திருப்பதி வெங்கடாசலபதி கோயில்
திருப்பதி வெங்கடாசலபதி கோயில் இந்தியாவிலேயே அதிக வருமானம் உள்ள கோவில். முடி காணிக்கை மூலம் மட்டுமே பல கோடிகளை சம்பாதிக்கும் தலம். இங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலகப் புகழ் பெற்றதாகும். இந்த பிரசாதமானது திருப்பதி திருமலை தேவஸ்தானத்தினரைத் தவிர வேறெவரும் தயாரித்து விற்கக்கூடாது என்பதற்கான புவிசார் குறியீடு காப்புரிமையை பெற்றதாகும். இந்த லட்டுக்கள் சர்க்கரை, கடலைப்பருப்பு, நெய், முந்திரி பருப்பு, உலர் திராட்சை, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, ஏலக்காய் போன்ற பொருட்களால் பிரத்தியேகமான ஒரு முறையில் தயாரிக்கப்படுகிறது. 1931 ஆம் ஆண்டு திருப்பதியில் லட்டுப் பிரசாதத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் கல்யாணம் ஐயங்கார் எனும் பெரியவர். புரட்டாசி சனி விரதம் இந்தப்பெருமாளை முன்னிட்டே அனுஷ்டிக்கப்படுகிறது. இந்தியாவில் மிக அதிகமான மக்கள் இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். புரட்டாசி பிரமோற்ஸவத்தின் ஐந்தாம் திருநாளில் கருட சேவை நடக்கும். அன்று சுவாமி பவனியின் போது மூலவரே வெளியில் வருவதாக ஐதீகம். இதன் காரணமாக ஒரு காலத்தில் சுவாமி பவனி முடியும் வரை கோயில் நடை அடைக்கப்பட்டது. தற்போது கூட்டம் அதிகமாக இருப்பதால், பெயரளவுக்கு ஐந்து நிமிடங்கள் மட்டும் நடை அடைக்கப்படுகிறது. இந்த விழாவின் போது ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடுகிறார்கள்.பொதுவாக பெருமாளை பசுக்களை மேய்க்கும் கோலத்தில் தான் பார்த்திருப்பீர்கள். ஆனால் திருப்பதியில் உற்சவப் பெருமாள் மட்டுமே "ஆடு மேய்க்கும்' கோலத்தில் காட்சியளிப்பார். இந்த காட்சியை ஊஞ்சல் உற்சவத்தின் போது தரிசிக்கலாம்.
Online Booking Tirumala Tirupati VIP Darshan Ticket Timings Process Break Darshan tickets online booking Tirumala Break Darshan procedure Tirumala Break Darshan procedure and Timings Tirumala Tirupati VIP Break Darshan Tickets and information Tirumala Temple tirupati temple vip pass Special Entry Darshan Hotels near Sri Balaji Temple Tirupati Tirupati Cheap Hotels Luxury 5 star Tirupati Hotels மலையப்பசாமி கல்யாண வெங்கடேஸ்வரர் கருடாத்ரி வ்ருஷபாத்ரி அஞ்னாத்ரி வேங்கடாத்ரி சுவாமி புஷ்கரிணி குலசேகராழ்வார் ஆனந்த விமானம் மங்களாசாசனம் திவ்யதேசம் சோழர்108 cholar malayapasami kalyana venkateswarar karudathri virushapathri anjnathri venkadathri swamy pushkarini kulasekaralwar anantha vimanam mangalasasanam dhivya desa Online Booking Tirumala Tirupati VIP Darshan Ticket Timings Process Break Darshan tickets online booking Tirumala Break Darshan procedure Tirumala Break Darshan procedure and Timings Tirumala Tirupati VIP Break Darshan Tickets and information Tirumala Temple tirupati temple vip pass Special Entry Darshan Hotels near Sri Balaji Temple Tirupati Tirupati Cheap Hotels Luxury 5 star Tirupati Hotels