புத்திர தோஷம் நீங்க, குழந்தை பிறக்க, குழந்தை பெற பரிகார தலங்கள், kulanthai pakkiyam pera valigal:
திருமணத்திற்கு பின்பு சில பெண்களுக்கு பத்தாவது மாதத்திலேயே இந்த பாக்கியம் கிடைத்து விடுகிறது. ஒரு சிலருக்கு ஒரு வருடமோ, இரண்டு வருடமோ தள்ளி குழந்தை யோகம் அமைகிறது. இன்னும் சிலருக்கு 8, 10 வருடங்கள் கழித்துதான் குழந்தைபேறு கிடைக்கிறது. சிலருக்கு குழந்தை பாக்யம் இல்லாத நிலையும் ஏற்பட்டு விடுகிறது. ஒரு சிலருக்கு முதலில் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அதன்பிறகு ஆண் வாரிசுக்காக தவியாய்த் தவித்தாலும் அது கிடைப்பதில்லை. அதேபோல் முதலில் ஆண் குழந்தை பிறக்கும் தம்பதியர்களுக்கு பிறகு பெண் குழந்தை பாக்யம் ஏற்படுவதில்லை. அப்படியே கர்ப்பம் தரித்தாலும் அது தங்காமல் கருச்சிதைவு ஏற்பட்டு விடுகிறது. இதற்கு எல்லாம் என்ன காரணம்? எல்லா விஷயங்களுக்கும் ஜோதிட சாஸ்திரம் ஒரு திறவுகோலாக இருப்பதால், இந்த விஷயத்தில் ஜாதக கட்டம் என்ன சொல்கிறது?
ஜாதகத்தில் குழந்தை பிறக்க யோகம் உண்டா?
ஜாதக கட்டம் ஒவ்வொன்றிற்கும் ஒரு ஆதிபத்யம் உள்ளது. அந்த வகையில் ஐந்தாம் இடம், குழந்தை பாக்யத்தைக் குறிக்கும். அந்த வீட்டின் அதிபதியும் மிக முக்கியம். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தையும், ஒன்பதாம் இடத்தோடு, நான்காம் வீட்டையும் பார்க்க வேண்டும். இந்த 4, 5, 9 ஆகிய வீடுகள் (ராசிகள்) பலம் பெற்றும் அந்த வீட்டிற்குடைய கிரகங்கள் நீச்சம் அடையாமலும் 6, 8, 12ல் மறையாமலும் இருப்பது அவசியமாகும். நீச்ச கிரகத்துடன் சேராமல் இருப்பது மிக முக்கியமாகும். ஆண், பெண் இருவரின் ஜாதகங்களில் குரு, செவ்வாய், சுக்கிரனின் பங்களிப்பு மிகவும் முக்கியமாகும். குருவிற்கு புத்திர பாக்யம் தருவதில் மிக முக்கிய பங்கு
உண்டு. ஏனென்றால் குரு புத்திர காரகன் ஆவார். அதாவது புத்திர யோகத்தை தரக்கூடிய அதிகாரம் பெற்றவர். மேலும், போககாரகனும்கூட. அதாவது தம்பதிகளின் தாம்பத்தியத்தில் சம்போகம் எனும் போகசக்தியை தரக்கூடியவர். செவ்வாய் அருளால்தான் தாம்பத்யத்தில் முழுமையாக ஈடுபட முடியும்.
பெண்களின் மாதவிடாய் பிரச்னைகளுக்கு காரணமாக இருப்பவர் குரு பகவான். பெண்கள் பூப்பெய்துவதற்கும் இவரே முக்கிய காரணம். ரத்த சம்பந்தமான நோய்கள் இவர் மூலம் உண்டாகும்.
சுக்கிரன், சிற்றின்பத்தில் நாட்டம் கொள்ளச் செய்பவர். திகட்டாத தாம்பத்யத்தையும் ஈர்ப்பு சக்தியையும் தரக்கூடியவர் ஆண்களின் சுக்கிலத்திற்கும் பெண்களின் சுரோணிதத்திற்கும் இவரே காரண கர்த்தா. ஒரு தம்பதியின் ஜாதகங்களில் இந்த மூன்று கிரகங்கள் நல்ல வலிமையுடன் ஆட்சி, உச்சம், கேந்திரம், திரிகோணம் பெற்று நல்ல அம்சத்தில் இருந்தால் விரும்பிய புத்திர யோகம் தானாக கூடிவரும்.
குழந்தையின்மை குறை போக்க பரிகார தலங்கள்:
எல்லா கிரக அம்சங்கள், யோகம், பிராப்தம் இருந்தாலும் அதை அனுபவிக்கக்கூடிய நேரம், காலம் வரவேண்டும். குழந்தை யோகமும் அப்படித்தான். கணவன், மனைவி இருவருக்கோ அல்லது ஒருவருக்கோ லக்னாதிபதி, நான்காம் அதிபதி, ஐந்தாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி ஆகியோரின் தசா, புக்தி, அந்தரங்களில் குழந்தை பாக்யம் கூடி வரும். ராகு-கேது திசைகளில் யோகாதிபதிகளின் புக்தியில் சந்ததி விருத்தி ஏற்படும். மற்ற தசாபுக்திகளில் தடைகள், கர்ப்பச்சிதைவு ஏற்பட்டால் உரிய பரிகார தலங்களுக்கு செல்வதன் மூலம் சத்புத்திர யோகம் கிடைக்கும்.
* கரு தந்து காத்திடும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயில், கும்பகோணம்-தஞ்சை சாலையில் பாபநாசம் அருகே உள்ளது. குழந்தை பாக்யதடை, அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுபவர்கள் இத்தலத்து அம்பாளை பிரார்த்தித்து, இங்கு தரப்படும் பசுநெய், விளக்கெண்ணெய் பிரசாதத்தை முறைப்படி அருந்திவர தோஷ நிவர்த்தி ஏற்பட்டு புத்திரயோகம் கிட்டும்.
* கரு வளர்க்கும் கருவளர்ச்சேரி அகிலாண்டேஸ்வரி கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கும்பகோணம்-திருவாரூர் சாலையில் மருதாநல்லூர் கிராமத்தை அடுத்து உள்ளது. இத்தலத்து அம்மனை பிரார்த்தித்துக் கொள்ள புத்திர பாக்யம் உண்டாகும். இங்கு தரப்படும் மஞ்சள் பிரசாதம் மிகவும் சக்தி வாய்ந்தது.
* ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திர நாளில், சென்னையை அடுத்துள்ள திருவாலங்காடு சென்று சிவனை பிரார்த்தித்து, அன்றைய தினம் தாம்பத்ய உறவு கொண்டால் சத்புத்திர யோகம் உண்டாகும்.
* கும்பகோணம் - மன்னார்குடி சாலையில் நீடாமங்கலம் பேருந்து நிலையத்திற்கு அருகில் புத்திர பிராப்தி தரும் சந்தானராமன் ஆலயம் உள்ளது. இங்கு ராமபிரான் சந்தான யோகம் தருகிறார். இங்கு ஒவ்வொரு மாதமும் புனர்பூச நட்சத்திர நாளில் விசேஷ அபிஷேகங்கள் நடைபெறும்போது ராமனை வழிபடுவது மிகச் சிறப்பாகும்.
இக்கோவிலில் முறையான பரிகாரங்களைச் செய்ய ஜோதிடரை அனுகவும்.
- ஜோதிடர் சுப்பிரமணியம் M.A., Astro., செல்: 9894720277
No comments:
Post a Comment