Slider

Rasipalan

Tirupur Astrologer Numerology Astrology Tamil Astrology Horoscope in Tamil Jothidam astrology predictions consultation Future Astrology Hindu astrology Indian Jadhagam Best Astrologer famous astrologer in tirupur astrologer tirupur famous astrologer in tamilnadu astrologer Traditional consultations salem coimbatore Tirupur Madurai Gopichetipalayam Avinashi sathy Trichy erode jothidar erode astrologer tamil jothidar tirupur tamilnadu jothidar.jathagam parpavar jathaga porutham josiyam parpavar best jothidar tirupur tirupur jothidar tirupur jothidam Most popular Josiyam mobile horoscope Online Astrology online Horoscope tirupur astro tirupur jathagar jothidam tirupur jothidar in jothidar in tirupur prasanna jothidam tirupur vastu jothidar nalla astrologer tirupur Rasi palangal sanipeyarchi palangal guruperchi palangal Tamil-prediction Horoscope in Tamil Tamil Jothidam Astrologer in Tamilnadu Tamil Jothidar Astrologer in Ariyalur Astrologer in Chennai Astrologer in Coimbatore Astrologer in Cuddalore Astrologer in Dharmapuri Dindigul Astrologer in Erode Astrologer in Kanchipuram Kanyakumari Astrologer in Karur Astrologer in Krishnagiri in Madurai Astrologer in Nagapattinam Namakkal Astrologer in Nilgiris Astrologer in Perambalur Pudukkottai Astrologer in Ramanathapuram Astrologer in Sivaganga Astrologer in Thanjavur Theni Astrologer in Thoothukudi Tiruchirappalli Astrologer in Tirunelveli Astrologer in Tiruvallur Tiruvannamalai Astrologer in Tiruvarur Vellore Astrologer in Viluppuram Astrologer in Virudhunagar Chart Astrology Consultation Astrology Horoscope Astrology online Astrology Predictions Services Best astrologer Best astrologer tirupur Best Jothidar Tirupur Jothidar famous astrologer in tirupur Good Astrologer In tirupur Good Astrologer In Tamil Nadu Tamil Jothidam Vedic astrology Specialist in Astrology Greatest Computer Astrologer in tirupur famous astrologers in Best astrologers astrologers in tirupur astrologers experts in tirupur astrologers experts in Tamil Nadu Specialist in Astrology Tamil Nadu Astrologers astrologers experts in tirupur chennai komarapalayam best astrologer chennai numerology astrology in tamil numerology

Our service running text

கிரக தோஷங்களினால் காதல் பிரச்சினை, திருமணத்தடை, கணவன் மனைவி பிரச்சினை, குழந்தையின்மை, தொழில் நஷ்டம், வேலை வாய்ப்பின்மை, பதவி உயர்வு தடங்கள், எதிரிகள் தொல்லை, கடன் தொல்லை, மனம் நிம்மதி யின்மை, நோயினால் பல்வேறு உடல் உபாதைகள் போன்ற அனைத்தும் ஏற்ப்படும். அவற்றிலிருந்து விடுபட்டு நீண்ட ஆயுளும் நிறந்த செல்வமும் பெற்று வளமுடன் வாழ எம்மை அனுகவும். | ஜோதிடம் | ஆன்மிகம் | மந்திரம் | திருமண பொருத்தம் | ஜாதகம் | ஜாமக்கோள் ஆருடம் | ராசி பலன் | சந்திர நாடி | பிருகு நாடி | ஜெம்ஸ் | பட்சி | டாரட் | குரு நாடி | சனி நாடி | மருத்துவ ஜோதிடம் | கர்மா பரிகாரம் | தாம்பூல பிரசன்னம் | கேபி | சோழிய பிரசன்னம் | தேவபிரசன்னம் | எண் கணிதம் | பெயர் பட்டியல்|

Sunday, October 8, 2017

Rasi Palan 2018 - Magaram Rasi | ராசி பலன் 2018 - மகரம் ராசி






Ø  ராசி : மகரம்
Ø நட்சத்திரம் : உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம்,     அவிட்டம் 2-ஆம் பாதம் முடி
Ø  அதிஷ்ட கல் : நீலக்கல்
Ø  அதிஷ்ட வண்ணம் : நீலம்
Ø  அதிஷ்ட எண் : 5, 6, 8
Ø  அதிஷ்ட திசை : மேற்கு

2018 ராசி பலன் - மகர ராசி (2018 Rasi Palan Magara Rasi)


தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு ஒளிவுமறைவின்றி கற்றுத்தரும் மகர ராசி அன்பர்களே! 
உங்கள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். அனைத்து விஷயங்களையும் நல்ல கண்ணோட்டத்துடன் காண்பீர்கள். பங்கு வர்த்தகத்தில் லாபம் குவியும். அந்த லாபத்தை எதிர்காலத்திற்காகச் சேமிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வீர்கள். தந்தை வழியில் சில அனுகூலங்களைக் காண்பீர்கள். உங்களை எதிர்த்தவர்கள் அடங்குவார்கள்.

ஆண்டின் பிற்பாதிக்குப் பிறகு உங்களின் தொழில் ஸ்தானத்தைப் பார்க்கிறார் குரு பகவான். இதனால் தொழிலில் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு உண்டாகும். மனதில் அமைதி நிலவும். நிம்மதியாக உறங்குவீர்கள். உடல் உபாதைகள் முழுமையாகத் தீர்ந்துவிடும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து சேரும். ஆன்மீகச் சிந்தனையுடன் வாழ்க்கையை நடத்துவீர்கள்.


உத்யோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி உயர்வு கிடைக்கும். இதனால் ஊதியம் உயரும். மேலதிகாரிகள் உங்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உடலில் இருந்த சோர்வும், மனதிலிருந்த குழப்பமும் மறையும். இதனால் உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். சக ஊழியர்கள் உங்களிடம் பகை மறந்து நட்பு பாராட்டுவார்கள். அலுவலகத்தில் சிறப்பான பயிற்சிகளைக் கற்றறிந்து வெற்றியடைவீர்கள்.


வியாபாரிகள், போட்டியாளர்களின் தடைக்கற்களைக் கடக்க சற்று போராட வேண்டியிருக்கும். கூட்டாளிகளை நம்பாமல் நீங்களே முன்னின்று செயல்பட்டால் வியாபாரத்தில் ஏற்படும் குளறுபடிகளைத் தவிர்க்கலாம். பண விஷயத்திலும் உஷாராக இருக்கவும். மற்றபடி சுகத்தை மறந்து கடினமாக உழைப்பீர்கள்.


விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். வங்கிகளிடமிருந்து கடன் கிடைக்கும். நீர் வரத்து நன்றாக இருப்பதால் விவசாயத்தில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். புதிய குத்தகைகளில் லாபம் கொட்டும். கழனிகளை வாங்கி மகிழ்வீர்கள். சேமிப்பு உயரும். பால் வியாபாரத்தாலும், கால்நடைகளாலும் நன்மை உண்டாகும். நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள், உங்களுக்குச் சாதகமாக முடியும்.


அரசியல்வாதிகள், கட்சியின் மேலிடத்தில், கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள். அதேசமயம் தொண்டர்கள் உங்களிடம் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள். அதனால் கோபப்படாமல் விவேகத்துடன் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டு, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மனங்களை வெல்லவும். மற்றபடி சமுதாயத்திற்குப் பயன்படும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிரிகளின் ரகசியத் திட்டங்களை அம்பலப்படுத்திப் புகழடைவீர்கள்.


கலைத்துறையினருக்கு அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.


பெண்மணிகள், குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். அனைவரையும் அனுசரித்துச் செல்லவும். நன்கு யோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுக்கவும். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து சேமிப்புகளில் கவனம் செலுத்தவும். கடுமையான சொற்களை உதிர்க்காமல் நிதானமாகப் பேசவும்.


மாணவமணிகள், படிப்பில் ஏற்படும் இடையூறுகளைச் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். தெளிவான மனதுடன் படித்து நல்ல மதிப்பெண்களை அள்ளுவீர்கள். நண்பர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அதேசமயம் விளையாட்டுகளில் எதிர்பார்த்த வெற்றிகளைப் பெற முடியாமல் போகும்.




மகர ராசி பரிகாரம்  ( Pariharam - Magara Rasi ):



மேலே கொடுக்கப்பட்டவை பொதுவான பலன்கள். ஆனால்  உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்துள்ள நிலை, மற்ற கிரகங்கள்  அவற்றைப் பார்க்கும் நிலை அதனால் உங்களுக்கு ஏற்படவிருக்கும் நன்மை அல்லது பாதிப்புகளை அறிந்துகொள்ள ஜோதிடரை தொடர்புகொள்ளுங்கள்

கணித ஜோதிடர் சுப்பிரமணியம் M.A., Astro.,  Cell: 9894720277
2018 புத்தாண்டு பலன்கள் மகரம், வருட பலன் 2018 மகரம் ராசி, தமிழ் இராசி பலன் மகரம், ஜோசியம், 2018 ஆண்டு பலன் மகரம் ராசி, வார ராசி பலன் மகரம், 2018 மாத ராசி பலன் மகரம் ராசி, தமிழ் புத்தாண்டு பலன்கள் மகரம் ராசி, ராசிபலன் 2018 மகரம், Rasi palan 2018 Magaram Rasi, tamil puthandu rasi palan 2018 Magaram Rasi, Rasi Palan In Tamil Magaram, 2018 New Year Wishes Sms, Puthaandu Raasi Palangal 2018 Magaram rasi, new year josiyam, Magaram rasi palangal 2018.


Rasi Palan 2018 Kadagam Rasi | ராசி பலன் 2018 கடகம் ராசி




Ø ராசி : கடகம்
Ø நட்சத்திரம்: புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்   முடிய
Ø அதிஷ்ட கல்: முத்து
Ø அதிஷ்ட வண்ணம்: இளஞ்சிவப்பு
Ø அதிஷ்ட எண்: 1, 3, 9
Ø அதிஷ்ட திசை: தென்கிழக்கு




2018 Rasi Palan Kadaga Rasi | 2018 ராசி பலன் கடக ராசி :

விடாமுயற்சியுடன் செயலாற்றி வெற்றி காணும் கடக ராசி அன்பர்களே! 



ஒரு விஷயத்தில் கவனம் தேவை! உங்களின் நெருங்கிய நண்பர்களே உங்களை ஏமாற்ற முயற்சிக்கலாம். இதனால் மனதில் குழப்பங்கள் சூழும். இதை முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்களின் கருத்துக்களை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அவற்றை எச்சரிக்கை உணர்வுடன் வெளிப்படுத்துங்கள். மற்றபடி கடினமான வேலைகளையும் சுலபமாகச் செய்து முடிப்பீர்கள். வருமானம் சீராக இருப்பதால் கடன்கள் ஏற்படாது. செய்தொழிலில் ஏற்படும் போட்டிகளை சாதுர்யத்துடன் எதிர் கொள்வீர்கள். தெய்வ வழிபாட்டில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். பணப் புழக்கம் நன்றாக இருக்கும். என்றாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும். அதனால் அனாவசிய செலவுகளைத் தவிர்த்து, முக்கியமான செலவுகளை மட்டுமே செய்யவும்.

குரு பகவானின் கனிந்த பார்வை கிடைக்கப்பெறும் தைரியவீர்ய ஸ்தானத்தால் உங்களின் நடை, உடை, பாவனைகளில் அழகை உண்டாக்குவார். சிலருக்கு நூதன வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பாராத பயணங்களால் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உத்யோகஸ்தர்கள் கடுமையாக உழைத்தாலும் அதில் மேலதிகாரிகள் குற்றம் காண வாய்ப்புண்டு. அதேசமயம் சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக நிற்பார்கள். இதனால் சமாளித்துவிடுவீர்கள். சிலருக்கு அலுவலக ரீதியாக வெளியூரில் சில காலம் தங்கிப் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். அலுவலகத்திலிருந்து கடன் கிடைத்து வாகனம் வாங்கும் யோகமும் பலருக்கு அமையும்.

வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் எந்தக் குறையும் ஏற்படாது. ஆனாலும் எதிலும் கவனமாக இருக்கவும். புதிய முதலீடுகளைக் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே செய்யவும். தேவைக்கேற்ற சரக்குகளை மட்டுமே வாங்கி விற்கவும். அதேசமயம் சந்தைகளில் போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயித்து லாபமடைய நிறையவே வாய்ப்புகள் உள்ளன.

விவசாயிகள் நல்ல விளைச்சலைக் காண்பீர்கள். புதிய குத்தகைகளை நாடிச் செல்வீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். வங்கிக் கடன்களும் கிடைக்கும். அதேநேரம் கால்நடைகளுக்கு சற்று கூடுதலாக செலவு செய்ய நேரிடும். மற்றபடி புழு, பூச்சிகளால் பயிர்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படாது. நீராதாரங்களையும் பெருக்கிக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து, உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அரசு அதிகாரிகளும் உங்கள் நேர்மையான ஆலோசனைகளை மதித்து நடப்பார்கள். அவர்களால் உங்களின் செல்வாக்கு தொண்டர்களிடம் உயர்ந்து காணப்படும். உங்களின் மறைமுக எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். அதேசமயம் கட்சியில் முக்கியப் பிரமுகர் யாரிடமாவது மனக்கசப்பு ஏற்படலாம். அதனால் பிறருடன் பேசும்போது ஒரு முறைக்கு இரு முறை யோசித்துப் பேசவும்.

கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும். சக கலைஞர்கள் நட்புடன் பழகுவார்கள். அவர்களால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர் மன்றங்களுக்குச் செலவு செய்து மகிழ்வீர்கள். அதேநேரம் சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் உங்கள் காரியங்களைச் செய்யவும்.

பெண்மணிகள் இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். கணவரிடம் பாசத்தோடு பழகுவீர்கள். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். தேவையற்ற கவலைகள் சிலருக்குத் தோன்றலாம். மனதைக் கட்டுப்படுத்த யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றை செய்தால், கவலைகள் தேவையற்றவை என்பது தன்னால் புரியும்.



மாணவமணிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டு புத்துணர்ச்சியுடன் பாடங்களைப் படிக்கவும். உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துத் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் நீங்களாகவே இருக்கப் பழகி உங்களின் முன்னேற்றத்திற்கு அடி கோலுங்கள். “உங்களை நீங்கள்தான் உயர்த்திக் கொள்ள வேண்டும்” என்கிற கீதை வாக்கியத்தை மறவாமல் நடைபோடுங்கள்.


கடகம் ராசி பரிகாரம்  ( Pariharam - Kadaga Rasi ):


மேலே கொடுக்கப்பட்டவை பொதுவான பலன்கள். ஆனால்  உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்துள்ள நிலை, மற்ற கிரகங்கள்  அவற்றைப் பார்க்கும் நிலை அதனால் உங்களுக்கு ஏற்படவிருக்கும் நன்மை அல்லது பாதிப்புகளை அறிந்துகொள்ள ஜோதிடரை தொடர்புகொள்ளுங்கள்


கணித ஜோதிடர் சுப்பிரமணியம் M.A., Astro.,  Cell: 9894720277


R2018 புத்தாண்டு பலன்கள் கடகம், வருட பலன் 2018 கடக ராசி, தமிழ் இராசி பலன் கடகம், ஜோசியம், 2018 ஆண்டு பலன் கடக ராசி, வார ராசி பலன் கடகம், 2018 மாத ராசி பலன் கடக ராசி, தமிழ் புத்தாண்டு பலன்கள் கடக ராசி, ராசிபலன் 2018 கடகம், Rasi palan 2018 Kadagam Rasi, tamil puthandu rasi palan 2018 Kadagam Rasi, Rasi Palan In Tamil Kadagam, 2018 New Year Wishes Sms, Puthaandu Raasi Palangal 2018 Kadaga rasi, new year josiyam, Kadaga rasi palangal 2018.

Rasi Palan 2018 Viruchigam Rasi | ராசி பலன் 2018 விருச்சிகம் ராசி






Ø ராசி : விருச்சிகம்
எதிலும் போராடி வெற்றி காணும் விருச்சிகராசி அன்பர்களே! 
குடும்பத்தில் மருத்துவச்செலவுகள் குறையும். தாயார் வழியில் இருந்துவந்த மன ஸ்தாபங்கள் மறைந்து சுமுகமான உறவு உண்டாகும். குடும்பத்திலும், உற்றார் உறவினர்களிடமும் உங்கள் செல்வாக்கு உயரும். உங்கள் செயல்களைப் புதிய உத்வேகத்துடன் செய்து முடிக்க வழி பிறக்கும். திட்டங்களைச் சரியாகத் தீட்டி அவைகளைப் படிப்படியாக, வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள். புதிய தொழில்களைத் தொடங்குவீர்கள். உங்கள் நண்பர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்.

Ø நட்சத்திரம் : விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய
Ø அதிஷ்ட கல் : பவளம்
Ø அதிஷ்ட வண்ணம் : வெளிர் மஞ்சள்
Ø அதிஷ்ட எண் : 1, 2, 3
Ø அதிஷ்ட திசை : தெற்கு

2018 Rasi Palan Viruchiga Rasi | 2018 ராசி பலன் விருச்சிக ராசி


பெரியோர்களின் ஆதரவு எப்போதுமிருக்கும். ஓய்வு நேரத்தில் கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழவும் சந்தர்ப்பங்கள் அமையும். எனினும் ஏழரை நாட்டு சனி பகவான் சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கு சேவை செய்து புண்ணியம் ஈட்டும் வாய்ப்பையே வழங்குவார். இதனால் தன்னலம் பார்க்காமல் உழைத்துப் புகழடைவீர்கள். உங்கள் உடலுழைப்புக்கு மேல் பன்மடங்கு லாபம் கிடைக்கும். கல்வி, கேள்விகளிலும் சிறந்து விளங்குவீர்கள்.

உத்யோகஸ்தர்கள் பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். சிலர், விரும்பிய வெளியூருக்கு மாற்றலாகிச் செல்வார்கள். மேலதிகாரிகள் சற்று பாராமுகமாகவே நடந்து கொண்டாலும் தொல்லைகள் கொடுக்க மாட்டார்கள்; ஆனால் சக ஊழியர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். உரிய நேரத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் உங்கள் வேலைகளைத் திட்டமிட்டு சரியாகச் செய்வது அவசியம்.

வியாபாரிகளுக்கு தொழிலில் இருந்த போட்டிகள் குறையும். லாபம் அதிகரிக்கும். நண்பர்களையும், வாடிக்கையாளர்களையும் அரவணைத்துச் சென்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த தொய்வுகள் நீங்கி, மனதில் உற்சாகம் தோன்றும். அதேநேரம் வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் உங்கள் கை வந்து சேருவதில் தாமதம் ஏற்படும் என்பதால் புதிதாக யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.

விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். விவசாய உபகரணங்களுக்குச் சற்று கூடுதலாகச் செலவு செய்ய நேரிடலாம். புதிய நிலங்கள் குத்தகைக்கு வந்து சேரும். அறுவடை விஷயங்களில் ஆழ்ந்து திட்டம் தீட்டி, நற்பயன் பெறுவீர்கள். உங்கள் “விலை நிர்ணயம்’ துல்லியமாக அமையும். அரசியல்வாதிகளின் பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் உற்சாகப்படுத்தப்படுவீர்கள். கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்யம் நன்றாக இருக்கும். அடிக்கடி பயணங்களைச் செய்து, கட்சிப் பணிகளைத் தீவிரமாக ஆற்றி ஆதாயம் பார்ப்பீர்கள்.

கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் பெயரும், புகழும் உயரும். ரசிகர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்பட நிறையவே வாய்ப்புண்டு. ஆனால் அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ரசிகர் மன்றங்களுக்குப் பணம் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.

பெண்மணிகள் கணவரின் பாராட்டுகளை எளிதில் அடைவீர்கள். புதிதாக ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். இல்லத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். உடல் நலத்தில் மட்டும் சற்று கவனமாகவே இருக்கவும்.

மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களை வாங்க வழி வகையுண்டு. பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். அவர்களால் உங்கள் எதிர்காலத் திட்டங்கள் எளிதில் நிறைவேறும். சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். அவர்களிடம் அனாவசிய சண்டை சச்சரவுகளைத் தவிர்க்கவும். மற்றபடி உங்கள் உடல் நலம் நன்றாக இருக்கும். தினமும் உடற்பயிற்சிகளைச் செய்தால் மேலும் உடல் வலிமை பெறலாம்.


விருச்சிகம் ராசி பரிகாரம்: ( Pariharam - Viruchigam Rasi ):

மேலே கொடுக்கப்பட்டவை பொதுவான பலன்கள். ஆனால்  உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்துள்ள நிலை, மற்ற கிரகங்கள்  அவற்றைப் பார்க்கும் நிலை அதனால் உங்களுக்கு ஏற்படவிருக்கும் நன்மை அல்லது பாதிப்புகளை அறிந்துகொள்ள ஜோதிடரை தொடர்புகொள்ளுங்கள்

கணித ஜோதிடர் சுப்பிரமணியம் M.A., Astro.,  Cell: 9894720277


2018 புத்தாண்டு பலன்கள் விருச்சிகம், வருட பலன் 2018 விருச்சிகம் ராசி, தமிழ் இராசி பலன் விருச்சிகம், ஜோசியம், 2018 ஆண்டு பலன் விருச்சிகம் ராசி, வார ராசி பலன் விருச்சிகம், 2018 மாத ராசி பலன் விருச்சிகம் ராசி, தமிழ் புத்தாண்டு பலன்கள் விருச்சிகம் ராசி, ராசிபலன் 2018 விருச்சிகம், Rasi palan 2018 Viruchigam Rasi, tamil puthandu rasi palan 2018 Viruchigam Rasi, Rasi Palan In Tamil Viruchigam, 2018 New Year Wishes Sms, Puthaandu Raasi Palangal 2018 Viruchiga rasi, new year josiyam, Viruchiga rasi palangal 2018.

Rasi Palan 2018 Simmam Rasi | ராசி பலன் 2018 சிம்மம் ராசி




  • ராசி: சிம்மம்
  • நட்சத்திரம்: மகம், பூரம் உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
  • அதிஷ்ட கல்: மாணிக்கம் (Ruby)
  • அதிஷ்ட வண்ணம்: வெள்ளை
  • அதிஷ்ட எண்: 1, 3, 5
  • அதிஷ்ட திசை: கிழக்கு 

2017 ராசி பலன் சிம்ம ராசி | 2017 Rasi Palan Simma Rasi :

ஆர்வமுடன் உழைத்து குறிக்கோளை எட்டிப்பிடிக்கும் சிம்ம ராசி அன்பர்களே! 



மாணவமணிகள் கல்வியில் மிகுந்த ஈடுபாடு காட்டுவீர்கள். பெற்றோர்களின் ஆதரவும் தொடர்ந்து நல்லவிதமாக இருக்கும். வெளி விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள்.


உங்களின் காரியங்களைப் பொறுமையாகவும், அமைதியாகவும் செய்து முடிப்பீர்கள். சமுதாயத்தில் முக்கியஸ்தர் என்கிற அந்தஸ்தைப் பெறுவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கத் தொடங்கும். உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் தடை ஏற்படாது. சக ஊழியர்கள் உங்களிடம் பொறாமை கொள்ளலாம். எடுத்த காரியங்களில், சில சந்தர்பங்களில் கால தாமதம் ஏற்படலாம்; உடலில் சோர்வும், மனதில் தெளிவின்மையும்கூட உண்டாகலாம். ஆனால் இவற்றை மீறி கர்ம ஸ்தானத்தில் உள்ள கேது பகவான், உங்களுக்கு கெளரவமான பதவிகளை வழங்குவார். இதனால் உங்களுக்கு உறுதுணையாக இருந்து வந்த மேலதிகாரிகளின் ஆதரவு சற்று குறையக் கூடும். உங்களின் கடமைகளை பதற்றப்படாமலும், நிதானத்துடனும் செய்தால் எந்தச் சரிவுக்கும் ஆளாகாமல் தப்பிக்கலாம்.


வியாபாரிகள் நல்ல பொருளாதார வளத்தைக் காண்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் மறையும். கூட்டாளிகளிடம் ஒற்றுமை உண்டாகும். வங்கிக் கடன்கள் சிக்கலின்றி கிடைக்கும். உங்கள் முயற்சியில் சுறுசுறுப்பு உண்டாகும். வாணிப வட்டாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். புதிய முதலீடுகளில் ஈடுபட்டு லாபத்தைக் காண்பீர்கள்.

விவசாயிகள் விளை பொருட்களால் லாபத்தை அள்ளுவீர்கள். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்க எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். அதேசமயம் வயல் வரப்புச் சண்டைகளில் ஈடுபட வேண்டாம். தன்னலம் பாராட்டாமல் அடுத்தவர்கள் வளம் பெற செயலாற்றுங்கள். இந்த ஆண்டு சக விவசாயிகள் மத்தியில் “முக்கியஸ்தர்’ என்ற செல்வாக்குடன் வலம் வர வாய்ப்புண்டு. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். அதனால் எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். மற்றபடி தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பதால் உற்சாகமடைவீர்கள். உங்கள் செயல்களை நேர்த்தியாகச் செய்வீர்கள். பண வரவும் நன்றாகவே இருக்கும்.

கலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவும் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது. புகழைத் தக்க வைத்துக்கொள்ள சீரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உழைப்பை அதிகப்படுத்திக்கொண்டு, கர்வத்தை விட்டொழித்துத் திறந்த மனதுடன் இயங்கினால் புகழ் பெறலாம். மற்றபடி சக கலைஞர்களுடன் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் சில முடிவுக்கு வரும்.

பெண்மணிகள் குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள். கணவருடனான ஒற்றுமை நன்றாகவே இருக்கும். உங்களின் புத்திசாலித்தனத்தை குடும்பத்தினர் புகழ்வார்கள். புத்தாடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். விருந்து மற்றும் விழாக்களில் கலந்துகொண்டு உற்காசம் அடைவீர்கள். உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள்.

சிம்ம ராசி பரிகாரம்: ( Pariharam - Simma Rasi ):



மேலே கொடுக்கப்பட்டவை பொதுவான பலன்கள். ஆனால்  உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்துள்ள நிலை, மற்ற கிரகங்கள்  அவற்றைப் பார்க்கும் நிலை அதனால் உங்களுக்கு ஏற்படவிருக்கும் நன்மை அல்லது பாதிப்புகளை அறிந்துகொள்ள ஜோதிடரை தொடர்புகொள்ளுங்கள்

கணித ஜோதிடர் சுப்பிரமணியம் M.A., Astro.,  Cell: 9894720277

2018 புத்தாண்டு பலன்கள் சிம்மம், வருட பலன் 2018 சிம்மம் ராசி, தமிழ் இராசி பலன் சிம்மம், ஜோசியம், 2018 ஆண்டு பலன் சிம்மம் ராசி, வார ராசி பலன் சிம்மம், 2018 மாத ராசி பலன் சிம்மம் ராசி, தமிழ் புத்தாண்டு பலன்கள் சிம்மம் ராசி, ராசிபலன் 2018 சிம்மம், Rasi palan 2018 Simmam Rasi, tamil puthandu rasi palan 2018 Simmam Rasi, Rasi Palan In Tamil Simmam, 2018 New Year Wishes Sms, Puthaandu Raasi Palangal 2018 Simma rasi, new year josiyam, Simma rasi palangal 2018.

Rasi Palan 2018 Kanni Rasi | ராசி பலன் 2018 கன்னி ராசி



  • ராசி : கன்னி
  • நட்சத்திரம்: உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய
  • அதிஷ்ட கல் : மரகதம்
  • அதிஷ்ட வண்ணம் : சாம்பல் நிறம்
  • அதிஷ்ட எண் : 2, 6, 8

  • அதிஷ்ட திசை: தெற்கு - வடக்கு

2018 ராசி பலன் கன்னி ராசி | 2018 Rasi Palan Kanni Rasi :

அனைவரிடமும் பண்புடன் நடந்து கொள்ளும் கன்னிராசி அன்பர்களே! 

இந்த ஆண்டு உங்களின் பேச்சாற்றல் அதிகரிக்கும். தன்னம்பிக்கை உயரும். உங்களின் எண்ணங்களை அடுத்தவர்கள் நல்ல முறையில் புரிந்து கொள்வார்கள். புதிய பொறுப்புகள் தாமாகவே தேடி வரும். வருமானம் நல்ல முறையில் வந்தாலும், சிலருக்கு குறுக்கு வழியில் செல்ல மனம் நினைக்கும். எனவே மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு நேர் வழியில் செல்லவும். இதன்மூலம் பல பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் நல்ல முறையில் இருக்கும். இதனால் மனதில் புத்துணர்ச்சி அதிகரிக்கும். உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். சிலர் நெடுநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வைப் பெறுவார்கள். மேலும் அலுவலக ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். உங்களின் வேலைகளைச் சரியாகத் திட்டமிட்டு செய்வீர்கள். மேலிடத்தின் நம்பிக்கைக்கு உரியவராக உயர்வீர்கள்.



வியாபாரிகள் பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வருமானம் சிறப்பாகவே தொடரும். அதேசமயம் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். புதிய முதலீடுகளில் நன்றாகச் சிந்தித்த பிறகே ஈடுபடவும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். இதனால் கொள்முதல் பொருட்களை விற்று நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். நெருங்கியவர்களுக்கு அரிய உதவிகளைச் செய்து கௌரவம் அடைவீர்கள். உங்கள் சிந்தனையில் தெளிவு பிறக்கும். செயலில் வேகம் அதிகரிக்கும். புதிய நிலங்களை வாங்குவதற்குக் கடன் கிடைக்கும். உங்கள் கழனியில் வேலை செய்யத் திறமையான ஆட்கள் கிடைப்பார்கள்.



அரசியல்வாதிகளின் பெயரும், புகழும் வளரும். புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். பயணங்களால் நன்மை உண்டாகும். உங்களின் கடமைகளை சுறுசுறுப்புடன் செய்வீர்கள். தொண்டர்களின் ஆதரவுடன் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். ஆயினும் எவரையும் பகைத்துக்கொள்ளாமல் உங்களின் வேலைகளில் மட்டுமே கவனமாக இருக்கவும். கலைத்துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். சக கலைஞர்களிடம் உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைத் தக்கபடி பயன்படுத்தி, பொறுப்புடன் நடந்துகொள்வீர்கள். சில நிறுவனங்களால் முந்தைய காலகட்டத்தில் நேரிட்ட மன வருத்தங்களை ஒதுக்கி வைத்துவிட்டு உழைப்பது, முன்னேற்றத்திற்கு உதவும். ரசிகர்களை அரவணைத்துச் செல்வீர்கள்.



பெண்மணிகளுக்குக் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உற்றார், உறவினர்கள் உங்களை அணுகிப் பயன் பெறுவார்கள். சேமிப்பில் நல்ல கவனம் செலுத்துவீர்கள். ஆலயங்களுக்குச் சென்று ஆன்மீக பலம் பெறுவீர்கள். மற்றபடி அனைவரிடமும் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டு குழப்பங்களைத் தவிர்க்கவும்.

மாணவமணிகளுக்கு நினைவாற்றல் பெருகும். இதனால் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உபரி நேரங்களில் மனதிற்குப் பிடித்த கேளிக்கைகளிலும், விளையாட்டுகளிலும் ஈடுபட்டு மகிழ்ச்சிக் கடலில் திளைப்பீர்கள். அதேநேரம் நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள்.


கன்னி ராசி பரிகாரம்: ( Pariharam - Kanni Rasi ):

மேலே கொடுக்கப்பட்டவை பொதுவான பலன்கள். ஆனால்  உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்துள்ள நிலை, மற்ற கிரகங்கள்  அவற்றைப் பார்க்கும் நிலை அதனால் உங்களுக்கு ஏற்படவிருக்கும் நன்மை அல்லது பாதிப்புகளை அறிந்துகொள்ள ஜோதிடரை தொடர்புகொள்ளுங்கள்

கணித ஜோதிடர் சுப்பிரமணியம் M.A., Astro.,  Cell: 9894720277

2018 புத்தாண்டு பலன்கள் கன்னி, வருட பலன் 2018 கன்னி ராசி, தமிழ் இராசி பலன் கன்னி, ஜோசியம், 2018 ஆண்டு பலன் கன்னி ராசி, வார ராசி பலன் கன்னி, 2018 மாத ராசி பலன் கன்னி ராசி, தமிழ் புத்தாண்டு பலன்கள் கன்னி ராசி, ராசிபலன் 2018 கன்னி, Rasi palan 2018 Kanni Rasi, tamil puthandu rasi palan 2018 Kanni Rasi, Rasi Palan In Tamil Kanni, 2018 New Year Wishes Sms, Puthaandu Raasi Palangal 2018 Kanni rasi, new year josiyam, Kanni rasi palangal 2018.


Rasi Palan 2018 - Thulaam Rasi | ராசி பலன் 2018 - துலாம் ராசி




Ø  ராசி : துலாம்
Ø நட்சத்திரம் : சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி,              
விசாகம் 3-ஆம் பாதம் முடிய
Ø  அதிஷ்ட கல் : வைரம்
Ø  அதிஷ்ட வண்ணம் : கருப்பு
Ø  அதிஷ்ட எண் : 1, 5, 8
  Ø  அதிஷ்ட திசை : கிழக்கு


2018 Rasi Palan Thulaa Rasi | 2018 ராசி பலன் துலா ராசி

பணிகளை சுதந்திரமாக செய்யும் விரும்பும் துலாம் ராசி அன்பர்களே! 


இந்த ஆண்டு ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவானால் வாகனங்களுக்கு சிறிது பராமரிப்பு செலவுகள் செய்ய நேரிடும். உங்களின் நண்பர்கள், உங்களுக்குத் தேவையானவற்றைத் தவிர்த்துத் தேவையற்ற விஷயங்களைப் பேச நேரிடலாம். அதனால் எவரையும் முன்னுதாரணமாகக் கொள்ளாமல், உங்களின் தனித் தன்மையை வெளிப்படுத்திச் செயலாற்றுங்கள். உங்களின் வாழ்க்கையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவார். தேவையற்ற கவலைகள் உங்கள் மனதை விட்டு அகலும். உங்களின் அணுகுமுறையால் பகைவர்களையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள். வெளிநாட்டில் வசிக்கும் உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடுவீர்கள். அதனால் சிற்சில ஆதாயங்களும் ஏற்படும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

உத்யோகஸ்தர்கள் தங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பீர்கள். அதேநேரம் சில சமயங்களில் காரணமில்லாமல் மனதில் தைரியம் குறையும். இச்சமயங்களில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அலுவலக வேலைகள் தொடர்பான பயணங்களால் நன்மை உண்டாகும். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும். எதிர்பாராத பதவி உயர்வால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போவீர்கள்.


வியாபாரிகளுக்கு முயற்சிகளுக்குத் தகுந்த லாபம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் அனைத்துச் செயல்களிலும் வெற்றியடைவீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர, புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தினாலும் கடன் சுமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும்.


விவசாயிகளுக்குக் கொள்முதல் லாபம் குறைவாகவே இருக்கும். செலவு குறைந்த மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்வதன் மூலம் வருமான இழப்பை ஈடு செய்யவும். மேலும் இக்காலத்தில் நீர் வரத்தும் குறைவாக இருக்கும். அதனால் பாசன வசதிகளுக்காக, சேமிப்பைக் கரைக்க நேரிடும்.


அரசியல்வாதிகளுக்குப் பெயரும், புகழும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். தொண்டர்களின் ஆதரவு, உங்களை உற்சாகப்படுத்தும். கட்சியில் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். அவற்றை நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள். மக்களுக்கு நன்மை செய்வதற்கான உங்களின் முயற்சிகளை எதிர்கட்சியினரும் பாராட்டுவார்கள். புதிய பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள்.


கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் குறைவாகவே இருந்தாலும் பண வரவு சீராகவே தொடரும். ரசிகர்களின் ஆதரவும் அமோகமாகவே இருக்கும். உங்கள் திறமையினால் புகழைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். ராசியில் அமர்ந்துள்ள உச்சம் பெற்ற புத்தி ஸ்தானாதிபதியாகிய சனி பகவானால் உங்களின் கற்பனை சக்தி ஊற்றுபோல் பெருகும். இது வருமானமாகவும் மாறி பயன் தரும். உங்கள் செயல்களில் தனித் திறமையை வெளிப்படுத்தும் ஆண்டாக இது அமைகிறது. இதை முழுமையாகப் பயன்படுத்தி வெற்றி காணுங்கள்.


பெண்மணிகளுக்குக் கணவரின் அன்பும், பாசமும் அளவுக்கதிகமாகவே கிடைக்கும். ஆன்மீகச் சுற்றுலாவும், இன்பச் சுற்றுலாவும் சென்று மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிறையும். பிள்ளைகளாலும் சந்தோஷம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
மாணவமணிகள் உழைப்பிற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். கடுமையாக உழைத்துப் படிக்கும் மாணவர்கள் சாதனை புரிவார்கள். உழைப்பு குறைந்தால் உயர்வும் குறையக்கூடும். ஆனால் பெற்றோர்களின் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும். வெளி விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வெற்றிவாகை சூடுவீர்கள்.

துலாம் ராசி பரிகாரம்: ( Pariharam - Thulaam Rasi ):

மேலே கொடுக்கப்பட்டவை பொதுவான பலன்கள். ஆனால்  உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்துள்ள நிலை, மற்ற கிரகங்கள்  அவற்றைப் பார்க்கும் நிலை அதனால் உங்களுக்கு ஏற்படவிருக்கும் நன்மை அல்லது பாதிப்புகளை அறிந்துகொள்ள ஜோதிடரை தொடர்புகொள்ளுங்கள்


கணித ஜோதிடர் சுப்பிரமணியம் M.A., Astro.,  Cell: 9894720277

தமிழ் பஞ்சாங்கம் 2018, இன்றைய நல்ல நேரம், 2018 புத்தாண்டு பலன்கள், வருட பலன் 2018, தமிழ் இராசி பலன் 2018, புதிய ஆண்டு ஜோசியம், 2018 ஆண்டு ராசி பலன், வார ராசி பலன், 2018 மாத ராசி பலன், தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2018, ராசிபலன் 2018 மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், 2018 ராசி பலன் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், 2018 ஆண்டு ராசி பலன் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசி பலன், 2018 புத்தாண்டு பலன், புத்தாண்டு ராசிபலன் 2018, புதிய ஆண்டு ஜோசியம், தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள், 2018 புத்தாண்டு வாழ்த்துக்கள், தமிழ் காலண்டர் 2016-2018, சுப முகூர்த்த நாட்கள் 2018, 2018 திருமண முகூர்த்தம் நாட்கள், 2018 தமிழ் ராசி பலன், புத்தாண்டு பலன்கள் 2018, நல்ல நாட்கள், ஜோதிடம், ஜாதகம், முகூர்த்த தினங்கள் 2018, திருமண நாட்கள் 2018, கல்யாண முகூர்த்த தேதிகள் 2018, அரசு விடுமுறை 2018 தமிழ்நாடு, நட்சத்திரம்  பலன் 2018, நட்சத்திர பொருத்தம், அசுவனி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீர்ஷம், திருவாதிரை, 2018 நட்சத்திரம்  பலன், நட்சத்திர பொருத்தம், புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்தரம், அஸ்த்தம், சித்திரை, சுவாதி, விசாகம், நட்சத்திர குணங்கள், நட்சத்திர பொருத்தம், அனுஷம், கேட்டை, நட்சத்திரம்  பலன், நட்சத்திர பொருத்தம் மூலம், பூராடம், உத்தாரடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திர குணங்கள்.

Rasi Palan 2018 - Mithunam Rasi | ராசி பலன் 2018 மிதுனம் ராசி



Ø  ராசி : மிதுனம்
Ø நட்சத்திரம்:மிருகசிரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை
Ø  அதிஷ்ட கல் : மரகதம்
Ø  அதிஷ்ட வண்ணம்: பச்சை
Ø  அதிஷ்ட எண்: 5, 6, 8
Ø  அதிஷ்ட திசை: வடகிழக்கு


2018 Rasi Palan Mithuna Rasi | 2018 ராசி பலன்  மிதுன ராசி


உயர்ந்த பண்பின் இருப்பிடமாகத் திகழும் மிதுனராசி அன்பர்களே! 
இந்த ஆண்டு, ஸ்திர ராசியில் வலுப்பெற்று சஞ்சரிக்கும் குரு பகவானால் மகிழ்ச்சி தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள். அதன் மூலம் வருமானமும் பெருகும். உங்கள் செயல்களை நேர்மையான பாதையில் செவ்வனே செய்து முடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். “பங்குச் சந்தை’ முதலீடு போன்ற இனங்கள் மூலம் திடீர் பண வரவு உண்டாகும். இந்த ஆண்டு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான், உங்களின் ஆன்மீக நாட்டத்தை அதிகப்படுத்துவார். குல தெய்வ வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். தர்ம காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். சிலருக்கு நல்ல குருநாதரிடம் தீட்சை பெறும் பாக்கியமும் உண்டாகும். இவை ஒருபுறமிருக்க, இந்த ராசி நேயர்கள் பலருக்கு சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள முடியாமல் பணிகள் கசக்கிப் பிழியக் கூடும். இதனால் உடலில் அவ்வப்போது சோர்வு உண்டாகும்.


மாணவமணிகள் புத்திசாலித்தனமாகச் செயல்படுவீர்கள். நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு வாய்ப்பு உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று பாராட்டைப் பெறுவீர்கள். உடற்பயிற்சிகளை மேற்கொண்டு சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். பெற்றோர்களின் அறிவுரைப்படி நடந்துகொண்டு மேலும் சிறப்படையுங்கள்.

உத்யோகஸ்தர்கள் இந்த ஆண்டு கடின உழைப்பைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயலாற்றவும். சுணக்கத்திற்கும் சோம்பலுக்கும் இடம் கொடுக்காமல் பணியாற்றினால் மேலதிகாரிகளின் ஆதரவை எளிதில் பெறலாம். இல்லையேல் கிடுக்கிப்பிடிதான்! எப்போதும் நிதானமாகவே பேசி சக ஊழியர்களின் அன்பைப் பெறவும். இதற்குப் பயனும் உண்டு. உங்கள் உடல் உழைப்பிற்கு மேல் இரு மடங்கு வருமானத்தைக் காண்பீர்கள். லாப ஸ்தானத்தை சனி பகவான் பார்ப்பதால் சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்; பயணங்களும் பலன் தரும்.

வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடிவடைந்தாலும் உங்கள் செயல்களில் கூடுதல் அக்கறை காட்டவும். மற்றபடி சமுதாயத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். புதிய சந்தைகளைத் தேடிச் சென்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புதிய முதலீடுகளையும் துணிந்து செய்யலாம்.

விவசாயிகளின் திறமைகள் வீண் போகாது; அமோகமான விளைச்சலைக் காண்பீர்கள். புழு, பூச்சிகளின் பாதிப்பிலிருந்து பயிர்களைக் காப்பாற்ற செலவு செய்ய நேரிடும். சக விவசாயிகளுக்கும் சிறு உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். உங்களுக்குக் கடன் கொடுத்தவர்கள் தொல்லை தர மாட்டார்கள். உப தொழில்களிலும் கவனம் செலுத்துவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையத் தொடங்கும். எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிக் குறை சொல்வதைக் குறைத்துக் கொள்வார்கள். தொண்டர்கள் உங்கள் பெருமைகளைப் புரிந்து கொள்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் மனதிற்கினிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். கட்சிப் பிரச்சாரங்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். அதேசமயம் எவரையும் குறைத்து மதிப்பிடாமல் செயலாற்றவும்.

கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும், கௌரவமும் கட்டாயம் கிடைக்கும். பண வரவில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். அமைதியாகச் செயலாற்றுவீர்கள். சில விரயங்களும் அவ்வப்போது உண்டாகும் என்பதால் சேமிப்பு விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.

பெண்மணிகளுக்குக் கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். அதே சமயம் குடும்பத்தில் உங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் நடந்து கொண்டு அமைதி காப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

மிதுனம் ராசி பரிகாரம்: ( Pariharam - Mithuna Rasi ):

மேலே கொடுக்கப்பட்டவை பொதுவான பலன்கள். ஆனால்  உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்துள்ள நிலை, மற்ற கிரகங்கள்  அவற்றைப் பார்க்கும் நிலை அதனால் உங்களுக்கு ஏற்படவிருக்கும் நன்மை அல்லது பாதிப்புகளை அறிந்துகொள்ள ஜோதிடரை தொடர்புகொள்ளுங்கள்

கணித ஜோதிடர் சுப்பிரமணியம் M.A., Astro.,  Cell: 9894720277

2018 புத்தாண்டு பலன்கள் மிதுனம், வருட பலன் 2018 மிதுனம் ராசி, தமிழ் இராசி பலன் மிதுனம், ஜோசியம், 2018 ஆண்டு பலன் மிதுனம் ராசி, வார ராசி பலன் மிதுனம், 2018 மாத ராசி பலன் மிதுனம் ராசி, தமிழ் புத்தாண்டு பலன்கள் மிதுனம் ராசி, ராசிபலன் 2018 மிதுனம், Rasi palan 2018 Mithunam Rasi, tamil puthandu rasi palan 2018 Mithunam Rasi, Rasi Palan In Tamil Mithunam, 2018 New Year Wishes Sms, Puthaandu Raasi Palangal 2018 Mithunam rasi, new year josiyam, Mithunam rasi palangal 2018.

வரலட்சுமி விரத வழிபாட்டு பூஜை முறைகள் | Varalakshmi puja


வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடிப்பதால் முற்பிறவி பாவமெல்லாம் நீங்கும். திருமண பாக்கியம், மாங்கல்ய பலம், குழந்தை செல்வம் மற்றும் எல்லா ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் இந்த வரலட்சுமி விரதம். விரத தினத்தன்று கீழ்காணும் ஸ்லோகத்தைச் சொல்லிக்கொண்டிருக்கலாம்:

பாக்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸௌமாங்
கல்ய விவர்த்தினி
பாக்யம் தேஹி ச்ரியம் தேஹி, ஸர்வகா
மாம்ச்ச தேஹிமே
வரலக்ஷ்மி நமஸ்தேஸ்து விஷ்ணு
வக்ஷஸ்தலஸ்த்திதே
வரம் தேஹி ச்ரியம் தேஹி ஸர்வகாமாம்ச்
சதேஹிமே

பொதுப் பொருள்: அனைத்து பாக்கியங்களையும் அருளும் பாக்ய லக்ஷ்மியே, நமஸ்காரம். மாங்கல்ய பலனை உறுதிப்படுத்துபவளே, நமஸ்காரம். எங்களுக்கு எல்லா நலன்களையும் பாக்கியங்களையும் தந்தருளி, எங்களது அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றித் தரும் வரலக்ஷ்மித் தாயே, நமஸ்காரம். திருமாலின் திருமார்பில் எழுந்தருளியுள்ள தேவியே, எங்களுக்கு அனைத்து வரங்களையும் தந்தருள்வாய் அம்மா.
வரலட்சுமி விரத வழிபாட்டு பூஜை முறைகள் | Varalakshmi puja, முற்பிறவி பாவங்கள் நீங்கும் மந்திரம், Ganapathy Homam, Ganapathy Puja, Ganapathy Mantra, Ganapathy Puja is performed to please Lord Ganapthy to get blessings. Ganapathy homam and puja bestows material benefits and removes all obstacles in life

சமய தீட்சை மந்திரம் | samaya deeksha manthiram

சமய தீட்சை மந்திரம்

"தீட்சை" என்னும் சொல் 'ஞானத்தைக் கொடுத்து மலத்தைக் கெடுப்பது என்னும் பொருளுடையது என ஆகம நூல்கள் விளக்கம் தருகின்றன. இச் சொல்லில் தீ-கொடு என்னும் வினையடி கொடுத்தலைக் குறிக்கின்றது. க்ஷி-அழி என்னும் மற்ற வினையடி அழித்தலைக் குறிக்கின்றது. ஞானமாகிய நற்பேற்றை அளித்து, மும்மலங்களை அழிப்பதனால் இது தீக்ஷா (தீட்சை) எனப்பட்டது.

 நீரினால் வெளி உடம்மைக் கழுவிச் சுத்தம் செய்யலாம்; உள்ளிருக்கும் உடம்பு சூக்கும உடம்பு; அதில் உள்ள தீய அழுக்குகளை, ஆசமனம், மந்திர செபம், அகமர்ஷணம் முதலிய அனுட்டானக் கிரியைகளினாலேயே போக்க முடியும். தீட்சை பெற்றிருந்தால், அனுட்டான சாதனைகளினால், தேகத்தையும் மனதையும் அடக்கி நம் வசப்படுத்தவும், தீச் செயல்கள் தோன்றாமலும் செய்ய முடியும்.

மச்ச முனிவர் தனது “மச்சமுனி திருமந்திரம் 800” என்ற நூலில் குறிப்பிட்டிருக்கு தீட்சை முறைகளைப் பற்றி பார்ப்போம். இவற்றினை “தசதீட்சை” என்கிறார் மச்ச முனிவர். இந்த தீட்சை முறைகள் மறைபொருளில் அருளப் பட்டிருக்கின்றன.

தனது தீட்சை முறைகளை மச்சமுனிவர் பின்வருமாறு துவங்குகிறார்..

திரமான தீட்சை செப்புவேன் கேளு
கரமான நெல்லிக்கனி யதுபோல
சரமான வாசி சங்கர கெவுரி
வரமான தீட்சை மகிழ்ந்திடக் கேளே.

இந்த படிமுறைகளை தினமும் காலையும் மாலையும் 108 தடவைகள் வீதம், தூய்மையான அறையில் பத்மாசனத்தில் இருந்து செய்தல் வேண்டும். முடியாதவர்கள் தங்களுக்கு வசதியான ஓர் நிலையில் உடலை தளர்வாக வைத்து கண்களை மென்மையாக மூடி, மனதினுள் இந்த மந்திரங்களை ஜெபிக்க வேண்டும் என்கிறார்.

முதலாவது தீட்சை
கேளு அம்மென்று கெடியாக மண்டலம்
நாளுடன் செபிக்கில் நமனது விலகுஞ்
சேலுடன் தேகந் திரமது வாகும்
மாலுடன் சித்தும் வந்திடுந் தானே.

முதல் தீட்சையாக "அம்" என்ற மந்திர உச்சரிப்பை ஒரு மண்டலம் தொடர்ந்து செபித்தால் எமன் அண்ட மாட்டானாம்.மேலும் இந்த மந்திரத்தை செபிப்பவர் உடலானது அழியாத நிலையை அடையும் என்கிறார்.மேலும் சில சித்துக்களும் கைவரப் பெறுமாம்.

இரண்டாம் தீட்சை
தானது ரெண்டாந் தீட்சையைக் கேளு
ஆனது உம்மென் றள்புட னீயும்
வானது நோக்கி மண்டலஞ் செபித்தால்
கோனவ னருள்தான் குடியிருப்பாமே.

இந்த தீட்சையில் "உம்" என்ற மந்திரத்தை வானத்தை நோக்கியவாறு ஒரு மண்டலம் செபித்து வந்தால் இறையருள் சித்தியாகுமாம்.நேற்றைய பதிவில் கூறியுள்ள முறைப்படி இந்த மந்திரத்தை செபித்து வர வேண்டும்.

மூன்றாம் தீட்சை
குடியினில் மூன்றாந் தீட்சையைக் கேளு
முடியினில் சென்று முழுமனதாக
அடியினில் சிம்மென் றன்புட னீயும்
வடிவுடன் நன்றாய் வணங்கிடு முத்தியே.

இரண்டாவது தீட்சையை நிறைவேற்றிய பின்னர் இந்த மூன்றாவது தீட்சையை துவங்க வேண்டும். இந்த தீட்சையில் "சிம்" என்ற மந்திரத்தை, மனதை ஒரு முகப் படுத்தி அர்ப்பணிப்புடன் ஒரு மண்டலம் செபித்து வர சித்தியாகும் என்கிறார்.

நான்காம் தீட்சை
முத்தியில் நாலாந் தீட்சையைக்கேளு
அத்த னருளை யன்புட நோக்கி
உத்தம நம்மென் றுரிமையாய்ச் செபிக்கில்
சித்தஞ் சிவமாய்த் தானவ னாமே.

மூன்றாவது தீட்சையை செபித்து அது சித்தியான பின்னர் இந்த நான்காம் தீட்சையை துவங்கிட வேண்டுமென்கிறார்.இந்த முறையில் "நம்" என்ற மந்திரத்தை ஒரு மண்டலம் தடையின்றி செபித்து வர செபிப்பவரின் சித்தம் சிவமயமாகுமாம்.

ஐந்தாம் தீட்சை
தானது அஞ்சாந் தீட்சையைக் கேளு
ஆனது தம்மென் நன்புட னீயும்
வானுட நோக்கி மகிழ்ந்துருக் கொண்டால்
ஊனுடன் தேகம் உறுதியு மாமே.

நான்காவது தீட்சையை செபித்து சித்தியடைந்த பின்னர், ஐந்தாவது தீட்சையாக "தம்" என்ற மந்திரத்தை முழுமனதுடன் ஒரு மண்டலம் செபித்து வர தேகம் உறுதி மிக்கதாகுமாம்.

ஆறாம் தீட்சை
உறுதியா மாறாந் தீட்சையைக் கேளு
நெறி தவறாமல் நேர்மையில் நின்று
சுருதியி லங்கென் றுடர்ந்துருக் கொண்டால்
பருதி போல் தேகம் பக்குவமாமே.

ஐந்தாவது தீட்சை செபித்து அந்த மந்திரம் சித்தியான பின்னர்,ஆறாவது தீட்சையாக "லங்" என்ற மந்திரத்தினை முழு மனதுடன் ஒருமண்டலம் செபித்து வர தேகமானது பருத்தியைப் போல பக்குவமாகுமாம்.

ஏழாம் தீட்சை
பக்குவ மேழாந் தீட்சையைக் கேளு
திக்கும் பொருளாய்த் தானேரம் மென்று
சிக்குமிடந் தன்னில் சென்றுரு செபித்தால்
திக்கு விசையஞ் செய்யலு மாமே.

ஆறாவது தீட்சை முறையாக செபித்து முடிந்ததும், ஏழாவது தீட்சையாக "ரம்" என்ற மந்திரத்தை முழு மனதுடன் ஒருமண்டலம் செபிக்க அனைத்து பகுதிகளுக்கும் சென்று வரும் வல்லமை சித்திக்குமாம்.


எட்டாம் தீட்சை
செய்யவே எட்டாந் தீட்சையைக் கேளு
பையவே பிரம பதியிட மாகிக்
கையது நெல்லிக்கனி யதுபோல
வையகந் தன்னிற் கம்மென நில்லே.

நில்லே நிலையில் நினைவுடன் நின்றால்
தொல்லைகள் அகலுஞ் சோதிகள் காணுந்
தில்லையில் வாழுந்த தெரிசனங் காணும்
நல்லது எட்டுச் சித்துகள் நன்மையே.

ஏழாவது தீட்சை செபித்து முடிந்ததும், எட்டாவது தீட்சையாக "கம்" என்ற மந்திரத்தை முழுமனதுடன் ஒரு மண்டலம் செபித்து வர தொல்லைகள் எல்லாம் நீங்குமாம். மேலும் சோதி தரிசனமும், தில்லையில் வாழும் ஈசன் தரிசனமும் கிட்டுமாம். இந்த எட்டு சித்துக்களும் கைவரப் பெறுவது மிக்க நன்மையாகும் என்கிறார் மச்ச முனிவர்.

ஒன்பதாம் தீட்சை
நன்மையா மென்பதாந் தீட்சையைக்கேளு
உன்னமரும் மெனவே யுகந்துருக் கொண்டால்
சின்மயமான தெரிசனங் காணும்
தன்மை யீதெனவே சாந்திட முத்தியே.

எட்டாவது தீட்சை செபித்து முடிந்ததும் ஒன்பதாவது தீட்சையாக "ரூம்" என்ற மந்திரத்தை முழுமனதுடன் ஒருமண்டலம் செபிக்க சின்மயமான சிவனின் தரிசனம் கிட்டுமாம் அவ்வாறு கிட்டினால், முக்தியும் கைகூடும் என்கிறார்.

பத்தாம் தீட்சை
சாந்திடப் பத்தாந் தீட்சையைக்கேளு
கூர்ந்திடு மந்தக் குறியை நீபார்த்து
ஆர்ந்திடு மம்மென றனுதினம் நோக்கில்
தீர்ந்திடும் பிறவித் திருவு மாமே.

ஒன்பதாவது தீட்சை சிறப்பாக செபித்து முடிந்ததும் பத்தாவது தீட்சையாக "மம்" என்ற மந்திரத்தினை முழுமனதுடன் ஒருமண்டலம் செபிக்க மறுபிறவி நீங்கும் என்கிறார். இதன் மூல பிறவா பேரின்பநிலை சித்திப்பதுடன், சொரூப சித்தியும் கைகூடுமாம்.


Manthiram, Poojas, Temple, Devotional news, Religious, Spiritual துர்கை வழிபாடு
, தமிழ் அர்ச்சனைகள் , ஸ்ரீ கணபதி , மந்திரங்கள், பூஜைகள், ஆன்மீக செய்திகள், ஆலயதரிசனம்.

Wednesday, March 15, 2017

Marriage Temple - Sri Kalyanasundareshwarar



சங்ககாலத்துக்குப் பிறகு வந்த அப்பர் பெருமான் திருநல்லூரை தம் சிரசுச் சிகரத்தில் சூடி மகிழ்ந்த விஷயம் நெகிழ்ச்சுக்குரியது.  திருநாவுக்கரசர் தன் நடை தளரும் வயதிலும் உழவாரப் பணியை வழுவாது செய்து வந்தார். திருச்சத்தி முற்றம் அடைந்து கொழுந்துச் சிவந்திருக்கும் ஈசனைக் கண்டு கண்ணீர் சொரிந்தார். ‘‘கொன்றை சூடிய வேந்தன் தம் நனைந்த திருவடிகளை தேவர்கள் தலையில் வைத்தீராமே!’’ என ஈசனை நோக்கி நெக்குருகினார். அந்த பாக்கியம் எமக்குக் கிடையாதா என ஏக்கமாய்க் கேட்டார். அந்நேரம் அசரீரியாய் ‘நல்லூர் வருவாயாக, விரைவாய் வருவாயாக’ என ஒருமுறைக்கு இருமுறை கட்டியம் கூறுவதுபோல் பகர்ந்தார் ஈசன். திருநல்லூர் திக்கு நோக்கி விரைந்தார். திருநல்லூர் நாயகன் கல்யாணசுந்தரேஸ் வரரின் முன்பு களிப்பெய்தி அமர்ந்தார். சிறு   குழந்தைபோல் தரையில் தவழ்ந்துபோய் கண்ணீரோடு ஈசனைப் பார்த்தார். ‘‘கூற்றம் எனும் எமன் வந்து குலைக்கும் முன் பெருமானே உம் பூவடிகளை என்   தலைமீது பொறிக்க மாட்டீரா’’ என கேவல் பொங்க அழுதார்.

நல்லூர் பெருமான் கனிந்தார். உமையன்னையும் உடன் அமர்ந்தாள். சட்டென்று ஈசன் லிங்கத்தினின்று ஜோதியாய் கிளர்ந்தெழுந்தான். வீரக்கழல் அணிந்த ஈசனின் திருவடி ஜோதியின் ஒளிபட்டுப் பிரகாசித்தது. நாவுக்கரசரின் முகம் ஒளிர்ந்தது. நெகிழ்ந்து கிடந்த அவர் தலைமேல் தம் திருவடிகளை மெல்ல இறைவன் பதிக்க பரவசத்தின் சிகரத்தைத் தொட்டார் அப்பர் பெருமான். புறவுலகின் நினைவை முற்றிலும் இழந்து அகத்தில் பொங்கி ஆர்ப்பரித்த ஈசனின் அருட் சமுத்திரத்தில் கரைந்தார். ஈசன் மெல்ல சுருங்கி லிங்கத்தினுள் ஒடுங்க, அகம் நிறைந்த நாவுக்கரசர் குழந்தைபோல தளர் நடை நடந்து சந்நதிக்கு அருகே அமர்ந்தார். உள்ளுக்குள் பெய்த அருட்பெருமழையை பாக்களாக மாற்றி திருப்பதிகங்களாக திருவாய் மலர்ந்தருளினார். ஒவ்வொரு பதிகத்திலும் ‘நலம் கிளரும் திருவடி என் தலைமேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்லவாறே’ என்று தம் சிரசில் ஈசன் சூடிய திருவடியை நினைந்து நினைந்து நெகிழ்கிறார்.

அதோடு விடவில்லை; நம்மீது கருணை கொண்டவரான அவர், ‘‘எம் தலையில் பதித்ததுபோல் உம்மை நாடிவரும் பக்தர் பெருமக்களின் தலையிலும் திருவடிபதிக்க வேண்டுகிறேன்’’ என வினயமாய் கேட்க ஈசனும் சரியென்று உகந்தான். இத்திருநல்லூர் நான்கு ராஜவீதிகளுடன் சப்தசாகரம் எனும் ஏழுகடல் தீர்த்தத்தோடு விளங்குகிறது. ஏழுநிலை மாடத்துடன் ராஜகோபுரம் வானளாவி உயர்ந்து நிற்கிறது. உட் கோபுரவாயிலுக்குள்ளே இடதுபுறம் அமர்நீதிநாயனாரும், கையில் மழலையுடன் அவர் துணைவியாரும் நல்லூர் பெருமானை வந்து தரிசிக்க வரும் பக்தர்களை வெகு பவ்யமாக வரவேற்கிறார்கள். சிவத்தொண்டர்களுக்கு   ஆடை அளித்து, அவர்கள் பசியாற இன்னமுது படைப்பதையே தனது வாழ்க்கையாக்கிக் கொண்ட குடும்பம் அது. நல்லூர் பெருமானும் வேதியர் வடிவில்   விளையாடல் புரிந்து தன்னோடு சேர்த்துக் கொண்டார் என்கிறது பெரிய புராணம். இத்தலத்திற்கு பெரும் பெருமை சேர்த்த இந்த திவ்ய தம்பதியை சிரம்தாழ்த்தி வணங்கி, உட்பிராகாரம் நோக்கி நகரலாம்.

அந்த செங்குத்தான மாடக்கோயில் படிகளில் ஏறும்போதே செங்கணானின் நினைவு நம் நெஞ்சில் நிழலாடும். கல்யாணசுந்தரேஸ்வரர் சந்நதியை நெருங்க சாந்நித்யம் நெஞ்சை நிறைக்கும். சுயம்புவாய் பொங்கிய லிங்கம், நம்மை சிலிர்த்திட வைக்கும். இன்றும் இந்த லிங்கத்தினுள் சப்தரிஷிகளும் பிரளயத்தின்போது ஒடுங்கிய ஏழு துளைகள் காணப்படுகின்றன. அதுமட்டுமல்லாது பிரபஞ்சத்தின் மாற்றத்திற்குக் காரணமாக இத்தல ஈசன் விளங்குவதால், லிங்கத்தின் நிறம் ஆறு நாழிகைக்கு ஒருமுறை மாறுவது பார்க்க மனம் சிலிர்க்கும். பார்த்துக்கொண்டிருக்கும்போதே அழகாய் நிறம் மாறும் அற்புதம் மனதைக் கொள்ளை கொள்ளும். காலைமுதல் தாமிரம், இளம் சிவப்பு, உருக்கிய தங்கம், கரும்பச்சை, இன்னதென்று சொல்லமுடியாத வண்ணம் என்று இரவுவரை தொடர்ச்சியாக நிறம்   மாறிக்கொண்டே இருக்கும். அதனாலேயே பஞ்சவர்ணேஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள். நாவுக்கரசர் ஈசனிடம் வேண்டிக்கொண்டது போல, இன்றும் பெருமாள் கோயிலில் சடாரி கொண்டு ஆசியளிப்பதுபோல, ஈசனின் திருவடிகளை பக்தர்களின் தலையில் பதித்து ஆசியளிப்பது இங்கு நிரந்தர வழக்கமாக உள்ளது.

சிவன் சந்நதிக்கு அருகிலேயே மலைமகளான கிரிசுந்தரி அருள் அமுதமாக நிற்கிறாள். உயர்ந்த திருவுருவம் கொண்டு, அருளைப் பொழிவதில் மேருவை விட உயர்ந்தவளாய் விளங்குகிறாள். நல்லூரின் புகழ்சொல்லும் இன்னொரு விஷயம், இத்தலத்து பிராகாரத்தில் அமைந்துள்ள நல்லூர் அஷ்டபுஜமாகாளி. பிரளயத்தோடு காளிக்கு நெருங்கிய தொடர்பிருப்பதால் இங்கு அமர்ந்துள்ளாள். காளி என்றாலே கோரமுகமும், ஆவேசமும்தான் நினைவுக்கு வரும். ஆனால், இம்மாகாளி புன்னகை பூக்கும் இனிய நாயகி. மூத்த சுமங்கலி போன்ற மஞ்சள் பூசிய சாந்த முகம் கொண்டவள். ஆக்ரோஷமே இல்லாது அமைதியாய் அமர்ந்திருப்பாள். ஆகவே, மழலைச் செல்வம் இல்லாதவர்கள் காளியை வேண்டிக் கொண்டு, அவளருளால் நிறைசூல் கர்ப்பிணியாக மாகாளி எதிரே அமர்ந்து வளைகாப்பு விழா   செய்து கொள்கிறார்கள். அவளின் இரு கைகளிலும் வளையல்களைப் பூட்டி அழகுபார்க்கிறார்கள்.

அதுமட்டுமல்லாது, கல்யாண சுந்தரேஸ்வரர் அருளால் திருமணமான தம்பதிகள் ‘குழந்தைச் செல்வம் தா தாயே’ என்று கைகூப்பி வேண்டுவதை இங்கு நித்தமும் காணலாம். குந்திதேவி சப்த சாகர தீர்த்தத்தில் நீராடி பூஜித்த லிங்கத்தை கோயிலின் உட்பிராகாரத்தில் காணலாம். இரண்யனை வதம் முடிக்கும் முன்பு, எவ்வுருவம் தாங்கி சம்ஹாரம் செய்வது என்று இத்தலத்து ஈசனிடம் வினவ நரசிங்கனாக செல் என்று ஆசி கூறினாராம். அதற்கு ஆதாரமாக கருவறை விமானத்தின் பின்புறம் நரசிம்மமாகக் காட்சி அளிக்கும் சிற்பம் இத்தலத்து அற்புதம். மேலும், மேலும் நூறாயிரம் விஷயங்களைக் கொட்டும் கோயில் இது. இப்பெருங்கோயில் கும்பகோணம்-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் சுந்தரபெருமாள்கோயில் எனும் ஊருக்கு அருகே உள்ளது. நல்லூர் செல்வோம், நல்வாழ்வு   பெற்றிடுவோம்.
AstrologyPalan, Jathagam, jathagapalan, birthdayhoroscope, Josiyam, stars, gurutransit, rahuketu, sanipeyarchi, tamilnewyearrasipalan, Josiayam, subhamuhurtamdates, dailyhoroscope, horoscopetoday, numerology, horoscope, horoscopestars, freehoroscopeonline, horoscopereading, astrologyhoroscope, mobilehoroscope, freeyearlyhoroscope, yearlyhoroscopes, joshiyam, rahuketutransit, rahuketupeyarchi, transitastrology, saturntransit, jupitertransit, subhamuhurthadays, subhamuhurtham, subhamuhurthamdates, jathagakanippu, horoscopematching, raasi, rashinakshatra, raasiporutham, rasipalan, kalyanaporutham, vastu, vaastu, vastutips, vaastuforhome, vastuhouse, vaastushastra, mesham, rishabam, mithunam, kadagam, simmam, kanni, thulaam, viruchigam, dhanusu, magaram, kumbam, meenam, Horoscopematch, MatchMaking, RasiMatch, MatchPalan, AstrologyResearch, VirtualPooja, Palmistry, monthlyhoroscopes, AstrologyRasipalan, dailyastrology, weeklyhoroscopes, loveastrology, birthastrology, astrology, horoscopes, aries, taurus, gemini, cancer, leo, virgo, libra, scorpio, sagittarius, capricorn, aquarius, pisces, Freedailyhoroscopes, astrological, astrologicalsigns, astrologer, astrologicalsign, tarot, DailyHoroscopes, YearlyHoroscope, monthlyhoroscope, weeklyhoroscope, palan, jathaga, birthday, guru, transit, rahu, ketu, sani, peyarchi, Josiyar, daily, today, weekly, online, reading, mobile, saturn, subha, muhurtham, days,dates, kanippu, matching, rashi, nakshatra, porutham, rasi, kalyana, Jathaka, Match, Making, monthly, birth.