Slider

Rasipalan

Tirupur Astrologer Numerology Astrology Tamil Astrology Horoscope in Tamil Jothidam astrology predictions consultation Future Astrology Hindu astrology Indian Jadhagam Best Astrologer famous astrologer in tirupur astrologer tirupur famous astrologer in tamilnadu astrologer Traditional consultations salem coimbatore Tirupur Madurai Gopichetipalayam Avinashi sathy Trichy erode jothidar erode astrologer tamil jothidar tirupur tamilnadu jothidar.jathagam parpavar jathaga porutham josiyam parpavar best jothidar tirupur tirupur jothidar tirupur jothidam Most popular Josiyam mobile horoscope Online Astrology online Horoscope tirupur astro tirupur jathagar jothidam tirupur jothidar in jothidar in tirupur prasanna jothidam tirupur vastu jothidar nalla astrologer tirupur Rasi palangal sanipeyarchi palangal guruperchi palangal Tamil-prediction Horoscope in Tamil Tamil Jothidam Astrologer in Tamilnadu Tamil Jothidar Astrologer in Ariyalur Astrologer in Chennai Astrologer in Coimbatore Astrologer in Cuddalore Astrologer in Dharmapuri Dindigul Astrologer in Erode Astrologer in Kanchipuram Kanyakumari Astrologer in Karur Astrologer in Krishnagiri in Madurai Astrologer in Nagapattinam Namakkal Astrologer in Nilgiris Astrologer in Perambalur Pudukkottai Astrologer in Ramanathapuram Astrologer in Sivaganga Astrologer in Thanjavur Theni Astrologer in Thoothukudi Tiruchirappalli Astrologer in Tirunelveli Astrologer in Tiruvallur Tiruvannamalai Astrologer in Tiruvarur Vellore Astrologer in Viluppuram Astrologer in Virudhunagar Chart Astrology Consultation Astrology Horoscope Astrology online Astrology Predictions Services Best astrologer Best astrologer tirupur Best Jothidar Tirupur Jothidar famous astrologer in tirupur Good Astrologer In tirupur Good Astrologer In Tamil Nadu Tamil Jothidam Vedic astrology Specialist in Astrology Greatest Computer Astrologer in tirupur famous astrologers in Best astrologers astrologers in tirupur astrologers experts in tirupur astrologers experts in Tamil Nadu Specialist in Astrology Tamil Nadu Astrologers astrologers experts in tirupur chennai komarapalayam best astrologer chennai numerology astrology in tamil numerology

Our service running text

கிரக தோஷங்களினால் காதல் பிரச்சினை, திருமணத்தடை, கணவன் மனைவி பிரச்சினை, குழந்தையின்மை, தொழில் நஷ்டம், வேலை வாய்ப்பின்மை, பதவி உயர்வு தடங்கள், எதிரிகள் தொல்லை, கடன் தொல்லை, மனம் நிம்மதி யின்மை, நோயினால் பல்வேறு உடல் உபாதைகள் போன்ற அனைத்தும் ஏற்ப்படும். அவற்றிலிருந்து விடுபட்டு நீண்ட ஆயுளும் நிறந்த செல்வமும் பெற்று வளமுடன் வாழ எம்மை அனுகவும். | ஜோதிடம் | ஆன்மிகம் | மந்திரம் | திருமண பொருத்தம் | ஜாதகம் | ஜாமக்கோள் ஆருடம் | ராசி பலன் | சந்திர நாடி | பிருகு நாடி | ஜெம்ஸ் | பட்சி | டாரட் | குரு நாடி | சனி நாடி | மருத்துவ ஜோதிடம் | கர்மா பரிகாரம் | தாம்பூல பிரசன்னம் | கேபி | சோழிய பிரசன்னம் | தேவபிரசன்னம் | எண் கணிதம் | பெயர் பட்டியல்|

Monday, December 28, 2015

ஆன்மீகம், தியானம் செய்வது எப்படி?, தியானம் செய்யும் முறை, how to meditat...

காரியத்தில் வெற்றி பெற, இன்றைய நாள்பலன், நல்ல நேரம்பார்க்கும் முறை

தமிழர் ஒரு நாளினை தற்காலத்தில் உள்ளதைப் போல நொடி, நிமிடம், மணிநேரம் என்று அளக்காமல் தற்பரை, வினாடி, நாழிகை, ஓரை, பொழுது என அளந்தனர்.



ஒரு நாளின் பொழுதுகளை ஆறு சிறு பொழுதுகளாகவும், ஒவ்வொரு சிறும்பொழுதும் 4 ஓரைகளாகவும் பகுத்தனர். மொத்தம் ஒரு நாள் 24 ஒரைகளைக் கொண்டிருக்கும். சூரியன் உதிக்கும் நேரத்திலிருந்து(காலை) ஒரு நாள் தொடங்குகிறது. அந்நேரத்திலிருந்து தான், அந்நாளின் ஓரையும் கணக்கிடப்படுகிறது. ஒரு நாளின் தொடக்க ஓரை எவ்வகை ஓரையாக வருகிறதோ அந்நாள் அவ்வோரையின் பெயரில் அழைக்கப்படுகிறது. உதாரணமாக சனி ஓரை முதலில் தொடங்கினால் அன்று சனிக்கிழமை.இவ்வாறுதான் கிழமை முறை வந்திருக்க வேண்டும்.

அதன் பின் ஒவ்வொரு மணி நேரமும் மேலே கூறப்பட்டுள்ள வரிசைப்படி ஓரை கணக்கிடப்படும். உதாரணமாக, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ஒரு மணி நேரம் (6-7 மணி) சூரியனின் ஓரை. இதையடுத்து 7-8 மணி வரை சுக்கிரன்(வெள்ளி) ஓரை, 8-9 மணி வரை புதன் ஓரை, 9-10 வரை சந்திரன் ஓரை, 10-11 வரை சனி ஓரை, 11-12 மணி வரை குரு(வியாழன்) ஓரை, 12-1 மணி வரை செவ்வாய் ஓரை. இதையடுத்து மீண்டும் சூரியன் ஓரை துவங்கும். இதேபோல் செவ்வாய்க்கிழமை என்றால் அன்று காலை 6 முதல் 7 மணி வரை செவ்வாய் ஒரை, புதன்கிழமை என்றால் காலை 6-7 மணி வரை புதன் ஓரை. பொதுவாக காலை 6 மணி என்பதனை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டு ஓரைகள் கணக்கிடப்படுகின்றன.

ஒரு நாளில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் அடுத்து என்ன நடக்கும் என கணிதம் செய்திட இந்த ஓரைகள் பயன்படுகின்றன..ஒரு நல்ல காரியம் செய்ய அசுப கிரக ஆதிக்கம் பெற்ற ஓரைகளை தவிர்த்து ,சுப கிரக ஓரைகளில் அக்காரியத்தை நம் முன்னோர் செய்து வந்தனர். பொண்ணு பார்க்க போனால்கூட சுக்கிர ஓரையில் போனால் நல்லது நடக்கும்...

ஒரு காரியத்தை செய்ய நினைக்கும்போது, அந்த நேரம் ராகு காலமா, எமகண்டமா,குளிகை நேரமா..அன்று என்ன கிழமை, திதி என்ன,நட்சத்திரம் என்ன ,என ஜோதிடரிடம் ஆலோசிக்க வேண்டும்..ஆனால் அவசரத்துக்கு, நல்ல ஓரையா இருந்தால் போதும் என முடிவு செய்து விடுவர்.

எந்த காரியத்துக்கு என்ன ஓரை என கணக்கு இருக்கிறது.... சனி, செவ்வாய், சூரியன் ஓரைகள் அசுப ஓரையாக இருந்தாலும் முற்றிலும் தவிர்ப்பதில்லை... அரசாங்க காரியம் நடக்க வேண்டும் எனில் சூரிய ஓரையில் முயற்சிக்கலாம்... நெருப்பு, கோர்ட், வழக்கு சார்ந்த பிரச்சினைகள், எதிரி சார்ந்த பிரச்சினைகள் என்றால் செவ்வாய் ஓரையில் செய்யலாம்..

சுபகாரியம் செய்யும்போது முக்கியமான விசயம் ஒருவரிடம் பேச முயற்சிக்கும்போதும், இப்போது ராகு காலமா, எமகண்ட நேரமா,சுப கிரகத்தின் ஓரையா என ஒருமுறை காலண்டரில் கவனிப்பது நல்லது.சுக்கிரன்,புதன், குரு இவற்றின் ஓரைகள் எல்லா சுப காரியங்களுக்கும் சிறப்பு.

சிலர் மிதுன லக்னத்துக்கு யோகாதிபதி, லக்னாதிபதி புதன் எனில் புதன் ஓரையையே பயன்படுத்தி வெற்றி பெறுவர்.  இவ்வாறு நுணுக்கமாக எல்லோராலும் பார்க்க முடியாது. அவர்கள் சுக்கிரன்,புதன், குரு ஓரையை கவனித்தாலே போதுமானது.

Hindu temples | Temples in India | Temple 360 view | பக்தி பாடல்கள் | De...

Wednesday, November 18, 2015

மீனம் லக்னத்திற்குறிய தொழில்கள்;

மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி குரு பகவானே பத்தாம் அதிபதியாகவும் இருப்பது சிறப்பாகும். 10ம் அதிபதி குரு பகவான் ஆட்சி உச்சம் பெற்று பலமாக அமைந்து விட்டால் செல்வம், செல்வாக்கு, சமுதாயத்தில் கௌரவமான பதவியினை அடையும் யோகம் உண்டாகும். அது மட்டுமின்றி மற்றவர்களுக்கு ஆலோசனை கூறுவதில் வல்லவராகவும் வழி நடத்துவதில் கைதேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள். பேச்சால்,வாக்கால் சம்பாதிக்கும் யோகம், ஆசிரியர் பணி, கல்வி நிறுவனங்களில் பணபுரியக்கூடிய வாய்ப்பு, வங்கிப் பணி போன்றவை சிறப்பாக அமையும். 10ல் குரு, புதன் சேர்க்கை பெற்றாலும் மேற்கூறிய பலன்களே உண்டாகும்.10ம் அதிபதி குரு பகவான் தனக்கு நட்பு கிரகங்களான சூரியன்,செவ்வாய் சேர்க்கை பெற்றாலும் 10ல் சூரியன், செவ்வாய் திக் பலம் பெற்று அமைந்திருந்தாலும் அதிகாரமிக்க பதவிகளை அடையும் வாய்ப்பு, அரசு அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.  அதுபோல சூரியன்,செவ்வாய் சேர்க்கை பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றால் கௌரவமான பதவிகள் தேடி வரும். குரு,சனி, செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தாலும் குரு, சனி, செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தாலும் குரு, சனி, சந்திரன் சேர்க்கை பெற்றிருந்தாலும் பிறந்த ஊரை, விட வெளியூர், வெளிநாடுகள் மூலம் அனுகூலங்கள், பயணங்கள் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.குரு, சந்திரன், கேது சேர்க்கை பெற்று 10 ல் இருந்தாலும் திரிகோண ஸ்தானங்களில் இருந்தாலும் சமூக நலப் பணிகளில் ஈடுபாடு, மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய பணிகள் செய்யும் அமைப்பு, ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு பணிபுரியும் வாய்ப்பு உண்டாகும்.மக்கள் தொடர்புக்கு காரகனான சனி பகவான் 10ல் அமையப் பெற்று குரு, சூரியனும் பலம் பெற்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய அளவிற்கு உயர்ந்த பதவிகளை அடைய முடியும். இது மட்டுமின்றி சொந்த தொழில் செய்யக் கூடிய  வாய்ப்பு, இரும்பு, விவசாயம், எண்ணெய், தொடர்புடைய தொழில், பல வேலையாட்களை வைத்து வேலை வாங்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.சூரியன் 10ல் அமைந்தால் அரசு சார்ந்த துறைகளிலும், செவ்வாய்10 ல் அமைந்தால் நிர்வாகத் தொடர்புடையத் துறைகளிலும் மற்றும் பூமி, மனை, ரியல் எஸ்டேட், போன்றவற்றிலும் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். சுக்கிரன் 10ல் அமைந்தால் குருவுக்கு சுக்ஙகிரன் பகை கிரகம் என்றாலும் ஆடை, ஆபரணம்,கலை, இசை துறைகளிலும், பெண்கள் உபயோகிக்கக்வடிய பொருட்கள், டிராவல்ஸ் போன்றவற்றின் மூலமாகவும் சம்பாதிக்கும் வாய்ப்பு அமையும்.  ராகு 10ல் இருந்தால் மருந்து,கெமிக்கல் தொடர்புடையவற்றிலும்  10 ல் சந்திரனுடன் ராகுஅல்லது கேது சேர்க்கைப் பெற்றிருந்தால் மருத்துவத் துறையிலும் முன்ன«ற்றம் கொடுக்கும். 10 ல் புதன் அமைந்தால் கணக்கு, கம்ப்யூட்டர் தொடர்புடைய துறைகளிலும் சம்பாதிக்கும் யோகம் உண்டாகும்.10 ல் புதன் அமைந்தால் புதன் 7ம் அதிபதி என்பதால் நெருங்கியவர்களுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்வது அல்லது உத்தியோகம் செய்வது நல்லது. குறிப்பாக மீன லக்னம் உபய லக்னம் என்பதால் கூட்டுத் தொழில் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. அப்படியே செய்ய வேண்டியிருந்தாலும் மேலே கூறியது போல மனைவி மற்றும் மிக நெருங்கியவர்களுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்வது உத்தமம். அதுவே, குரு பகவான் பகை நீசம் பெற்று பாவ கிரக சேர்க்கையுடன் பலமிழந்திருந்தாலும்,அஸ்தங்கம் பெற்றிருந்தாலும், 6,8,12 ல் மறைந்திருந்தாலும் நிலையான வருமானம் இல்லாமல் கஷ்ட ஜீவனம் செய்யவேண்டியிருக்கும். அதிலும் குறிப்பாக 10ம் வீட்டையோ 10ம் அதிபதி குருவையோ சனி பார்வை செய்தால் தகுதிக்கு குறைவான வேலை கிடைக்கப் பெற்று வாழ்க்கையில் பல சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்.

கும்பம் லக்னத்திற்குறிய தொழில்கள்:

கும்ப லக்னத்திற்கு ஜீவன ஸ்தானாதிபதி செவ்வாயாவார். செவ்வாய் பகவான் ஆட்சி உச்சம் பெற்று குரு போன்ற சுப கிரகங்களில் பார்வை பெற்றால் சமுதாயத்தில் ஓர் கௌரவமான நிலையினை அடையக்கூடிய யோகம் உண்டாகும். நவகிரகங்களில் நிர்வாகத்திற்கு காரகனான செவ்வாய் சிறந்த நிர்வாகத் திறமைக்கும, போலீஸ் இராணுவம் பாதுகாப்பு போன்ற துறைகளில் உயர் பதவிகள் வகிப்பதற்கும் காரண காத்தாவாக விளங்குகிறார். செவ்வயர் பலமாக அமைந்து சூரியன் சேர்க்கை பெற்று சுபர் பார்வையுடன் அமையப் பெற்றால் அரசு, அரசு சம்பந்தப்பட்ட துறைகளில் உயர் பதவிகளை வகிக்கும் யோகம்,உடன் குருவும் சேர்க்கை பெற்றால் அரசாங்க அதிகாரியாகும் யோகம், பலரை வழி நடத்திச் செல்லக்கூடிய  அமைப்பு உண்டாகும். குறிப்பாக செவ்வாய், சூரியன், குரு சந்திரன் போன்ற நட்பு கிரகங்களின் சேர்க்கை பெற்று பலமாக இருந்தால் சமுதாயத்தில் மற்றவரால் மதிக்கப்படக்கூடிய அளவில் பதவிகளை வகிக்கும் யோகம் உண்டாகும்.

  செவ்வாய், சூரியன் சேர்க்கைப் பெற்று உடன் சந்திரன் ராகுவும் அமையப் பெற்றால் மருத்துவத்துறையில் சாதனை செய்யக்கூடிய அமைப்பு, சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக விளங்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். செவ்வாய், சந்திரன், ராகு அல்லது கேது சேர்க்கை பெற்றிருந்தால் மருந்து கெமிக்கல்,இராசாயனம் தொடர்புடைய துறைகளிலும், வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய தொழில்களிலும் சம்பாதிக்கும் யோகத்தை கொடுக்கும்.செவ்வாய் பலமாக அமைந்தவர்களுக்கு இயற்கையிலேயே அதிகாரமிக்க குணம் இருக்கும் என்பதால் செவ்வாய், சந்திரன்,குரு சேர்க்கை பெற்றிருந்தாலும், ஒருவருக்கொருவர் கேந்திர திரிகோணங்களில் அமையப்பெற்றாலும் அதிகாரமிக்க உயர்பதவிகளை வகிக்கக்கூடிய அற்புத யோகம் உண்டாகும்.


செவ்வாய், சூரியன், புதன் சேர்க்கைப் பெற்றிருந்தால் சிறந்த பொறியாளராகும் யோகம், கம்ப்யூட்டர் துறைகளில் சாதனை செய்யக்கூடிய திறன் உண்டாகும். செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை பெற்று கேந்திர திரிகோணங்களில் பலமாக அமையப் பெற்றால் கலை, வியாபாரம், சொந்தத் தொழில் மூலம் சம்பாதிக்கும் யோகமும், செவ்வாய் சுக்கிரனுடன், சந்திரன் சேர்க்கை பெற்றால் வெளியூர் வெளிநாடுகளில் மூலம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பும், 10 ல் குரு அமைந்து உடன் புதன் சேர்க்கையும் ஏற்படுமேயானால் மற்றவர்களுக்கு உபதேசம் செய்யும் வாய்ப்பு, பள்ளி,கல்லூரிகளில் பணி புரியும் வாய்ப்பு உண்டாகும்.


அதுவே செவ்வாய், ராகு, கேது போன்ற பாவிகள் சேர்க்கை பெற்று சுபர் பார்வையின்றி இருந்தாலும், செவ்வாய் பலமிழந்திருந்தாலும் சனி பார்வை 10ம் வீட்டிற்கு இருந்தாலும் வாழ்வில் ஒரு நிலையான தொழில் இல்லாமல் எதிலும்எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். 10ல் ராகு அமைந்து உடன் சனி இருந்து சுபர் பார்வையின்றி இருந்தால் சட்டத்திற்குப் புறம்பான தொழில் செய்து சம்பாதிக்க வேண்டியிருக்கும்.

மகரம் லக்னத்திற்குறிய தொழில்கள்:

மகர லக்னததில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி சுக்கிரனாவார். 10ம் வீட்டிற்கு  அதிபதியான சுக்கிரபகவானே 5ம் வீட்டிற்கும் அதிபதியாகி, லக்னாதிபதி சனிக்கும் நட்பு கிரகமாக விளங்குவது அற்புதமான அமைப்பாகும்.  10ம் அதிபதி சுக்கிரன் தனக்கு நட்பு கிரகங்களான புதன், சனி சேர்க்கை பெற்று உடன் ராகும் இணைந்து இருந்தால் ஜாதகருக்கு செல்வம், செல்வாக்கு,தொழில் ரீதியாக உயர்வுகள், பெயர், புகழ் போன்ற யாவும் சிறப்பாக அமைந்து சுகவாழ்க்கை வாழக்கூடிய யோகம் உண்டாகும். சனி, புதன், சுக்கிரன் சேர்க்கையோ, சுக்கிரன், புதன் இணைந்து குரு பார்வையோ அமைந்து சுக்கிரன், புதன், சனி போன்றவற்றில் ஏதாவது ஒரு கிரகத்தின் திசை நடந்தால்,ஜாதகர் சொந்தமாக தொழில் செய்து, மிகச் சிறந்த செல்வந்தராக வாழக்கூடிய யோகம் உண்டாகும். பொருளாதார ரீதியாக உயர்வும், சமுதாயத்தில் ஓர் கௌரவமான நிலையும் கிட்டும். அரசு, அரசு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு காரகனான சூரியன் மகரலக்னத்திற்கு 10ம் வீடான துலாமில் நீசம் பெறுவதால் இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அரசுத் துறையைவிட தனியார் துறைகளிலும், சுய தொழில்களிலும் சம்பாதிக்க கூடிய வாய்ப்பே அதிகமாக இருக்கும். 10ல் சூரியன் நீசம் பெற்றாலும் உடன் சுக்கிரன் ஆட்சிப் பெற்று அமைந்து நீசபங்க ராஜயோகம்உண்டானால் அரசு சம்பந்தப்பட்ட துறைகளில் ஓரளவுக்கு அனுகூலத்தை அடைய முடியும். சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று உடன் சுக்கிரனும் 10ல் இருந்தால் அரசு பணி அமையக்கூடிய வாய்ப்புகள் அமையும். சனி புதன், சுக்கிரன்,சேர்க்கை பெற்று 10 ல் அமைந்தால் ஒன்றுக்கும் மேற்பட்டதொழில்கள் செய்து அபரிமிதமான செல்வ சேர்க்கையினை பெறக்கூடிய அமைப்பு உண்டாகும். 

சந்திரன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்றால் கூட்டுத் தொழில், கலை, இசை போன்றவற்றின் மூலமாக அனுகூலங்கள், சுக்கிரன் சந்திரனுடன், புதனும் குருவும் சேர்க்கை பெற்றால் வெளியூர், வெளிநாடுகள் மூலம் தொழில்செய்யக்கூடிய வாய்ப்பு, சுக்கிரன, புதன் சேர்க்கைப் பெற்றால் கணக்கு, கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட துறை, எழுத்துத் துறை போன்றவற்றில் சம்பாதிக்கும் யோகம், சுக்கிரன் குரு சேர்க்கைப் பெற்றால் மற்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கக்கூடிய துறைகளில் உயர்வான அந்தஸ்து அமையும். சுக்கிரன் வலுவாக அமையப் பெற்றால் ஆடை, ஆபரணங்கள், பெண்கள் உபயோகப்படுத்தும் பொருட்கள் போன்றவற்றின் மூலம் சம்பாதிக்கக்கூடிய  வாய்ப்பு உண்டாகும். மகர லக்னத்திற்கு 10ல் மக்கள் செல்வாக்கு காரகனாகிய சனி பகவான் உச்சம்பெறுவதால்  ஒருவரின் ஜாதகத்தில் சனி உச்சம் பெற்று சூரியனும், செவ்வாயும் பலமாக அமைந்திருந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கக்கூடிய உயர் பதவிகள் தேடி வரும். சந்திரன், செவ்வாய், சூரியன் சேர்க்கை பெற்று 10ல் இருந்தால்மருத்துவத்துறையில் சாதனை செய்ய முடியும். சந்திரன், ராகு சேர்க்கைப் பெற்றிருந்தால் மருந்து, கெமிக்கல் துறையில் வல்லுனராக முடியும். 10ம் வீட்டில் குரு, புதன் இணைந்திருந்தால் வாக்கல், பேச்சால் சம்பாதிக்கும் யோகம், ஆசிரியர் பணி, வக்கீல் தொழில் அமையும்.



அதுவே, சுக்கிரன் வலு இழந்து சனி, ராகு சேர்க்கை பெற்று சுபர் பார்வையின்றியிருந்தால் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலை, சுக்கிரன், பலமிழந்து செவ்வாய் ராகு, கேது சேர்க்கை பெற்றால் அடிமைத் தொழில் செய்யும் நிலை, சுக்கிரன் பலமிழந்து சனி, செவ்வாய், ராகு, கேது சேர்க்கைப் பெற்றால் தவறான பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி பொய் சொல்லக்கூடிய சூழ்நிலையால் தொழிலில் நிறைய இழப்புகளை சந்திக்க நேரிடும். 10ல் பாவிகள் அமையப் பெற்று சுபர் பார்வையின்றி இருந்தால் பொய் பித்தலாட்டம் செய்துசம்பாதிக்கக்கூடிய அவல நிலை உண்டாகும்.

தனுசு லக்னத்திற்குறிய தொழில்கள்:

தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு புதன் 10ம் அதிபதியாவார். பொதுவாகவே ஒருவர் ஜாதகத்தில் புதன் ஆட்சி உச்சம் பெற்று சுபர் பார்வையுடன் பலமாக அமைந்திருந்தால் அவருக்கு நல்ல அறிவாற்றல், நினைவாற்றல், எதிலும் சிந்தித்து  செயல்படக்கூடிய திறன்போன்ற யாவும் சிறப்பாக இருக்கும். புதனேஜீவனாதிபதியாக விளங்குவதால் அவர் பலம் பெற்றிருந்தால் செய்யும் தொழில், உத்தியோக ரீதியாக சிறப்பான உயர்வினை அடைய முடியும். புதன் பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரன், சனி சேர்க்கையுடன் லக்னாதிபதி குருவின் பார்வையும் பெற்று அமைவாரேயானால் அவருக்கு நிலையான தொழிலும்,சமுதாயத்தில் ஓர் உன்னதமான நிலையும் உண்டாகும். புதன் பலம் பெற்று சூரியன், செவ்வாய் 10 ல் அமையப் பெற்றால் அரசு,அரசு சார்ந்த துறைகளில் உயர் பதவிகளை வகித்து சிறப்பான வருமானத்தை ஈட்ட முடியும். மக்கள் செல்வாக்கு  காரகன் எனவர்ணிக்கக்கூடிய  சனி வலிமை பெற்று, 10 ல் சூரியன் செவ்வாய் இருந்தால் அரசாங்கத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கக்கூடிய கௌரவமானப் பதவிகள் தேடி வரும். அதிகாரமிக்க பதவிகள் அமையும். மக்களிடம் செல்வம், செல்வாக்கு உயரும். 10ல் சூரியன் செவ்வாய் இருந்தாலும் புதன் சூரியன், செவ்வாய்சேர்க்கை பெற்றாலும் அரசு, அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

புதனுடன் 9,12 க்கு அதிபதிகளான சூரியன், செவ்வாய் இணைந்து9,12 ல் சந்திரன், ராகு போன்ற கிரகங்கள் அமையப் பெற்றால்,கடல் கடந்து அந்நிய நாடுகளுக்குச் சென்று சம்பாதிக்கக்கூடிய அற்புத அமைப்பு உண்டாகும். அதுபோல புதன் பலம் பெற்று உடன் சனி, சுக்கிரன் சேர்க்கையுடன் வலிமையாக அமையப்பெற்றால், சொந்தத் தொழில் செய்யக்கூடிய யோகம்,வியாபாரத்தில் லட்ச லட்சமாக சம்பாதித்து கொடி கட்டி பறக்கும் யோகம் உண்டாகும்.

புதன், செவ்வாய் சேர்க்கை பெற்றால் பூமி, வேளாண்மை,விவசாய தொடர்புடைய தொழில், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும். 10ல்  புதன் சந்திரன் சேர்க்கை பெற்று  பலம் பெற்றால் ஜல தொடர்புடைய தொழில் செய்யக்கூடும்.

புதனுடன் சனி சேர்க்கைப் பெற்றால் இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்யக்கூடிய வாய்ப்பும், சனி பலமிழந்திருந்தால் அடிமைத் தொழில் செய்யக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். புதன், குரு சேர்க்கை பெற்றால் வக்கீல் தொழிலில் அரசாங்க ஜீவனம் உண்டாகும். புதன் சுக்கிரன் சேர்க்கை பெற்று கேந்திர திரிகோணங்களில் அமையப் பெற்று குரு பார்த்தால் பெண்கள்வழியில் முன்னேற்றம், நல்ல தன லாபத்தை அடையக்கூடிய வாய்ப்பு உண்டாகும. புதன், சுக்கிரன், சந்திரன் இணைந்து ரிஷபம்,கடகம், துலாமில் அமையப் பெற்றால் கலை, இசை,இலக்கியத்துறைகளில் புகழ்பெறக்கூடிய வாய்ப்பு உண்டாகும். 

புதன் அதிபலம் பெற்றால் கம்ப்யூட்டர், கணிதம், வங்கிப் பணி,பங்குச் சந்தை போன்றவற்றில் அனுகூலமும்,  குரு போன்ற சுபர் பார்வை பெற்றால் நூல் ஆசிரியர், பதிப்பகம், பத்திரிகைத் துறை,புத்தக வெளியீடு, ஆசிரியர் பணி போன்ற துறைகளில் புகழ் பெறக்கூடிய யோகமும் அமையும். ஆகவே, புதன் பகவான்பலமிழந்தாலும் பாவிகளுக்கிடையே அமையப் பெற்றாலும்,புதனுக்கு 7ல் சனி, செவ்வாய், ராகு, கேது போன்ற பாவிகள் இருந்தாலும் வாழ்வில் மேன்மையடைய இடையூறுகள் உண்டாகும். ராகு, கேது போன்ற பாவிகளின் சேர்க்கைப் பெற்றால் சட்டத்திற்கு புறம்பான தொழிலில் ஈடுபடக்கூடிய அவலநிலை ஏற்படும்.

தனுசு லக்னம் உபய லக்னம் என்பதாலும், புதன் 10ம் அதிபதி மட்டுமின்றி 7ம் அதிபதியாகவும் இருப்பதாலும், உபய லக்னத்திற்கு 7ம் அதிபதி பாதகாதிபதி என்பதாலும்,திரிகோணங்களில் அமைந்தால் மட்டும் கூட்டால் நற்பலனைபெறமுடியும். தனுசு லக்னத்திற்கு 7ம் இடம் பாதக ஸ்தானம் என்பதால், கூட்டுத் தொழில் செசய்வதைத் தவிர்த்து, எதிலும் தனித்து செயல்படுவது, உத்தியோகம் செய்வது உத்தமம்.

விருச்சிகம் லக்னத்திற்குறிய தொழில்கள்:

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நவகிரகங்களில் முதன்மை கிரகமாக விளங்கக்கூடிய சூரிய பகவான் 10ம் அதிபதியாவார். 10ம் அதிபதி சூரியனானவர் ஒரு வீட்டு அதிபத்யம் கொண்டவர். நவகிரகங்களுக்கெல்லாம் அரசனாகவிளங்கக்கூடிய சூரிய பகவானை ஜீவன ஸ்தானாதிபதியாக பெற்ற பெருமை விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே உண்டு.

சூரியன் ஆட்சி உச்சம் பெற்று லக்னாதிபதி செவ்வாயின் சேர்க்கையுடன் குரு பார்வை பெற்றிருந்தாலும், தனக்கு நட்பு கிரகங்களான செவ்வாய், சந்திரன் குரு போன்றவற்றின் வீடுகளில் அமைந்திருந்தாலும் சமுதாயத்தில் கௌரவமான பதவிகளை  வகிக்கக்கூடிய யோகம், அரசு, அரசு சார்ந்த துறைகளில் அதிகாரமிக்க பதவிகளை வகிக்கக்கூடிய வாய்ப்பு சிறப்பாக அமையும். சூரிய பகவான் குரு, செவ்வாய்சேர்க்கையுடன் கேந்திர திரிகோண ஸ்தானங்களில் பலம் பெற்று அமைந்திருந்தாலும் மேற்கூறிய நற்பலன்களை அடைய முடியும். 10ம்  வீட்டில் சுக்கிரன், சந்திரன் இணைந்திருந்தாலும் சூரியன், சுக்கிரன், சந்திரன் போனற் கிரக சேர்க்கைகள் 9,10,12 ம் வீடுகளில் அமையப்பெற்றிருந்தாலும் கடல் கடந்து அந்நியநாடுகளுக்குச் சென்று சம்பாதிக்கக்கூடிய  வாய்ப்பு அமையும்.

சூரியன் சுக்கிரன் சேர்க்கைப் பெற்று 10ல் அமைந்து குரு பார்வை பெற்றால் கூட்டுத் தொழில் முலம் சம்பாதிக்கும் வாய்ப்பு அமையும். சுக்கிரன் 10ல் அமையப் பெற்றால் ஆடை, ஆபரணம்,கலைத்துறை, பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள்போன்றவற்றால் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். சூரியன், புதன் சேர்க்கையுடன் குரு பார்வை பெற்று 10ல் அமையப் பெற்றால் கணக்கு வழக்கு தொடர்புடைய தொழில்,வணிக  தொழிலில் ஏற்றம் ஏற்படும்.

சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று பலம் பெற்றால் நிர்வாகத் தொடர்புடைய தொழில், அதிகார பதவி, பூமி,மனை, ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் ஏற்றம் உண்டாகும். சூரியன்,செவ்வாய் பலமாக சேர்க்கை பெறுவதுடன் சனி பகவானும்ஆட்சி உச்சம் பெறுவாரேயானால் மக்களால் தேர்ந்தெடுக்கக்கூடிய உயர் பதவி தேடி வரும். சூரியன், சந்திரன்,செவ்வாய், கேது போன்ற நட்பு கிரக சேர்க்கை பெற்றிருந்தால் மருத்துவத்துறையில் பல சாதனைகள் செய்யக்கூடிய அமைப்புஏற்ஙபடும்.

குரு, புதன் இணைந்து 10ம் வீட்டில் அமையப் பெறுமேயானால் வாக்கால், பேச்சால் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு அமையும். 10 ம் வீட்டில் சந்திரன், ராகு அல்லது சந்திரன் கேது சேர்க்கை பெற்றிருந்தால் மருந்து, கெமிக்கல் போன்ற துறைகளில் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். விருச்சிக லக்னத்திற்கு ஜீவனாதிபதியாகிய சூரியன் கேந்திர திரிகோணங்களில் அமைந்து சுபர் பார்வையுடனிருந்ஙதால் சமுதாயத்தில் கௌரவமான நிலை, கை நிறையசம்பாதிக்கக்கூடிய யோகம்  உண்டாகும்.

அதுவே 10ம் அதிபதி சூரியன் தனக்கு பகை கிரகங்களான சனி,ராகு சேர்க்கைப் பெற்றால் சட்டத்திற்கு புறம்பான தொழில் செய்யும் அமைப்பு, அதிலும் சுபர் பார்வையின்றி இருந்து விட்டால் சட்டத்திற்கு விரோதமான வகையில் சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். சனி, ராகு சேர்க்கையுடன் சூரியன் 8,12ஆகிய மறைவு ஸ்தானங்களில் அமைந்தாலும் ஜாதகருக்கு நிலையான வருமானமில்லாமல் கஷ்ட ஜீவனம் நடத்தக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.

துலாம் லக்னத்திற்குறிய தொழில்கள்:

துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி சந்திர பகவானாவார். இவர் ஒரு வீட்டு ஆதிபத்யம் கொண்டவர். சந்திரன் ஆட்சி உச்சம் பெற்று குரு போன்ற சுபகிரக சேர்க்கையுடன், நட்பு கிரக வீடுகளில் அமையப் பெறுவாரேயானால், அந்த ஜாதகருக்கு சமுதாயத்தில் கௌரவத்துடன் வாழக்கூடிய அற்புதமான அமைப்பு, தொழில் ரீதியாக கை நிறைய சம்பாதித்து சுக வாழ்க்கை வாழக்கூடிய யோகம் உண்டாகும்.

 சந்திரன் ஜல காரகன் என்பதால், அவர் துலாம் லக்னத்திற்கு 9,12க்கு அதிபதியாக விளங்கக்கூடிய புதன் பகவானின் சேர்க்கை பெற்று 9 அல்லது 12 ல் அமையப் பெறுவாரேயானால், அந்த ஜாதகர் கடல் கடந்து அந்நிய நாடுகளுக்குச் சென்று தொழில்,உத்தியோகம் செய்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பும், அந்தியநாட்டவர்களால் அனுகூலங்களும் உண்டாகும்.  குரு, சந்ஙதிரன் ஆட்சி உச்சம் பெற்று 10 ம் வீட்டில் பலமாக அமையப் பெற்றிருந்தால் அரசு, அரசு சார்ந்த  பணிகளில் உயர் பதவிகள் வகிக்கக்கூடிய யோகம் உண்டாகும். குரு சந்திரன் பலம் பெற்று சனி, புதன் வீட்டில் இருந்தாலும், துலாம் லக்னத்திற்கு கேந்திரதிரிகோணாதிபதியாகி யோக காரகனாகிய சனி பலம் பெற்று அமைந்திருந்தாலும், அரசாங்க அதிகாரியாகவும், அரசுத் துறையில் பணிபுரிபவராகவும் இருக்கக்கூட வாய்ப்பு உண்டாகும். அதுபோல சந்திரனுக்கு நட்பு கிரகங்களாகிய சூரியனும் குருவும் பலம் பெற்று அமைந்தாலும் அரசுத் துறையில் பணியுரியக்கூடியவாய்ப்பு அமையும். 

துலாம் லக்னத்திற்கு ஜீவன ஸ்தானத்தில் அந்த வீட்டதிபதியான சந்திரன் தனித்து ஆட்சிப் பெற்று பலமாக அமைந்திருந்தால் ஜல சம்பந்தப்பட்ட தொழில், உணவு சம்பந்தப்பட்ட தொழில்,ஹோட்டல் தொழில் போன்றவற்ல் நல்ல லாபம் அமையும். மேலே குறிப்பிட்டது போல சந்திரன் ஜல காரகன் என்பதால்,கடல் சார்ந்த துறைகளில் கூட பணி புரியக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.  சூரியன், செவ்வாய் 10ல் பலம் பெறுகின்றபோது அரசு துறைகளில் பணிபுரியும் அமைப்பு, நல்ல நிர்வாகத் திறன்உண்டாகும். குரு 10ல் பலம் பெற்றிருந்தால் சிறந்த ஆலோசகராக விளங்கக்கூடிய வாய்ப்பு, தொழில் ரீதியாக முன்னேற்றம், வாக்கால் பேச்சால் சம்பாதிக்கக்கூடிய யோகம்,வக்கில் பணி, ஆசிரியர் பணி போன்றவை உண்டாகும்.  சுக்கிரன் பலம் பெற்று உடன் சந்திரன் 10ல் அமையப் பெற்றால் கலை,இசை, சினிமாத்துறை போன்றவற்றின் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.  சந்திரன், செவ்வாய் பலம் பெற்று 10ல் அமையப் பெற்றால் கலை, இசை, சினிமாத்துறை போன்றவற்றின் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். சந்திரன், செவ்வாய் பலம் பெற்று 10ல்  அமைந்தால் பூமி, மனை சம்பந்தப்பட்ட தொழிலில் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

புதன் பலம் பெற்று 10ல் அமைந்து குரு பார்வை இருக்குமேயானால் கணக்கு, கம்ப்யூட்டர், தொழில் மற்றும் வணிக தொடர்புடைய தொழிலில் சம்பாதிக்க முடியும். புதன்,சந்திரன் சேர்க்கை பெற்று 10ல் கேது சந்திரன் சேர்க்கைபெற்றால் மருந்து, கெமிக்கல் தொடர்புடைய தொழில் வருமானம் ஈட்டக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சந்திரன் ஆட்சி உச்சம் பெற்று சுபர்சேர்க்கையுடன் அமைந்து 10ம் வீட்டிற்கும் குரு பார்வை இருந்தால் நிலையான வருமானம் உண்டாகும். அதுவே சந்திரன் பலமிழந்து சனி 10 ம் வீட்டில் அமைந்தாலும் சனி, ராகு போன்ற பாவகிரகங்கள் 10ம் வீட்டில் அமையப் பெற்றாலும் அடிமைத் தொழில்  செய்யக்கூடிய நிலை, சில சட்டத்திற்கு விரோதமான தொழில்கள் செய்து சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். சனி பார்வை 10 ம் வீட்டிற்கு இருந்தாலும், சந்திரனுக்கு இருந்தாலும் தொழில்  ரீதியாக நிறைய போரட்டங்களைச் சந்திக்க நேரிடும். குறிப்பாக சந்திரன் தேய்பிறை சந்திரனாகஇருந்து சனி, ராகு போன்ற பாவ கிரகங்களின் சேர்க்கைப் பெற்றால் நிலையான தொழில் என்பது அமையாமல் வாழ்க்கையானது போராட்டகரமாகவே இருக்கும்.

கன்னி லக்னத்திற்குறிய தொழில்கள்:

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 10 ம் அதிபதி புதன் பகவானாவார். லக்னாதிபதி புதன் பகவானே ஜீவனாதிபதியாகவும் இருப்பது மிகவும் அற்புதமான அமைப்பாகும். பொதுவாகவே,கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் சிறந்த அறிவாளியாகவும் எதிலும் சிந்தித்து செயல்படுபவர்களாகவும் இருப்பார்கள். கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ஆட்சி உச்சம் பெற்று தனக்கு நட்பு கிரகங்களான சுக்கிரன், சனி போன்றவர்களின் சேர்க்கை பெற்று, குரு போன்ற சுபகிரகங்களின் பார்வைப் பெற்றால் சமுதாயத்தில் சிறப்பான உயர் நிலையினைஅடைவார்கள். அதிகாரமிக்க பதவிகளை அடையக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். புதன் வலுப்பெறுவது மட்டுமின்றி உடன் செவ்வாய் சூரியன் சேர்க்கை உண்டானால் அரசு, அரசு சார்ந்த துறைகளில் உயர்வான பதவிகளை அடைய கூடிய யோகம் அமையும். இத்துடன் சனியும் பலம் பெற்று அமைந்து விடுமாயின் மக்களால் தேர்ந்தெடுக்கக்கூடிய உயர் பதவிகள் ஜாதகரைத் தேடி வரும். இது மட்டுமின்றி புதன் கேந்திர திரிகோணங்களில் சூரியன் சேர்க்கை பெற்று சந்திரனும் பலமாகஅமைந்த குரு பார்வை செய்தாலும் அரசு, அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பும் அதன் மூலம் பொருளாதார மேன்மைகளும் பெற்று வாழ்வில்  உயர்வு உண்டாகும்.

புதன் பகவான் சுக்கிரன், சனி போன்ற நட்பு கிரக சேர்க்கைப் பெற்று வலுவாக அமையப் பெற்றால் சொந்தத்தொழில் செய்யும் யோகம், வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கும் அற்புத நிலை உண்டாகும். புதனுடன் சுக்கிரன், சந்திரன் சேர்க்கை உண்டாகி 9,12ல் ராகு பகவான் அமையப் பெற்றால் ஜாதகர் கடல் கடந்து வெளிநாடு சென்று சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

புதனுடன் சந்திரன் அமைந்து சுக்கிரனும் சேர்க்கை பெற்றால்,பயிர் தொழிலில் செய்யக்கூடிய அமைப்பு, புதனுடன் செவ்வாய் சேர்க்கைப் பெற்றால் பூமி, வேளாண்மை, விவசாய தொடர்புடைய பணிகள் அமையும். புதன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று வலுப்பெற்றிருந்தால் கலை, இலக்கியம், சங்கீத துறையில் புகழ் பெறும் அமைப்பு உண்டாகும்.
புதன், சுக்கிரன் சேர்க்கை பெற்று, கேந்திர திரிகோணங்களில் அமையப் பெற்று, உடன் குரு பார்வையும் இருந்தால் பெண்கள் வழியிலும், பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில்களிலும் சம்பாதிக்கக்கூடிய (பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள் )வாய்ப்பு அமையும். இது மட்டுமின்றி கணிதம், கம்ப்யூட்டர் துறையில் வல்லவராகத் திகழ்வார். புதன் தனித்து பலம் பெற்று குரு போன்ற சுபகிரகங்களின் பார்வை இருந்தால் ஆசிரியர் பணி,பதிப்பகம், பத்திரிகைத் தொழில், புத்தகம் வெளியிடும் பணி,வக்கீல் தொழில், வாக்கால் பேச்சால், முன்னேறக்கூடிய தொழில் போன்றவற்றில் அனுகூலங்கள் உண்டாகும். புதன் தனக்கு நட்பு கிரகங்களான சுக்கிரன், சனி சேர்க்கை பெறுவதும், சுக்கிரன், சனிவீடுகளில் அமைவதும் கல்விக்கு சம்பந்தமில்லாத துறைகளில் முன்னேற்றத்தை கொடுக்கும்.

சனி, புதன் சேர்க்கை பெற்று வலு இழந்திருந்தால் அடிமைத்தொழில் அமைப்பு, சனி, ராகு அல்லது கேது சேர்க்கை பெற்றிருந்தால் இழிவான வேலைகளைச் செய்யக்கூடிய அமைப்பு உண்டாகும். புதனுக்கு 7ல் சனி, செவ்வாய், ராகு கேது போன்ற பாவிகள் இருந்தால், எவ்வளவு திறமை இருந்தாலும் வாழ்வில் மேன்மை அடைய இடையூறுகள் உண்டாகும். அது போல புதனுக்கு இருபுறமும் பாவிகள் இருந்தாலும் வாழ்வில் முன்னேற்றம் உண்டாக தடை ஏற்படும். கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7ம் இடம் பாதக ஸ்தானம் என்பதால் முடிந்தவரை கூட்டு சேர்ந்து தொழில் செய்வதை தவிர்த்து எதிலும் தனித்து செயல்படுவதும், பிறரை சார்ந்து உத்தியோகம் செய்வதும் நல்லது.

சிம்ம லக்னத்திற்குறிய தொழில்கள்:

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவனாதிபதி சுக்கிர பகவானாவார். சுக்கிரன் சுக காரகன் என்பதால் அவர் கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்று தனக்கு நட்பு கிரகங்களான சனி, புதன் போன்றவர்களின் சேர்க்கையுடன், சுபர் பார்வையும் பெற்றிருந்தால் நல்ல நிலையான ஜீவனம் செய்துசம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு,  அதன் மூலம் சுக வாழ்வு, சொகுசு வாழ்வு வாழக்கூடிய யோகம் உண்டாகும். அதிலும் இப்படி சேர்க்கைப் பெற்று பலம் பெற்ற புதன், சனி, சுக்கிரன் போன்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களில் சிறப்பான வருமானமும்,கூட்டுத் தொழில், சொந்த தொழில் செய்து சம்பாதித்து மிகப் பெரிய அளவில் செல்வந்தராகக்கூடிய  அற்புதமான அமைப்பும் உண்டாகும்.

சுக்கிரன் சந்திரன் சேர்க்கை பெற்று 9,12 ல் ராகு அமையப் பெற்றால் வெளியூர், வெளிநாடு சம்மந்தமுடைய தொழில்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.  இதுமட்டுமின்றி சந்திரன் 10ல் உச்சம் பெற்று  அமைந்திருந்தால், கடல் சார்ந்த பணிகளில் பணிபுரியும் அமைப்பு, ஜல சம்பந்தப்பட்ட தொழில், உணவு வகைகள் சம்பந்தப்பட்ட தொழில், உணவகம் நடத்தும் வாய்ப்பு உண்டாகும். சுக்கிரன், செவ்வாயுடன் இணைந்து பலமாக அமையப்பெற்றிருந்தால், மனை, பூமி, கட்டிடத்துறை, ரியல் எஸ்டேட் தொடர்புடைய தொடர்புடைய  தொழில்களில் பணிபுரிய நேரிடும். சந்திரன் சேது சேர்க்கை பெற்றால் மருந்து, கெமிக்கல்,ரசாயன தொடர்புடைய தொழிலில் யோகம் உண்டாகும். சுக்கிர பகவான் கேந்திர திரிகோண ஸ்தானங்களில் பலமாக அமையப் பெற்று சனி, புதனுடன் இணைந்திருந்தால் சொந்தத் தொழில் மூலம் சம்பாதிக்கும் யோகம் அமையும்.

சிம்ம லக்னத்திற்கு 10ம் அதிபதி சுக்கிரன் கலை காரகன் என்பதாலும், சுக்கிரனே 3ம் வீட்டிற்கு அதிபதியாக இருப்பதாலும் இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு  கலை, இசை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபாடு அதிகம் இருக்கும். சுக்கிரன் பலமாக அமைந்து சுபர் பார்வையுடனிருந்தால் ஆடை, ஆபரணங்கள்,பெண்கள் உபயோகப்படுத்தக்கூடிய பொருட்களைக் கொண்ட தொழிலில சம்பாதிக்க முடியும். சுக்கிரன் தன லாப அதிபதியான புதனின் சேர்க்கை பெற்றிருந்தால் மற்றவர்களை வழி நடத்தும் திறன், அறிவாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல், கதை, கவிதை எழுதக்கூடிய கற்பனை ஆற்றல், சினிமாத் துறைகளில் உள்ள உட்பிரிவுகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு அமையும். அதிலும்10ல்  புதன் பலம் பெறும் போது சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பத்திரிகைத் துறை, புத்தக பதிப்பு, சொந்தமாக தொழில் செய்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சுக்கிரன் புதன், குருவுடன் சேர்க்கைப் பெற்றிருந்தால் ஆசிரியர் பணி,மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்கக்கூடிய பணி, தனது அறிவாற்றலால் முன்னேறும் வாய்ப்பு, பள்ளி கல்லூரிகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

லக்னாதிபதி சூரியன் 10ம் வீட்டில் பலம் பெற்று செவ்வாய் சேர்க்கைப் பெற்றிருந்தால் நல்ல நிர்வாகத் திறமை, கௌரவமான பதவிகள் தேடி வரக்கூடிய வாய்ப்பு, உயர் பதவிகளை வகிக்கும் யோகம் உண்டாகும். செவ்வாய் பலமாக அமைந்திருந்தால் நல்ல நிர்வாகியாக பணிபுரிந்து எந்தத் துறையில் செயல்பட்டாலும்,அதில் மற்றவர்களை வழி நடத்துவதில் வல்லவராக விளங்கமுடியும். சுக்கிரன், சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்றால் அரசு,அரசு சார்ந்த துறைகளில் நல்ல வேலை அமையும். 10 ல் சூரியன்,குரு சேர்க்கை பார்வையுடனிருந்தால் நல்ல வேலை அமைந்து அதன் மூலம் சம்பாதித்து வாழ்வில் முன்னேற்றமடைய முடியும். சுக்கிரன் சனி சேர்க்கை பெற்றிருந்தால் கூட்டுத் தொழிலில் சம்பாதிக்கும் அமைப்பு, வண்டி வாகனங்கள் மற்றும் டிராவல்ஸ் மூலம் சம்பாதிக்கும் அமைப்பு உண்டாகும்.  நல்ல வேலையாட்களும் கிடைக்கப்பெற்று அவர்களாலும் முன்னேற்றமான பலன்கள் அமையும்.

அதுவே சுக்கிரன் மறைவு ஸ்தானங்களிலிருந்தாலோ சிம்ம லக்னத்திற்கு பாதக ஸ்தானமான 9ம் வீட்டில் இருந்தாலோ உத்தியோகம் செய்யக்கூடிய வாய்ப்பே அமையும். அதிலும் குறிப்பாக சுக்கிரன் பலமிழந்து சனி, ராகு சேர்க்கை பெற்று பகை வீடுகளில் அமைந்தால் நிலையான ஜீவனம் இல்லாமல அடிமைத் தொழில் செய்யக்கூடிய அமைப்பு, சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.

கடகம் லக்னத்திற்குறிய தொழில்கள்:

கடக லக்னத்திற்கு ஜீவனாதிபதி செவ்வாயாவார். ஜீவன ஸ்தானத்திற்கு அதிபதியான செவ்வாய் ஐந்தாம் அதிபதியாகவும் விளங்குகிறார். கேந்திர திரிகோணத்திற்கு அதிபதியான செவ்வாய் லக்னாதிபதி சந்திரனுக்கு நட்புக் கிரகம் என்பதால், இந்தலக்னத்திற்கு மிகச்சிறந்த யோக காரகனாவார். செவ்வாய் நிர்வாக காரகன் என்பதினால், பொதுவாகவே கடக லக்னத்தில் பிறந்தவர்கள் சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவர்களாகவும் அதிகார குணம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். அரசு, அரசுசார்ந்த துறைகளுக்கு காரகனாக சூரியன், கடக லக்னத்திற்கு 10ம் வீடான மேஷத்தில் உச்சம் பெற்று உடன் செவ்வாய் சேர்க்கை பெற்றால் அரசு, அரசு சார்ந்த துறைகளில் உயர் பதவிகளை வகிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.

சூரியன், செவ்வாய் இணைந்து குரு பார்வைப் பெற்றால் அரசுத் துறையில் சிறந்த நிர்வாகியாக விளங்கும் அமைப்பு, போலீஸ்,ராணுவம், பாதுகாப்புத் துறைகளில் பணிபுரியும் அமைப்பு,பலருக்கு உதவி செய்யும் பண்பு உண்டாகும். சூரியன், செவ்வாய்10 ல் அமையப் பெற்று சனி பகவானும் பலம் பெற்றிருந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய உயர் பதவிகளை வகிக்கக்கூடிய யோகம் உண்டாகும். சூரியன், செவ்வாய் உடன் இணைந்து சந்திரன், ராகு அல்லது கேது சேர்க்கையோ, சாரமோ பெற்றால் மருத்துவத்துறையில் அறுவை சிகிச்சை நிபுணராக விளங்கக்கூடிய அமைப்பு உண்டாகும். சூரியன், செவ்வாய், புதன் சேர்க்கைப் பெற்றிருந்தால் கட்டிடப் பொறியாளர் கம்ப்யூட்டர் பொறியாளராக விளங்கக்கூடும்.

செவ்வாய், சந்திரன், ராகு அல்லது கேது சேர்க்கைப் பெற்றால் மருந்து, கெமிக்கல் ரசாயன தொடர்புடையத் துறை, வேளாண்மை,உணவு வகைகள், ஓட்டல் எனவும், மேற்கண்டவற்றுடன் இணைந்து குரு பார்வையும் பெற்றால் அரசுத் துறையில்கௌரவமான பதவிகளை  வகிக்கக்கூடிய யோகம் உண்டாகும். பொதுவாகவே செவ்வாய் தனக்கு நட்பு கிரகங்களான சூரியன்,சந்திரன், குரு போன்றவர்களின் சேர்க்கை பெற்று பலம் பெற்றிருந்தால் செய்யும் தொழில் உத்தியோக ரீதியாகஉயர்வுகளையும், அரசு வழியில் உதவிகளையும் சிறப்பாகப் பெற முடியும்.

செவ்வாய், குரு, புதன் சேர்க்கைப் பெற்று வலுவாக அமையப் பெற்றால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் செய்யும் யோகம்,வங்கிப் பணிகள், வெளியூர், வெளிநாடு தொடர்புடைய தொழில்,பணம் கொடுக்கல் வாங்கல், பங்குச் சந்தை மற்றும் ஏஜென்ஸி,கமிஷன் போன்றவற்றின் மூலமாக லாபங்கள் உண்டாகும். குரு,புதன் போன்றவர்கள் 10ல் அமையப் பெற்றால் சிறந்த அறிவாளியாக விளங்கி மற்றவர்களை வழி நடத்தக்கூடிய யோகம், பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர், பேராசிரியர்களாக விளங்கக்கூடிய அமைப்பு உண்டாகும்.

குரு புதனுடன் சனியும் பலம் பெற்றால் வக்கீல் பணி,நீதித்துறையில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும். செவ்வாய், சனி இணைந்தோ, பரிவர்த்தனை பெற்றோ அமையப் பெற்றால் கூட்டுத் தொழில் மூலமாக அனுகூலம், கட்டிடக்கலைரியல் எஸ்டேட் போன்றவற்றில் சம்பாதிக்க முடியும். செவ்வாய்,சுக்கிரன் சேர்க்கை பெற்று உடன் சந்திரனும் இருந்தால் கலை,இசை சம்பந்தப்பட்ட துறைகளில் நல்ல வருமானம் அமையும்,
செவ்வாய் சுக்கிரனுடன் புதன் அல்லது சனி சேர்க்கை பெற்றால் சொந்தத் தொழில் செய்யக்கூடிய யோகம், ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்களில் வருமானம் ஈட்டக்வடிய அமைப்பு உண்டாகும். செவ்வாய், சனி, ராகு சேர்க்கைப் பெற்று சுபர் பார்வையின்றி இருந்தால் சட்ட சிக்கல்கள் நிறைந்த தொழில் உண்டாகும். 10ம் வீட்டில் சனி நீசம் பெறுவதால் சனி 10ல் அமைந்து உடன் ராகு அல்லது கேதுவின் சேர்க்கைப் பெற்றால் அடிமைத் தொழில்,நிலையான வருமானமற்ற நிலை  ஏற்படும். செவ்வாய் புதனுடன் சேர்க்கை பெற்று பலமாக இருந்தால் கணக்கு, கம்ப்யூட்டர்போன்ற துறைகளில் அனுகூலங்கள், சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பும், கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பூமி, மனை மூலமும், உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்புடன் சம்பாதிக்கும் யோகமும் உண்டாகும்.

மிதுனம் லக்னத்திற்குறிய தொழில்கள்:

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி குரு பகவானாவார். குரு பகவான் ஆட்சி பெற்று வலுப்பெற்றால் செல்வம், செல்வாக்கு, உயர் பதவிகளை வகிக்க்கூடிய யோகம் மற்றும் மற்றவர்களை வழி நடத்துவதிலும் ஆலோசனை கூறுவதிலும் கைதேர்ந்தவர்களாக விளங்கக்கூடிய அமைப்பும் உண்டாகும். வங்கியில் பணிபுரியும் அமைப்பு, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய இடங்களில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும். தனக்காரகன் குரு என்றாலும் மிதுன லக்னத்திற்கு குரு பாதகாதிபதி என்பதால் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில்கவனத்துடன் இருப்பது நல்லது.

இது மட்டுமின்றி கூட்டுத் தொழிலில் ஈடுபடாமல் தனித்து செயல்பட்டால்தான் லாபத்தை பெற முடியும். 10ம் அதிபதி குரு பகவான், சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்றாலும் 10ல் சூரியன். செவ்வாய் அமையப் பெற்று திக் பலம் பெற்றாலும் அரசு, அரசு சார்ந்த துறைகளில் கௌரவமானப் பதவிக¬ள் வகிக்கக்கூடியயோகம், சிறந்த நிர்வாகியாக விளங்கி பலரை வழி நடத்தும் அமைப்பு உண்டாகும். சனி பகவானும் பலம் பெற்றிருந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் பதவிகளை வகிக்கும் உன்னத அமைப்பு உண்டாகும். 10ல் அமையக்கூடிய சூரியன்,செவ்வாயுடன் புதன் சேர்க்கைப் பெற்றால் பொறியியல் துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு கம்ப்யூட்டர் துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய அமைப்பு உண்டாகும்.

குரு பகவான் செவ்வாய் சேர்க்கை பெற்று பலமாக இருந்தால் பூமி மனை, ரியல் எஸ்டேட் துறைகளில் அனுகூலங்கள் உண்டாகி சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். அதிகாரமிக்க பதவிகளை அடையும் வாய்ப்பும் உண்டாகும். குரு சந்திரனுடன்சேர்க்கைப் பெற்றால் ஏஜென்ஸி, கமிஷன், உணவு வகைகள், ஜல தொடர்புடைய தொழில்களில் பணிபுரியும் வாய்ப்பு ஏற்படும். குருவுடன் சந்திரன் இணைந்து உடன் புதன் அல்லது செவ்வாய் இருந்தால் கடல் சார்ந்த துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு,உணவகம் நடத்தும் வாய்ப்பு அமையும். குரு பகவான் புதனுடன் சேர்க்கை பெற்று பலமாக இருந்தால் சிறந்த அறிவாற்றலுடன் பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு, மற்றவர்களை வழி நடத்தக்கூடிய உன்னத திறன்,வழக்கறிஞராகக் கூடிய அமைப்பு, பத்திரிகை துறை, எழுத்துத் துறைகளில் பணியாற்றும் வாய்ப்பு உண்டாகும்.

குரு சுக்கிரனுடன் சேர்க்கை பெற்று 10ல் இருந்தால் ஆடை,ஆபரணத்தொழில்கள், கலை சம்பந்தப்பட்ட பொருட்களை வியாபாரம் செய்வது, பெண்கள்  உபயோகிக்கக்கூடிய பொருட்கள் விற்பனை போன்றவற்றின் மூலம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புஉண்டாகும். குரு சுக்கிரனுடன் சனியும் சேர்க்கை பெற்றால் வண்டி, வாகனங்கள், டிராவல்ஸ் தொடர்புடைய தொழில்,வெளியூர்,  வெளிநாட்டு தொடர்புடைய தொழில்களால் அனுகூலங்கள் உண்டாகும். குரு சுக்கிரனுடன் புதன் அல்லதுசந்திரனும் சேர்க்கைப் பெற்றால் கலைத்துறை, சினிமாத்துறை,சினிமா சார்ந்த  உட்பிரிவுத் துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு,ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்கள் செய்து அதன் மூலம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். வீடு, பங்களாக்களை கட்டி விற்பனை செய்யும் வாய்ப்பு உண்டாகும். செவ்வாய், ராகுஅல்லது கேது சேர்க்கைப் பெற்றால் நவீனகரமான பொருட்களை வியாபாரம் செய்வது, தகவல் தொடர்புத்துறை, மருந்து கெமிக்கல்,இராசாயணம் தொடர்புடைய தொழில்களில் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

குரு பகவான் பலவீனமாக இருந்து சனி, ராகு போன்ற பாவகிரகங்களின் சேர்க்கைபெற்றால் நிலையான வருமானங்களை அடையக்கூடிய தொழில்கள் அமையாமல் கஷ்ட ஜீவனம் அடைய நேரிடும். சனி ராகு சேர்க்கை 10ம் வீட்டில் அமைந்து சுபர் பார்வையின்றி இருந்தால் சட்ட சிக்கல்கள் நிறைந்த தொழில்கள் மூலம் சம்பாதிக்க நேரிடும்.

ரிஷபம் லக்னத்திற்குறிய தொழில்கள்:

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி சனி பகவானாவார். சனி 9,10 க்கு அதிபதியாகி தர்மகர்மாதிபதி என்பதாலும், லக்னாதிபதி சுக்கிரனுக்கு நட்புக் கிரகம் என்பதாலும் மிகச்சிறந்த யோககாரகனாவார். ரிஷப லக்னகாரர்களுக்கு சனி ஆட்சி உச்சம் பெற்றோ, திரிகோண ஸ்தானங்களில்அமையப்பெற்றோ, திரிகோண ஸ்தானங்களில் அமையப்பெற்றோ இருந்தால், கொரவமான பதவிகளை  வகிக்கும் யோகம், அதன் மூலம் நிலையான வருமானம் உண்டாகும். சனி பலம் பெற்று சுக்கிரன், புதன் போன்ற நட்புக் கிரகங்களின்சேர்க்கையுடனிருந்தால் சொந்தத் தொழில்  செய்யக்கூடிய யோகம், நிலையான வருமானம், ஒரு சிறந்த முதலாளியாகி பலருக்கு வேலை கொடுக்கும் யோகம் உண்டாகும்.

மேற்கூறிய கிரகங்களில் ஏதாவது ஒரு கிரகத்தின் திசை நடைபெற்றால் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு சம்பாதிக்கும் வாய்ப்பு, சுகமான வாழ்க்கை வாழக்கூடிய யோகமும் உண்டாகும். 10ம் அதிபதி சனி என்பதனால் இரும்புசம்பந்தப்பட்ட தொழில், எந்திரங்கள், வேலையாட்களை வைத்து தொழில்  செய்யும் அமைப்பு, பழைய பொருட்களை வாங்கி விற்பதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். சனி பகவான் சுக்கிரனின் சேர்க்கையைப் பெற்றால் வண்டி வாகனங்கள் மூலமும், டிராவல்ஸ் போன்றவற்றிலும், பெண்கள் உபயோகிக்கும் அழகு சாதனப் பொருட்கள் விற்பனை, கட்டிடத் துறைகளில் சாதிக்கும் அமைப்பு உண்டாகும். ரிஷப லக்னாதிபதி சுக்கிரன் சந்திரனின் சேர்க்கை பெற்று இந்த இரு கிரகங்களில் ஒரு கிரகம் ஆட்சிப் பெற்றாலும் பரிவர்த்தனை பெற்றாலும் கலை, இசை, சங்கீதம், சினிமா போன்ற துறைகளில் தங்களை ஈடுபடுத்தி சாதிக்கக்கூடிய அமைப்பு உண்டாகும்.  நல்ல வருவாய் அமையும்.


சனி பகவான் புதன் சேர்க்கைப் பெற்றிருந்தால் சொந்தமாக வியாபாரம் செய்யக்கூடிய அமைப்பு, சிறந்த வியாபாரியாக செயல்பட்டு வாழ்வில் முன்னுக்கு வரக்கூடியவாய்ப்பு உண்டாகும். இது மட்டுமின்றி கணிதம், கம்ப்யூட்டர், பங்குச் சந்தை போன்ற துறைகளிலும் ஈடுபாடு உண்டாகும். புதன் 10 ல் அமையப் பெற்று குரு சேர்க்கை பெற்றால் சிறந்த அறிவாளியாக விளங்கி, மற்றவர்களை வழி நடத்துவது, ஆலோசனை கூறுவது,தாங்கள் கற்றதை பிறருக்கு கற்றுக் கொடுக்கும் தொழில் போன்றவற்றின் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பு அமையும். சனி பகவான் குரு சேர்க்கையுடனிருந்தால் ஏஜென்ஸி, கமிஷன் சார்ந்த வியாபாரம், கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் ஈடுபட்டு, சம்பாதிக்கும் யோகம் உண்டாகும்.


மேற்கூறிய கிரகங்களில் ஏதாவது ஒரு கிரகத்தின் திசை நடைபெற்றால் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு சம்பாதிக்கும் வாய்ப்பு, சுகமான வாழ்க்கை வாழக்கூடிய யோகமும் உண்டாகும். 10ம் அதிபதி சனி என்பதனால் இரும்புசம்பந்தப்பட்ட தொழில், எந்திரங்கள், வேலையாட்களை வைத்து தொழில்  செய்யும் அமைப்பு, பழைய பொருட்களை வாங்கி விற்பதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். சனி பகவான் சுக்கிரனின் சேர்க்கையைப் பெற்றால் வண்டி வாகனங்கள் மூலமும், டிராவல்ஸ் போன்றவற்றிலும், பெண்கள் உபயோகிக்கும் அழகு சாதனப் பொருட்கள் விற்பனை, கட்டிடத் துறைகளில் சாதிக்கும் அமைப்பு உண்டாகும். ரிஷப லக்னாதிபதி சுக்கிரன் சந்திரனின் சேர்க்கை பெற்று இந்த இரு கிரகங்களில் ஒரு கிரகம் ஆட்சிப் பெற்றாலும் பரிவர்த்தனை பெற்றாலும் கலை, இசை, சங்கீதம், சினிமா போன்ற துறைகளில் தங்களை ஈடுபடுத்தி சாதிக்கக்கூடிய அமைப்பு உண்டாகும்.  நல்ல வருவாய் அமையும்.

சனி பகவான் புதன் சேர்க்கைப் பெற்றிருந்தால் சொந்தமாக வியாபாரம் செய்யக்கூடிய அமைப்பு, சிறந்த வியாபாரியாக செயல்பட்டு வாழ்வில் முன்னுக்கு வரக்கூடியவாய்ப்பு உண்டாகும். இது மட்டுமின்றி கணிதம், கம்ப்யூட்டர், பங்குச் சந்தை போன்ற துறைகளிலும் ஈடுபாடு உண்டாகும். புதன் 10 ல் அமையப் பெற்று குரு சேர்க்கை பெற்றால் சிறந்த அறிவாளியாக விளங்கி, மற்றவர்களை வழி நடத்துவது, ஆலோசனை கூறுவது,தாங்கள் கற்றதை பிறருக்கு கற்றுக் கொடுக்கும் தொழில் போன்றவற்றின் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பு அமையும். சனி பகவான் குரு சேர்க்கையுடனிருந்தால் ஏஜென்ஸி, கமிஷன் சார்ந்த வியாபாரம், கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் ஈடுபட்டு, சம்பாதிக்கும் யோகம் உண்டாகும்.


சனி பகவான் செவ்வாய் சேர்க்கையுடனிருந்தால் கூட்டுத் தொழில் செய்யும் அமைப்பு, பூமி, மனை போன்றவற்றால் சம்பாதிக்கும் வாய்ப்பு, அதிலும் சுக்கிரனுடன் இருந்தால் கட்டிடங்களை கட்டி விற்கும் துறை, கட்டிட வல்லுநராகவிளங்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சனி, செவ்வாய் இணைந்து உடன் சந்திரன் அல்லது  ராகு இருந்தாலும் அல்லது ரிஷப லக்னத்திற்கு 9,12 ல் ராகு பகவான் அமையப் பெற்றாலும் வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய தொழில், கடல் கடந்துஅயல்நாடுகளுக்குச் சென்று சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். சனி பகவான் ராகு சேர்க்கை பெற்று சாதகமான ஸ்தானங்களில் அமையப் பெற்றால், எதிர்பாராத திடீர் யோகங்கள் அதிலும் குறிப்பாக பல்வேறு மறைமுகத் தொழில்களில்  ஈடுபட்டு கோடி கோடியாக சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். அதுவே பலஹீனமாக அமைந்து விட்டால் ஒரு நிலையான வருமானம் இல்லாமல் கஷ்டப்பட வேண்டியிருக்கும். அடிமையாக வேலை செய்யக்கூடிய அனுகூலமற்ற சூழ்நிலை உண்டாகும்.


பத்தாம் அதிபதி சனி பகவானுக்கு சூரியன், செவ்வாய் போன்றோர் பகை கிரகங்கள் என்பதனால் அரசுத்துறை யில் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும். கும்பராசியில் (10 ம் வீடு) அமையும் சூரியன்,  செவ்வாய், ராகுவின் நட்சத்திரமான சதயத்தில் அமைந்து விடாமல்  செவ்வாயின் நட்சத்திரமான அவிட்டத்திலோ, குருவின் நட்சத்திரமான பூராட்டத்திலோ அமைந்து இருந்தால் அரசு, அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியக்கூடிய அமைப்பு, அதிலும் குருபார்வையுடன் அமைந்து இருந்தால் உயர் பதவிகள், அரசு துறையில் பதவி வகிக்கும் யோகம் உண்டாகும். சூரியன்,செவ்வாய், சனியுடன் சேர்க்கை பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் இருந்தாலும் அரசு வழியில் நல்ல பணியினை அடைய முடியும். சூரியன், செவ்வாய் பலம் பெற்று உடன் சந்திரனோ, ராகுவோ இருந்தால் மருத்துவத்துறையில் சாதிக்கும் வாய்ப்பு உண்டாகும்.கும் துறை, கட்டிட வல்லுநராகவிளங்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சனி, செவ்வாய் இணைந்து உடன் சந்திரன் அல்லது  ராகு இருந்தாலும் அல்லது ரிஷப லக்னத்திற்கு 9,12 ல் ராகு பகவான் அமையப் பெற்றாலும் வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய தொழில், கடல் கடந்துஅயல்நாடுகளுக்குச் சென்று சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். சனி பகவான் ராகு சேர்க்கை பெற்று சாதகமான ஸ்தானங்களில் அமையப் பெற்றால், எதிர்பாராத திடீர் யோகங்கள் அதிலும் குறிப்பாக பல்வேறு மறைமுகத் தொழில்களில்  ஈடுபட்டு கோடி கோடியாக சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். அதுவே பலஹீனமாக அமைந்து விட்டால் ஒரு நிலையான வருமானம் இல்லாமல் கஷ்டப்பட வேண்டியிருக்கும். அடிமையாக வேலை செய்யக்கூடிய அனுகூலமற்ற சூழ்நிலை உண்டாகும்.


பத்தாம் அதிபதி சனி பகவானுக்கு சூரியன், செவ்வாய் போன்றோர் பகை கிரகங்கள் என்பதனால் அரசுத்துறை யில் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும். கும்பராசியில் (10 ம் வீடு) அமையும் சூரியன்,  செவ்வாய், ராகுவின் நட்சத்திரமான சதயத்தில் அமைந்து விடாமல்  செவ்வாயின் நட்சத்திரமான அவிட்டத்திலோ, குருவின் நட்சத்திரமான பூராட்டத்திலோ அமைந்து இருந்தால் அரசு, அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியக்கூடிய அமைப்பு, அதிலும் குருபார்வையுடன் அமைந்து இருந்தால் உயர் பதவிகள், அரசு துறையில் பதவி வகிக்கும் யோகம் உண்டாகும். சூரியன்,செவ்வாய், சனியுடன் சேர்க்கை பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் இருந்தாலும் அரசு வழியில் நல்ல பணியினை அடைய முடியும். சூரியன், செவ்வாய் பலம் பெற்று உடன் சந்திரனோ, ராகுவோ இருந்தால் மருத்துவத்துறையில் சாதிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

மேஷம் லக்னத்திற்குறிய தொழில்கள்:

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி சனி பகவானாவார். பொதுவாக, தொழில் காரகன் என வர்ணிக்கப்படக்கூடிய சனி பகவான் இந்த லக்னத்திற்கு 10ம் அதிபதி என்பதால் அவர் சுக்கிரன், புதன், குரு போன்றகிரகங்களின் சேர்க்கை பெற்று பலமாக அமையப் பெற்றால்,சொந்தத் தொழில்  செய்து அதன் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவனாதிபதி சனியே பாதகாதிபதியாகவும் இருப்பதால், வேலையாட்களிடமும் ஸ்பெகுலேஷன் சார்ந்த தொழில்  விஷயங்களிலும் முதலீடு செய்கின்ற போது முன்னெச்சரிக்கையுடன் இருந்து நிலையான விஷயங்களில் மட்டும் முதலீடு செய்தால், லாபங்களை அடைய முடியும். 10ம் அதிபதி சனி பலமாக அமையப் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் இரும்பு, எந்திரங்கள், வண்டி,வாகனங்களில்  மூலம் அனுகூலங்கள், பழைய பொருட்களை விற்பனை செய்யும் தொழில், கடின உடல் உழைப்பு சார்ந்த தொழில்கள் போன்றவற்றை செய்ய நேரிடும்.

சனி சுக்கிரனுடன் புதனும் இருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் யோகம், பலரை நிர்வாகம் செய்து சொந்த தொழில் செய்யக்கூடிய யோகம் உண்டாகும். அதுமட்டுமின்றி வணிகம்,வியாபாரம், ஏஜென்ஸி கமிஷன் தொடர்புடைய தொழில்களும்ஏற்றத்தை ஏற்படுத்தும். சனி பகவானுடன் குரு சேர்க்கைப் பெற்று பலமாக இருந்தால் வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும், கொடுக்கல், வாங்கல், ஏஜென்ஸி கமிஷன் போன்ற வற்றாலும் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். இது மட்டுமின்றி மற்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் துறை, வக்கீல் பணி, நீதித்துறை, இன்சூரன்ஸ் போன்றவைகளில் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். குருபகவானுக்கு 10ம்  வீடு நீச ஸ்தானம் என்பதனால் குரு வக்ரம் பெற்றிருந்தாலோ, உடன் சனி அமைந்திருந்தாலோ மட்டும்தான் கௌரவமான பணிகள்செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். மேற்கூறியவாறு குரு அமையப் பெற்று புதனுடன் இணைந்திருந்தால் பள்ளிகல்லூரிகளில் ஆசிரியர், பேராசிரியர்களாகபணியுரியக்கூடிய வாய்ப்பு, மற்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதில் வல்லவராக விளங்கக்கூடிய வாய்ப்பு, வங்கி பணி போன்றவற்றின் மூலம் சம்பாதிக்க முடியும்.

மேஷ லக்னத்திற்கு லக்னாதிபதியான செவ்வாய்க்கு 10ம் வீடு உச்ச ஸ்தானமாகும். செவ்வாய் 10ல் அமைந்து உச்சம், திக் பலம் பெற்று இருந்தால், மிகச் சிறந்த நிர்வாகியாக விளங்கக்கூடிய அமைப்பு, போலீஸ், இராணுவம் போன்ற துறைகளில்பணிபுரியக்கூடிய வாய்ப்பு, பேருந்து, ரயில்வே துறை போன்றவற்றில் உயர் பதவிகளை வகிக்கும் அமைப்பு,அதிகாரமிக்க பதவிகளை அடையும் வாய்ப்பு உண்டாகும். செவ்வாய் சூரியன் சேர்க்கைப் பெற்றிருந்தால் அரசு, அரசு சார்ந்ததுறைகளில்  சம்பாதிக்கும் அமைப்பைக் கொடுக்கும். உடன் சனியும் பலம் பெற்றிருந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் பதவிகள் தேடிவரும். 10ல் செவ்வாய் அல்லது சூரியன் அமையப் பெற்று உடன் சந்திரன் ராகு அல்லது கேது சேர்க்கை பெற்றால் மருத்துவத் துறையில் பணிபுரியக்கூடிய வாய்ப்புஉண்டாகும். சூரியன் செவ்வாயுடன் குரு சேர்க்கை அல்லது பார்வையிலிருந்தால் கௌரவமான உத்தியோகம் கிடைக்கும்.

சனி பகவான் ராகு அல்லது கேது சேர்க்கைப் பெற்றால் வாழ்வில் பல்வேறு வகையில் சோதனைகள், சட்ட சிக்கல்கள் நிறைந்த துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும். அதிலும் சுபர் பார்வையின்றி இருந்தால் மற்றவர்களை ஏமாற்றிப்பிழைக்கும் அவலநிலை உண்டாகும். சனி பகவான் பலமிழந்திருந்தால் நிலையான வேலை, நல்ல வருமானம் இல்லாமல் பல்வேறு துறைகளில் கடைநிலை ஊழியராக பணிபுரியும் நிலை, அடிமைத் தொழில் செய்யக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.

Saturday, October 24, 2015

Rahu kethu thosam pariharam, ராகு கேது தோஷம் விலக தோஷ பரிகாரங்கள், Sri Nagaraja Swami temple

தோஷ பரிகாரங்கள்: ராகு கேது தோஷம் விலக வணங்கவேண்டிய தெய்வங்கள்


நாகராஜா சுவாமி திருக்கோயில், நாகர்கோவில் 

(Sri Nagaraja Swami temple)


[Image1]


பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் :: நாகர்கோவில், கன்னியாகுமரி, தமிழ்நாடு

திருவிழா: தை மாதத்தில் பிரம்மோத்சவம், ஆவணி ஞாயிறு, ஆவணி ஆயில்யம் நட்சத்திர நாட்களில் விசேஷ பூஜை, கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை.

பிரார்த்தனை: நாக தோஷம், இராகு, கேது தொடர்பான தோஷ நிவர்த்திக்கு இக்கோயிலில் வேண்டிக்கொள்கிறார்கள்

நேர்த்திக்கடன்: இங்கு வேண்டி, பிரார்த்தனை நிறைவேறியவர்கள் நாகராஜருக்கு பால் பாயாசம் படைத்து, பாலபிஷேகம் செய்வித்தும், கோயில் வளாகத்தில் நாகபிரதிஷ்டை செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

இருப்பிடம் : நாகர்கோவில் வடசேரி மற்றும் மீனாட்சிபுரம் பஸ் ஸ்டாண்ட்களில் இருந்து ஒரு கி.மீ., தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் முறையான பரிகாரங்களைச் செய்ய ஜோதிடரை அனுகவும்.
  - ஜோதிடர் சுப்பிரமணியம் M.A., Astro., செல்: 9894720277 

Monday, October 19, 2015

திருமண பொருத்தம், Free Kalyana raasi porutham, Thirumana porutham, திருமணம், நட்சத்திர பொருத்தம், Marriage matching palan.

Marriage matching by star. astrological compatibility, Free Horoscope Matching, Free Marriage Matching, Free Kundali Matching, Horoscope match, Free Match Making, Rasi Match Free, Match Palan, horoscope match, horoscope stars, Free Kalyana raasi porutham for Male and female, Boy and Girl, Groom and Brid

திருமண நட்சத்திர பொருத்தம் - ஆண்களுக்கு
வ.எண்
ஆண் நட்சத்திரத்திற்குபொருத்தமான பெண் நட்சத்திரங்கள்
1.
அஸ்வனிபரணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம்
2.
பரணிரோகிணி, சுவாதி, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அஸ்வனி
3.
கார்த்திகை 1 ம் பாதம்சித்திரை 3, 4, அவிட்டம் 1, 2
4.
கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள்அஸ்தம், சித்திரை 1, 2, கேட்டை, அவிட்டம் 3, 4
5.
ரோகிணிமிருகசீரிஷம் 1, 2, உத்திரம், அனுஷம், உத்திரட்டாதி
6.
மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள்புனர்பூசம் 4, அஸ்தம், பூரட்டாதி, ரேவதி, ரோகிணி
7.
மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள்திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம், சுவாதி, பூரட்டாதி 4, ரேவதி
8.
திருவாதிரைபூசம், உத்திராடம் 1, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
9.
புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள்பூசம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி, ரேவதி
10.
புனர்பூசம் 4 ம் பாதம்பூசம், அனுஷம், பரணி, ரோகிணி
11.
பூசம்உத்திரம், அஸ்வனி, புனர்பூசம் 4
12.
ஆயில்யம்அஸ்தம், அனுஷம், பூசம்
13.
மகம்சித்திரை, அவிட்டம் 3, 4
14.
பூரம்உத்திரம், அஸ்தம், சுவாதி, உத்திராடம் 1, திருவோணம்
15.
உத்திரம் 1 ம் பாதம்பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூரம்
16.
உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள்பூராடம், திருவோணம், ரேவதி
17.
அஸ்தம்உத்திராடம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
18.
சித்திரை 1, 2 ம் பாதங்கள்விசாகம் 4, திருவோணம், ஆயில்யம்
19.
சித்திரை 3, 4 ம் பாதங்கள்விசாகம், திருவோணம், சதயம், ஆயில்யம்
20.
சுவாதிஅனுஷம், பூரட்டாதி 1, 2, 3, புனர்பூசம் 4, பூசம்
21.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்சதயம், ஆயில்யம்
22.
விசாகம் 4 ம் பாதம்சதயம்
23.
அனுஷம்உத்திராடம் 2, 3, 4, பூரட்டாதி, ரேவதி, உத்திரம்
24.
கேட்டைதிருவோணம், அனுஷம்
25.
மூலம்அவிட்டம், கார்த்திகை 1, மிருகசீரிஷம் 3, 4
26.
பூராடம்உத்திராடம், திருவோணம், அஸ்வனி, திருவாதிரை, சுவாதி, உத்திரம் 2-3-4, அஸ்தம்
27.
உத்திராடம் 1 ம் பாதம்பரணி, மிருகசீரிஷம் 3, 4, அஸ்தம், பூராடம்
28.
உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள்பரணி, மிருகசீரிஷம் 1, 2
29.
திருவோணம்உத்திரட்டாதி, அஸ்வனி, மிருகசீரிஷம் 1, 2, அனுஷம்
30.
அவிட்டம் 1, 2 ம் பாதங்கள்புனர்பூசம் 4, ஆயில்யம், சுவாதி, விசாகம், திருவோணம்
31.
அவிட்டம் 3, 4 ம் பாதங்கள்சதயம், புனர்பூசம் 1, 2, 3, விசாகம் 4
32.
சதயம்கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம் 4, அனுஷம், அவிட்டம் 3, 4
33.
பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள்உத்திரட்டாதி, ரோகிணி, பூரம், அனுஷம், பூராடம்
34.
பூரட்டாதி 4 ம் பாதம்உத்திரட்டாதி, பூராடம், திருவோணம், ரோகிணி, பூசம்
35.
உத்திரட்டாதிரேவதி, புனர்பூசம், உத்திரம் 2, 3, 4, உத்திராடம், பூரட்டாதி 4
36.
ரேவதிபரணி, பூசம், அஸ்தம், பூராடம், உத்திரட்டாதி

திருமண நட்சத்திர பொருத்தம் - பெண்களுக்கு
வ.எண்
பெண் நட்சத்திரத்திற்குபொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்
1.
அஸ்வனிபரணி, திருவாதிரை, பூசம், பூராடம், திருவோணம், சதயம்
2.
பரணிபுனர்பூசம், உத்திராடம், ரேவதி, அஸ்வனி
3.
கார்த்திகை 1 ம் பாதம்சதயம்
4.
கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள்சதயம்
5.
ரோகிணிமிருகசீரிஷம் 1, 2, புனர்பூசம் 4, உத்திரம் 1, பூரட்டாதி, பரணி
6.
மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள்உத்திரம் 1, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், சதயம், அஸ்வனி, ரோகிணி
7.
மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள்திருவாதிரை, உத்திரம், அஸ்தம், மூலம், உத்திராடம் 2, 3, 4, சதயம், பரணி
8.
திருவாதிரைபூரம், பூராடம், பரணி, மிருகசீரிஷம் 3, 4
9.
புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள்அவிட்டம் 3, 4, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
10.
புனர்பூசம் 4 ம் பாதம்பூசம், சுவாதி, அவிட்டம் 1, 2, உத்திரட்டாதி, மிருகசீரிஷம்
11.
பூசம்ஆயில்யம், அஸ்தம், சுவாதி, விசாகம் 1-2-3, பூரட்டாதி 4, ரேவதி, திருவாதிரை, புனர்பூசம்
12.
ஆயில்யம்சித்திரை, அவிட்டம் 1, 2
13.
மகம்சதயம்
14.
பூரம்உத்திரம் 1, பூரட்டாதி 1, 2, 3, அஸ்வனி
15.
உத்திரம் 1 ம் பாதம்சுவாதி, அனுஷம், பரணி, ரோகிணி, பூசம், பூரம்
16.
உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள்அனுஷம், பூராடம், ரோகிணி, பூசம், பூரம்
17.
அஸ்தம்பூராடம், உத்திராடம் 1, ரேவதி, மிருகசீரிஷம், பூரம், ஆயில்யம், கார்த்திகை 2, 3, 4
18.
சித்திரை 1, 2 ம் பாதங்கள்கார்த்திகை 2, 3, 4, மகம்
19.
சித்திரை 3, 4 ம் பாதங்கள்கார்த்திகை 1, மகம்
20.
சுவாதிபூராடம், அவிட்டம் 1, 2, பரணி, மிருகசீரிஷம் 3, 4, பூரம், புனர்பூசம்
21.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்அவிட்டம் 1, 2, சித்திரை 3, 4
22.
விசாகம் 4 ம் பாதம்அவிட்டம், சதயம், சித்திரை
23.
அனுஷம்கேட்டை, சதயம், பூரட்டாதி 1, 2, 3, ரோகிணி, புனர்பூசம், ஆயில்யம், அஸ்தம், சுவாதி
24.
கேட்டைகார்த்திகை 2, 3, 4
25.
மூலம்உத்திரட்டாதி, பூரம், சுவாதி, பூராடம்
26.
பூராடம்பூரட்டாதி, புனர்பூசம் 1, 2, 3, உத்திரம், ரேவதி
27.
உத்திராடம் 1 ம் பாதம்உத்திரட்டாதி, திருவாதிரை, பூரம், பூராடம், அஸ்தம், சுவாதி
28.
உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள்உத்திரட்டாதி, பரணி, பூசம், அஸ்தம், அனுஷம், பூராடம்
29.
திருவோணம்அவிட்டம் 1, 2, பூரட்டாதி 4, பரணி, புனர்பூசம் 4, உத்திரம் 2, 3, 4, சித்திரை, கேட்டை, பூராடம்
30.
அவிட்டம் 1, 2 ம் பாதங்கள்கார்த்திகை 1, மூலம்
31.
அவிட்டம் 3, 4 ம் பாதங்கள்கார்த்திகை, சதயம், மகம், மூலம்
32.
சதயம்சித்திரை 3, 4, விசாகம், அவிட்டம் 3, 4
33.
பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள்மிருகசீரிஷம் 1, 2, சுவாதி, அனுஷம்
34.
பூரட்டாதி 4 ம் பாதம்உத்திரட்டாதி, மிருகசீரிஷம், அனுஷம்
35.
உத்திரட்டாதிரேவதி, திருவாதிரை, ரோகிணி, புனர்பூசம் 1, 2, 3, அஸ்தம், திருவோணம், பூரட்டாதி
36.
ரேவதிமிருகசீரிஷம், புனர்பூசம் 1, 2, 3, உத்திரம் 2, 3, 4, அனுஷம், உத்திரட்டாதி

Thursday, September 17, 2015

Rasi Palan 2016 - Meenam (ராசி பலன் 2016 - மீன ராசி)



  
Ø  ராசி : மீனம்
Ø  நட்சத்திரம் : பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல்,           உத்திரட்டாதி, ரேவதி முடிய
Ø  அதிஷ்ட கல் : மரகதம்
Ø  அதிஷ்ட வண்ணம் : வெள்ளை
Ø  அதிஷ்ட எண் : 2, 8, 9
Ø  அதிஷ்ட திசை : North - East

ராசி பலன் 2016 - மீன ராசி
வெற்றி வேணுமா போட்டு பார்க்கணும் எதிர்நீச்சல் என்ற கொள்கையுடைய மீனராசி அன்பர்களே!

இந்த ஆண்டில் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சரளமான பண வரவால் சந்தோஷம் அடைவீர்கள். நம்பிக்கையுடன் உங்கள் பணிகளில் ஈடுபடுவீர்கள். நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து மன நிறைவு அடைவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும். புதிய முதலீடுகளில் தைரியத்துடன் ஈடுபடுவீர்கள். அதில் உங்களின் முழுத் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறுவீர்கள். பழைய கடன்களும் வசூலாகும். உங்கள் எதிரிகளின் பலம் குறையும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். மன அழுத்தம் மறையும். சிந்தனையில் தெளிவு உண்டாகும்.

கேது பகவானால் சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் மூலமாக நன்மை அடைவீர்கள். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். ஆன்மீகப் பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். புத்திசாலிகளின் நட்பைப் பெற்று பலனடைவீர்கள்.

ராகு பகவானால் மன உறுதி உண்டாகும். கவலைகள் மறைந்து மகிழ்ச்சி பிறக்கும். ஏற்றுமதி - இறக்குமதி வியாபாரங்கள் சூடுபிடிக்கும். தூர தேசத்திலிருந்து மகிழ்ச்சி தரும் செய்திகளைக் கேட்பீர்கள். வெளிநாட்டுப் பயணங்களைச் செய்வீர்கள். சேமிப்பு விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உங்களைப் பற்றி அவதூறாகப் பேசியவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உண்மை நிலையைப் புரிய வைத்து, நட்பைத் தக்க வைத்துக் கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படும். பெற்றோர் மற்றும் நண்பர்கள் வழியில் ஏற்பட்ட மன வருத்தங்களை முற்றிலும் நீக்குவார். குறைந்த அளவு முதலீட்டிலும் அதிக லாபத்தை அள்ளுவீர்கள்.

எண்ணங்களுக்குத் தகுந்த செயல் வடிவம் கொடுப்பீர்கள். எதிரிகளால் தொல்லைகள் ஏற்படாது. உடல் உபாதைகள் ஏதேனும் இருப்பின், இக்கால கட்டத்தில் தீரும். வீண் வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். அலைச்சல்களுடன் நடந்த செயல்கள் நல்லபடியாக முடிவடையும். வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் கை வந்து சேரும். சென்ற இடத்திலெல்லாம் பிரச்சினையை சந்தித்தவர்கள்கூட இந்தக் காலகட்டத்தில் விரும்பி வரவேற்கப்படுவார்கள். சிலர் மனம் விரும்பிய வீட்டிற்குக் குடி பெயர்வார்கள். தக்க சமயத்தில் உயர்ந்தவர்களின் நட்பைப் பெற்று கௌரவக் குறைவு ஏற்படாமல் காக்கப்படுவீர்கள். களவு போயிருந்த பொருட்கள் திரும்பவும் கிடைக்கும். உறுதியின்றிச் செய்த வேலைகளில் ஒரு பிடிப்பு ஏற்பட்டு அவை மளமளவென்று நடந்தேறும்.

உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீராக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்குமென்றாலும் அவர்களிடம், "மரியாதைக்குரிய தொலைவில்' இருந்து பழகுவது நல்லது. சக ஊழியர்களுடன் நல்ல நட்பு தொடர்வதால் உங்களின் வேலைகள் குறித்த காலத்திற்குள் நிறைவேறிவிடும். உங்களின் வேலைத் திறனைக் கூட்டிக்கொள்ள புதிய அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள். புதிய வாடிக்கையாளர்களையும், புதிய சந்தைகளையும் நாடிச் செல்வீர்கள். இந்த ஆண்டு முழுவதும் கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் சிரமங்கள் உண்டாகாது. விவசாயிகளுக்கு நீர்வரத்து நன்றாக இருக்கும். எனவே குறித்த காலத்தில் விதைத்து அறுவடை லாபத்தை அள்ளுங்கள். விளை பொருட்களின் விற்பனை மிகவும் நன்றாகவே இருக்கும். அதேசமயம் கால்நடைகளால் பலன்கள் உண்டாகாது.

அரசியல்வாதிகள், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் கெüரவம் உயரும். சமுதாயத்தில் அந்தஸ்து உண்டாகும். உங்களின் முயற்சிகள் உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.

கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர்களுக்காகச் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் அமைதி நிலவும். வெளியூர் மற்றும் வெளிநாட்டிலிருந்து இன்பகரமான செய்திகள் வந்து சேரும். கணவரிடம் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். கணவரின் உறவினர்களோடு வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

மாணவமணிகள் படிப்பில் வெற்றி வாகை சூடுவீர்கள். உங்கள் ஞாபக சக்தியும், அறிவாற்றலும் பெருகும். அதேநேரம் விளையாடும் நேரங்களில் கவனமாக இருக்கவும். பெற்றோர்களின் ஆதரவுடன் உங்களின் எதிர்காலக் கல்வித் திட்டங்களைச் செவ்வனே நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

 
பரிகாரம் – மீன ராசி

மீன ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள் ;

திருசெந்தூர் செந்திலாண்டவரை தரிசனம் செய்துவர வேண்டும். காவல் தெய்வங்களுக்கு உரிய முறைப்படி வணங்க வேண்டும். இருக்கன்  குடி மாரியம்மன் வழிபாடு செய்தல் வேண்டும்.

மீன ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் துன்பங்கள் நீங்கும்.

“ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம”


AstrologyPalan, Jathagam, jathagapalan, birthdayhoroscope, Josiyam, stars, gurutransit, rahuketu, sanipeyarchi, tamilnewyearrasipalan, Josiayam, subhamuhurtamdates, dailyhoroscope, horoscopetoday, numerology, horoscope, horoscopestars, freehoroscopeonline, horoscopereading, astrologyhoroscope, mobilehoroscope, freeyearlyhoroscope, yearlyhoroscopes, joshiyam, rahuketutransit, rahuketupeyarchi, transitastrology, saturntransit, jupitertransit, subhamuhurthadays, subhamuhurtham, subhamuhurthamdates, jathagakanippu, horoscopematching, raasi, rashinakshatra, raasiporutham, rasipalan, kalyanaporutham, vastu, vaastu, vastutips, vaastuforhome, vastuhouse, vaastushastra, mesham, rishabam, mithunam, kadagam, simmam, kanni, thulaam, viruchigam, dhanusu, magaram, kumbam, meenam, Horoscopematch, MatchMaking, RasiMatch, MatchPalan, AstrologyResearch, VirtualPooja, Palmistry, monthlyhoroscopes, AstrologyRasipalan, dailyastrology, weeklyhoroscopes, loveastrology, birthastrology, astrology, horoscopes, aries, taurus, gemini, cancer, leo, virgo, libra, scorpio, sagittarius, capricorn, aquarius, pisces, Freedailyhoroscopes, astrological, astrologicalsigns, astrologer, astrologicalsign, tarot, DailyHoroscopes, YearlyHoroscope, monthlyhoroscope, weeklyhoroscope, palan, jathaga, birthday, guru, transit, rahu, ketu, sani, peyarchi, Josiyar, daily, today, weekly, online, reading, mobile, saturn, subha, muhurtham, days,dates, kanippu, matching, rashi, nakshatra, porutham, rasi, kalyana, Jathaka, Match, Making, monthly, birth.