வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடிப்பதால் முற்பிறவி பாவமெல்லாம் நீங்கும். திருமண பாக்கியம், மாங்கல்ய பலம், குழந்தை செல்வம் மற்றும் எல்லா ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் இந்த வரலட்சுமி விரதம். விரத தினத்தன்று கீழ்காணும் ஸ்லோகத்தைச் சொல்லிக்கொண்டிருக்கலாம்:
பாக்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸௌமாங்
கல்ய விவர்த்தினி
பாக்யம் தேஹி ச்ரியம் தேஹி, ஸர்வகா
மாம்ச்ச தேஹிமே
வரலக்ஷ்மி நமஸ்தேஸ்து விஷ்ணு
வக்ஷஸ்தலஸ்த்திதே
வரம் தேஹி ச்ரியம் தேஹி ஸர்வகாமாம்ச்
சதேஹிமே
பொதுப் பொருள்: அனைத்து பாக்கியங்களையும் அருளும் பாக்ய லக்ஷ்மியே, நமஸ்காரம். மாங்கல்ய பலனை உறுதிப்படுத்துபவளே, நமஸ்காரம். எங்களுக்கு எல்லா நலன்களையும் பாக்கியங்களையும் தந்தருளி, எங்களது அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றித் தரும் வரலக்ஷ்மித் தாயே, நமஸ்காரம். திருமாலின் திருமார்பில் எழுந்தருளியுள்ள தேவியே, எங்களுக்கு அனைத்து வரங்களையும் தந்தருள்வாய் அம்மா.
வரலட்சுமி விரத வழிபாட்டு பூஜை முறைகள் | Varalakshmi puja, முற்பிறவி பாவங்கள் நீங்கும் மந்திரம், Ganapathy Homam, Ganapathy Puja, Ganapathy Mantra, Ganapathy Puja is performed to please Lord Ganapthy to get blessings. Ganapathy homam and puja bestows material benefits and removes all obstacles in life
No comments:
Post a Comment