற்றபடி புழு, பூச்சிகளால் பயிர்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படாது. நீராதாரங்களையும் பெருக்கிக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து, உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அரசு அதிகாரிகளும் உங்கள் நேர்மையான ஆலோசனைகளை மதித்து நடப்பார்கள். அவர்களால் உங்களின் செல்வாக்கு தொண்டர்களிடம் உயர்ந்து காணப்படும். உங்களின் மறைமுக எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். அதேசமயம் கட்சியில் முக்கியப் பிரமுகர் யாரிடமாவது மனக்கசப்பு ஏற்படலாம். அதனால் பிறருடன் பேசும்போது ஒரு முறைக்கு இரு முறை யோசித்துப் பேசவும்.

கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும். சக கலைஞர்கள் நட்புடன் பழகுவார்கள். அவர்களால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர் மன்றங்களுக்குச் செலவு செய்து மகிழ்வீர்கள். அதேநேரம் சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் உங்கள் காரியங்களைச் செய்யவும்.

பெண்மணிகள் இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். கணவரிடம் பாசத்தோடு பழகுவீர்கள். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். தேவையற்ற கவலைகள் சிலருக்குத் தோன்றலாம். மனதைக் கட்டுப்படுத்த யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றை செய்தால், கவலைகள் தேவையற்றவை என்பது தன்னால் புரியும்.



மாணவமணிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டு புத்துணர்ச்சியுடன் பாடங்களைப் படிக்கவும். உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துத் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் நீங்களாகவே இருக்கப் பழகி உங்களின் முன்னேற்றத்திற்கு அடி கோலுங்கள். “உங்களை நீங்கள்தான் உயர்த்திக் கொள்ள வேண்டும்” என்கிற கீதை வாக்கியத்தை மறவாமல் நடைபோடுங்கள்.


கடகம் ராசி பரிகாரம்  ( Pariharam - Kadaga Rasi ):


மேலே கொடுக்கப்பட்டவை பொதுவான பலன்கள். ஆனால்  உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்துள்ள நிலை, மற்ற கிரகங்கள்  அவற்றைப் பார்க்கும் நிலை அதனால் உங்களுக்கு ஏற்படவிருக்கும் நன்மை அல்லது பாதிப்புகளை அறிந்துகொள்ள ஜோதிடரை தொடர்புகொள்ளுங்கள்


கணித ஜோதிடர் சுப்பிரமணியம் M.A., Astro.,  Cell: 9894720277


R2018 புத்தாண்டு பலன்கள் கடகம், வருட பலன் 2018 கடக ராசி, தமிழ் இராசி பலன் கடகம், ஜோசியம், 2018 ஆண்டு பலன் கடக ராசி, வார ராசி பலன் கடகம், 2018 மாத ராசி பலன் கடக ராசி, தமிழ் புத்தாண்டு பலன்கள் கடக ராசி, ராசிபலன் 2018 கடகம், Rasi palan 2018 Kadagam Rasi, tamil puthandu rasi palan 2018 Kadagam Rasi, Rasi Palan In Tamil Kadagam, 2018 New Year Wishes Sms, Puthaandu Raasi Palangal 2018 Kadaga rasi, new year josiyam, Kadaga rasi palangal 2018.

Rasi Palan 2018 Viruchigam Rasi | ராசி பலன் 2018 விருச்சிகம் ராசி






Ø ராசி : விருச்சிகம்
எதிலும் போராடி வெற்றி காணும் விருச்சிகராசி அன்பர்களே! 
குடும்பத்தில் மருத்துவச்செலவுகள் குறையும். தாயார் வழியில் இருந்துவந்த மன ஸ்தாபங்கள் மறைந்து சுமுகமான உறவு உண்டாகும். குடும்பத்திலும், உற்றார் உறவினர்களிடமும் உங்கள் செல்வாக்கு உயரும். உங்கள் செயல்களைப் புதிய உத்வேகத்துடன் செய்து முடிக்க வழி பிறக்கும். திட்டங்களைச் சரியாகத் தீட்டி அவைகளைப் படிப்படியாக, வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள். புதிய தொழில்களைத் தொடங்குவீர்கள். உங்கள் நண்பர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்.

Ø நட்சத்திரம் : விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய
Ø அதிஷ்ட கல் : பவளம்
Ø அதிஷ்ட வண்ணம் : வெளிர் மஞ்சள்
Ø அதிஷ்ட எண் : 1, 2, 3
Ø அதிஷ்ட திசை : தெற்கு

2018 Rasi Palan Viruchiga Rasi | 2018 ராசி பலன் விருச்சிக ராசி


பெரியோர்களின் ஆதரவு எப்போதுமிருக்கும். ஓய்வு நேரத்தில் கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழவும் சந்தர்ப்பங்கள் அமையும். எனினும் ஏழரை நாட்டு சனி பகவான் சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கு சேவை செய்து புண்ணியம் ஈட்டும் வாய்ப்பையே வழங்குவார். இதனால் தன்னலம் பார்க்காமல் உழைத்துப் புகழடைவீர்கள். உங்கள் உடலுழைப்புக்கு மேல் பன்மடங்கு லாபம் கிடைக்கும். கல்வி, கேள்விகளிலும் சிறந்து விளங்குவீர்கள்.

உத்யோகஸ்தர்கள் பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். சிலர், விரும்பிய வெளியூருக்கு மாற்றலாகிச் செல்வார்கள். மேலதிகாரிகள் சற்று பாராமுகமாகவே நடந்து கொண்டாலும் தொல்லைகள் கொடுக்க மாட்டார்கள்; ஆனால் சக ஊழியர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். உரிய நேரத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் உங்கள் வேலைகளைத் திட்டமிட்டு சரியாகச் செய்வது அவசியம்.

வியாபாரிகளுக்கு தொழிலில் இருந்த போட்டிகள் குறையும். லாபம் அதிகரிக்கும். நண்பர்களையும், வாடிக்கையாளர்களையும் அரவணைத்துச் சென்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த தொய்வுகள் நீங்கி, மனதில் உற்சாகம் தோன்றும். அதேநேரம் வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் உங்கள் கை வந்து சேருவதில் தாமதம் ஏற்படும் என்பதால் புதிதாக யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.

விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். விவசாய உபகரணங்களுக்குச் சற்று கூடுதலாகச் செலவு செய்ய நேரிடலாம். புதிய நிலங்கள் குத்தகைக்கு வந்து சேரும். அறுவடை விஷயங்களில் ஆழ்ந்து திட்டம் தீட்டி, நற்பயன் பெறுவீர்கள். உங்கள் “விலை நிர்ணயம்’ துல்லியமாக அமையும். அரசியல்வாதிகளின் பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் உற்சாகப்படுத்தப்படுவீர்கள். கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்யம் நன்றாக இருக்கும். அடிக்கடி பயணங்களைச் செய்து, கட்சிப் பணிகளைத் தீவிரமாக ஆற்றி ஆதாயம் பார்ப்பீர்கள்.

கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் பெயரும், புகழும் உயரும். ரசிகர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்பட நிறையவே வாய்ப்புண்டு. ஆனால் அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ரசிகர் மன்றங்களுக்குப் பணம் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.

பெண்மணிகள் கணவரின் பாராட்டுகளை எளிதில் அடைவீர்கள். புதிதாக ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். இல்லத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். உடல் நலத்தில் மட்டும் சற்று கவனமாகவே இருக்கவும்.

மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களை வாங்க வழி வகையுண்டு. பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். அவர்களால் உங்கள் எதிர்காலத் திட்டங்கள் எளிதில் நிறைவேறும். சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். அவர்களிடம் அனாவசிய சண்டை சச்சரவுகளைத் தவிர்க்கவும். மற்றபடி உங்கள் உடல் நலம் நன்றாக இருக்கும். தினமும் உடற்பயிற்சிகளைச் செய்தால் மேலும் உடல் வலிமை பெறலாம்.


விருச்சிகம் ராசி பரிகாரம்: ( Pariharam - Viruchigam Rasi ):

மேலே கொடுக்கப்பட்டவை பொதுவான பலன்கள். ஆனால்  உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்துள்ள நிலை, மற்ற கிரகங்கள்  அவற்றைப் பார்க்கும் நிலை அதனால் உங்களுக்கு ஏற்படவிருக்கும் நன்மை அல்லது பாதிப்புகளை அறிந்துகொள்ள ஜோதிடரை தொடர்புகொள்ளுங்கள்

கணித ஜோதிடர் சுப்பிரமணியம் M.A., Astro.,  Cell: 9894720277


2018 புத்தாண்டு பலன்கள் விருச்சிகம், வருட பலன் 2018 விருச்சிகம் ராசி, தமிழ் இராசி பலன் விருச்சிகம், ஜோசியம், 2018 ஆண்டு பலன் விருச்சிகம் ராசி, வார ராசி பலன் விருச்சிகம், 2018 மாத ராசி பலன் விருச்சிகம் ராசி, தமிழ் புத்தாண்டு பலன்கள் விருச்சிகம் ராசி, ராசிபலன் 2018 விருச்சிகம், Rasi palan 2018 Viruchigam Rasi, tamil puthandu rasi palan 2018 Viruchigam Rasi, Rasi Palan In Tamil Viruchigam, 2018 New Year Wishes Sms, Puthaandu Raasi Palangal 2018 Viruchiga rasi, new year josiyam, Viruchiga rasi palangal 2018.
AstrologyPalan, Jathagam, jathagapalan, birthdayhoroscope, Josiyam, stars, gurutransit, rahuketu, sanipeyarchi, tamilnewyearrasipalan, Josiayam, subhamuhurtamdates, dailyhoroscope, horoscopetoday, numerology, horoscope, horoscopestars, freehoroscopeonline, horoscopereading, astrologyhoroscope, mobilehoroscope, freeyearlyhoroscope, yearlyhoroscopes, joshiyam, rahuketutransit, rahuketupeyarchi, transitastrology, saturntransit, jupitertransit, subhamuhurthadays, subhamuhurtham, subhamuhurthamdates, jathagakanippu, horoscopematching, raasi, rashinakshatra, raasiporutham, rasipalan, kalyanaporutham, vastu, vaastu, vastutips, vaastuforhome, vastuhouse, vaastushastra, mesham, rishabam, mithunam, kadagam, simmam, kanni, thulaam, viruchigam, dhanusu, magaram, kumbam, meenam, Horoscopematch, MatchMaking, RasiMatch, MatchPalan, AstrologyResearch, VirtualPooja, Palmistry, monthlyhoroscopes, AstrologyRasipalan, dailyastrology, weeklyhoroscopes, loveastrology, birthastrology, astrology, horoscopes, aries, taurus, gemini, cancer, leo, virgo, libra, scorpio, sagittarius, capricorn, aquarius, pisces, Freedailyhoroscopes, astrological, astrologicalsigns, astrologer, astrologicalsign, tarot, DailyHoroscopes, YearlyHoroscope, monthlyhoroscope, weeklyhoroscope, palan, jathaga, birthday, guru, transit, rahu, ketu, sani, peyarchi, Josiyar, daily, today, weekly, online, reading, mobile, saturn, subha, muhurtham, days,dates, kanippu, matching, rashi, nakshatra, porutham, rasi, kalyana, Jathaka, Match, Making, monthly, birth.