பாடியே சாஸ்திரத்தைப் பழித்த பேர்கள்
பண்பில்லா கூன் குருடு ஊமையாகி
வாடியே சப்பாணி நொண்டி யாகி
வளமிலாச் செவிடாகி ரூபங்கெட்டு
சாடியே யவர்களெல்லாம் நாசமாகிச்
சாவார்கள் பெண்டுபிள்ளை யெல்லாஞ்சேர்த்து
கூடியே வியாதியிலே யமிழ்ந்து மாய்ந்து
கொடிதான நரகத்திலழுந்து வாரே.
(பாடல்:184)
- புலிப்பாணி ஜாலத்திரட்டு
பொருள்:
உலகத்தில் சாஸ்த்திரங்களை பழித்தவர்கள் கூன் விழுந்தவர்களாகவும்,
பார்வை அற்றவர்களாகவும், வாய் பேசமுடியாமலும்,
கை,கால்கள் ஊனமுற்ற நிலையிலும்,காது கேட்காமல் செவிடனாகவும்,
கேவலமான உருவத்துடன் பிறந்து துன்பப்பட்டு நாசமாகி சாவார்கள்.
இப்பாவம் இவர்களை மட்டும் பாதிக்காமல் இவரின் மனைவி,
குழந்தைகளையும் சேர்த்து பாதிக்கும்.
மேலும் தீராத பல வியாதிகளைத்தந்து கொடிய நரகத்தில் அவர்களை
தள்ளிவிடும் என்கிறார் புலிப்பாணி சித்தர்.
No comments:
Post a Comment