Slider

Rasipalan

Tirupur Astrologer Numerology Astrology Tamil Astrology Horoscope in Tamil Jothidam astrology predictions consultation Future Astrology Hindu astrology Indian Jadhagam Best Astrologer famous astrologer in tirupur astrologer tirupur famous astrologer in tamilnadu astrologer Traditional consultations salem coimbatore Tirupur Madurai Gopichetipalayam Avinashi sathy Trichy erode jothidar erode astrologer tamil jothidar tirupur tamilnadu jothidar.jathagam parpavar jathaga porutham josiyam parpavar best jothidar tirupur tirupur jothidar tirupur jothidam Most popular Josiyam mobile horoscope Online Astrology online Horoscope tirupur astro tirupur jathagar jothidam tirupur jothidar in jothidar in tirupur prasanna jothidam tirupur vastu jothidar nalla astrologer tirupur Rasi palangal sanipeyarchi palangal guruperchi palangal Tamil-prediction Horoscope in Tamil Tamil Jothidam Astrologer in Tamilnadu Tamil Jothidar Astrologer in Ariyalur Astrologer in Chennai Astrologer in Coimbatore Astrologer in Cuddalore Astrologer in Dharmapuri Dindigul Astrologer in Erode Astrologer in Kanchipuram Kanyakumari Astrologer in Karur Astrologer in Krishnagiri in Madurai Astrologer in Nagapattinam Namakkal Astrologer in Nilgiris Astrologer in Perambalur Pudukkottai Astrologer in Ramanathapuram Astrologer in Sivaganga Astrologer in Thanjavur Theni Astrologer in Thoothukudi Tiruchirappalli Astrologer in Tirunelveli Astrologer in Tiruvallur Tiruvannamalai Astrologer in Tiruvarur Vellore Astrologer in Viluppuram Astrologer in Virudhunagar Chart Astrology Consultation Astrology Horoscope Astrology online Astrology Predictions Services Best astrologer Best astrologer tirupur Best Jothidar Tirupur Jothidar famous astrologer in tirupur Good Astrologer In tirupur Good Astrologer In Tamil Nadu Tamil Jothidam Vedic astrology Specialist in Astrology Greatest Computer Astrologer in tirupur famous astrologers in Best astrologers astrologers in tirupur astrologers experts in tirupur astrologers experts in Tamil Nadu Specialist in Astrology Tamil Nadu Astrologers astrologers experts in tirupur chennai komarapalayam best astrologer chennai numerology astrology in tamil numerology

Our service running text

கிரக தோஷங்களினால் காதல் பிரச்சினை, திருமணத்தடை, கணவன் மனைவி பிரச்சினை, குழந்தையின்மை, தொழில் நஷ்டம், வேலை வாய்ப்பின்மை, பதவி உயர்வு தடங்கள், எதிரிகள் தொல்லை, கடன் தொல்லை, மனம் நிம்மதி யின்மை, நோயினால் பல்வேறு உடல் உபாதைகள் போன்ற அனைத்தும் ஏற்ப்படும். அவற்றிலிருந்து விடுபட்டு நீண்ட ஆயுளும் நிறந்த செல்வமும் பெற்று வளமுடன் வாழ எம்மை அனுகவும். | ஜோதிடம் | ஆன்மிகம் | மந்திரம் | திருமண பொருத்தம் | ஜாதகம் | ஜாமக்கோள் ஆருடம் | ராசி பலன் | சந்திர நாடி | பிருகு நாடி | ஜெம்ஸ் | பட்சி | டாரட் | குரு நாடி | சனி நாடி | மருத்துவ ஜோதிடம் | கர்மா பரிகாரம் | தாம்பூல பிரசன்னம் | கேபி | சோழிய பிரசன்னம் | தேவபிரசன்னம் | எண் கணிதம் | பெயர் பட்டியல்|

Sunday, October 8, 2017

Rasi Palan 2018 - Thulaam Rasi | ராசி பலன் 2018 - துலாம் ராசி




Ø  ராசி : துலாம்
Ø நட்சத்திரம் : சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி,              
விசாகம் 3-ஆம் பாதம் முடிய
Ø  அதிஷ்ட கல் : வைரம்
Ø  அதிஷ்ட வண்ணம் : கருப்பு
Ø  அதிஷ்ட எண் : 1, 5, 8
  Ø  அதிஷ்ட திசை : கிழக்கு


2018 Rasi Palan Thulaa Rasi | 2018 ராசி பலன் துலா ராசி

பணிகளை சுதந்திரமாக செய்யும் விரும்பும் துலாம் ராசி அன்பர்களே! 


இந்த ஆண்டு ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவானால் வாகனங்களுக்கு சிறிது பராமரிப்பு செலவுகள் செய்ய நேரிடும். உங்களின் நண்பர்கள், உங்களுக்குத் தேவையானவற்றைத் தவிர்த்துத் தேவையற்ற விஷயங்களைப் பேச நேரிடலாம். அதனால் எவரையும் முன்னுதாரணமாகக் கொள்ளாமல், உங்களின் தனித் தன்மையை வெளிப்படுத்திச் செயலாற்றுங்கள். உங்களின் வாழ்க்கையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவார். தேவையற்ற கவலைகள் உங்கள் மனதை விட்டு அகலும். உங்களின் அணுகுமுறையால் பகைவர்களையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள். வெளிநாட்டில் வசிக்கும் உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடுவீர்கள். அதனால் சிற்சில ஆதாயங்களும் ஏற்படும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

உத்யோகஸ்தர்கள் தங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பீர்கள். அதேநேரம் சில சமயங்களில் காரணமில்லாமல் மனதில் தைரியம் குறையும். இச்சமயங்களில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அலுவலக வேலைகள் தொடர்பான பயணங்களால் நன்மை உண்டாகும். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும். எதிர்பாராத பதவி உயர்வால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போவீர்கள்.


வியாபாரிகளுக்கு முயற்சிகளுக்குத் தகுந்த லாபம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் அனைத்துச் செயல்களிலும் வெற்றியடைவீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர, புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தினாலும் கடன் சுமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும்.


விவசாயிகளுக்குக் கொள்முதல் லாபம் குறைவாகவே இருக்கும். செலவு குறைந்த மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்வதன் மூலம் வருமான இழப்பை ஈடு செய்யவும். மேலும் இக்காலத்தில் நீர் வரத்தும் குறைவாக இருக்கும். அதனால் பாசன வசதிகளுக்காக, சேமிப்பைக் கரைக்க நேரிடும்.


அரசியல்வாதிகளுக்குப் பெயரும், புகழும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். தொண்டர்களின் ஆதரவு, உங்களை உற்சாகப்படுத்தும். கட்சியில் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். அவற்றை நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள். மக்களுக்கு நன்மை செய்வதற்கான உங்களின் முயற்சிகளை எதிர்கட்சியினரும் பாராட்டுவார்கள். புதிய பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள்.


கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் குறைவாகவே இருந்தாலும் பண வரவு சீராகவே தொடரும். ரசிகர்களின் ஆதரவும் அமோகமாகவே இருக்கும். உங்கள் திறமையினால் புகழைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். ராசியில் அமர்ந்துள்ள உச்சம் பெற்ற புத்தி ஸ்தானாதிபதியாகிய சனி பகவானால் உங்களின் கற்பனை சக்தி ஊற்றுபோல் பெருகும். இது வருமானமாகவும் மாறி பயன் தரும். உங்கள் செயல்களில் தனித் திறமையை வெளிப்படுத்தும் ஆண்டாக இது அமைகிறது. இதை முழுமையாகப் பயன்படுத்தி வெற்றி காணுங்கள்.


பெண்மணிகளுக்குக் கணவரின் அன்பும், பாசமும் அளவுக்கதிகமாகவே கிடைக்கும். ஆன்மீகச் சுற்றுலாவும், இன்பச் சுற்றுலாவும் சென்று மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிறையும். பிள்ளைகளாலும் சந்தோஷம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
மாணவமணிகள் உழைப்பிற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். கடுமையாக உழைத்துப் படிக்கும் மாணவர்கள் சாதனை புரிவார்கள். உழைப்பு குறைந்தால் உயர்வும் குறையக்கூடும். ஆனால் பெற்றோர்களின் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும். வெளி விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வெற்றிவாகை சூடுவீர்கள்.

துலாம் ராசி பரிகாரம்: ( Pariharam - Thulaam Rasi ):

மேலே கொடுக்கப்பட்டவை பொதுவான பலன்கள். ஆனால்  உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்துள்ள நிலை, மற்ற கிரகங்கள்  அவற்றைப் பார்க்கும் நிலை அதனால் உங்களுக்கு ஏற்படவிருக்கும் நன்மை அல்லது பாதிப்புகளை அறிந்துகொள்ள ஜோதிடரை தொடர்புகொள்ளுங்கள்


கணித ஜோதிடர் சுப்பிரமணியம் M.A., Astro.,  Cell: 9894720277

தமிழ் பஞ்சாங்கம் 2018, இன்றைய நல்ல நேரம், 2018 புத்தாண்டு பலன்கள், வருட பலன் 2018, தமிழ் இராசி பலன் 2018, புதிய ஆண்டு ஜோசியம், 2018 ஆண்டு ராசி பலன், வார ராசி பலன், 2018 மாத ராசி பலன், தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2018, ராசிபலன் 2018 மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், 2018 ராசி பலன் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், 2018 ஆண்டு ராசி பலன் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசி பலன், 2018 புத்தாண்டு பலன், புத்தாண்டு ராசிபலன் 2018, புதிய ஆண்டு ஜோசியம், தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள், 2018 புத்தாண்டு வாழ்த்துக்கள், தமிழ் காலண்டர் 2016-2018, சுப முகூர்த்த நாட்கள் 2018, 2018 திருமண முகூர்த்தம் நாட்கள், 2018 தமிழ் ராசி பலன், புத்தாண்டு பலன்கள் 2018, நல்ல நாட்கள், ஜோதிடம், ஜாதகம், முகூர்த்த தினங்கள் 2018, திருமண நாட்கள் 2018, கல்யாண முகூர்த்த தேதிகள் 2018, அரசு விடுமுறை 2018 தமிழ்நாடு, நட்சத்திரம்  பலன் 2018, நட்சத்திர பொருத்தம், அசுவனி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீர்ஷம், திருவாதிரை, 2018 நட்சத்திரம்  பலன், நட்சத்திர பொருத்தம், புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்தரம், அஸ்த்தம், சித்திரை, சுவாதி, விசாகம், நட்சத்திர குணங்கள், நட்சத்திர பொருத்தம், அனுஷம், கேட்டை, நட்சத்திரம்  பலன், நட்சத்திர பொருத்தம் மூலம், பூராடம், உத்தாரடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திர குணங்கள்.

Rasi Palan 2018 - Mithunam Rasi | ராசி பலன் 2018 மிதுனம் ராசி



Ø  ராசி : மிதுனம்
Ø நட்சத்திரம்:மிருகசிரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை
Ø  அதிஷ்ட கல் : மரகதம்
Ø  அதிஷ்ட வண்ணம்: பச்சை
Ø  அதிஷ்ட எண்: 5, 6, 8
Ø  அதிஷ்ட திசை: வடகிழக்கு


2018 Rasi Palan Mithuna Rasi | 2018 ராசி பலன்  மிதுன ராசி


உயர்ந்த பண்பின் இருப்பிடமாகத் திகழும் மிதுனராசி அன்பர்களே! 
இந்த ஆண்டு, ஸ்திர ராசியில் வலுப்பெற்று சஞ்சரிக்கும் குரு பகவானால் மகிழ்ச்சி தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள். அதன் மூலம் வருமானமும் பெருகும். உங்கள் செயல்களை நேர்மையான பாதையில் செவ்வனே செய்து முடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். “பங்குச் சந்தை’ முதலீடு போன்ற இனங்கள் மூலம் திடீர் பண வரவு உண்டாகும். இந்த ஆண்டு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான், உங்களின் ஆன்மீக நாட்டத்தை அதிகப்படுத்துவார். குல தெய்வ வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். தர்ம காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். சிலருக்கு நல்ல குருநாதரிடம் தீட்சை பெறும் பாக்கியமும் உண்டாகும். இவை ஒருபுறமிருக்க, இந்த ராசி நேயர்கள் பலருக்கு சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள முடியாமல் பணிகள் கசக்கிப் பிழியக் கூடும். இதனால் உடலில் அவ்வப்போது சோர்வு உண்டாகும்.


மாணவமணிகள் புத்திசாலித்தனமாகச் செயல்படுவீர்கள். நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு வாய்ப்பு உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று பாராட்டைப் பெறுவீர்கள். உடற்பயிற்சிகளை மேற்கொண்டு சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். பெற்றோர்களின் அறிவுரைப்படி நடந்துகொண்டு மேலும் சிறப்படையுங்கள்.

உத்யோகஸ்தர்கள் இந்த ஆண்டு கடின உழைப்பைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயலாற்றவும். சுணக்கத்திற்கும் சோம்பலுக்கும் இடம் கொடுக்காமல் பணியாற்றினால் மேலதிகாரிகளின் ஆதரவை எளிதில் பெறலாம். இல்லையேல் கிடுக்கிப்பிடிதான்! எப்போதும் நிதானமாகவே பேசி சக ஊழியர்களின் அன்பைப் பெறவும். இதற்குப் பயனும் உண்டு. உங்கள் உடல் உழைப்பிற்கு மேல் இரு மடங்கு வருமானத்தைக் காண்பீர்கள். லாப ஸ்தானத்தை சனி பகவான் பார்ப்பதால் சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்; பயணங்களும் பலன் தரும்.

வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடிவடைந்தாலும் உங்கள் செயல்களில் கூடுதல் அக்கறை காட்டவும். மற்றபடி சமுதாயத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். புதிய சந்தைகளைத் தேடிச் சென்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புதிய முதலீடுகளையும் துணிந்து செய்யலாம்.

விவசாயிகளின் திறமைகள் வீண் போகாது; அமோகமான விளைச்சலைக் காண்பீர்கள். புழு, பூச்சிகளின் பாதிப்பிலிருந்து பயிர்களைக் காப்பாற்ற செலவு செய்ய நேரிடும். சக விவசாயிகளுக்கும் சிறு உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். உங்களுக்குக் கடன் கொடுத்தவர்கள் தொல்லை தர மாட்டார்கள். உப தொழில்களிலும் கவனம் செலுத்துவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையத் தொடங்கும். எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிக் குறை சொல்வதைக் குறைத்துக் கொள்வார்கள். தொண்டர்கள் உங்கள் பெருமைகளைப் புரிந்து கொள்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் மனதிற்கினிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். கட்சிப் பிரச்சாரங்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். அதேசமயம் எவரையும் குறைத்து மதிப்பிடாமல் செயலாற்றவும்.

கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும், கௌரவமும் கட்டாயம் கிடைக்கும். பண வரவில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். அமைதியாகச் செயலாற்றுவீர்கள். சில விரயங்களும் அவ்வப்போது உண்டாகும் என்பதால் சேமிப்பு விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.

பெண்மணிகளுக்குக் கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். அதே சமயம் குடும்பத்தில் உங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் நடந்து கொண்டு அமைதி காப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

மிதுனம் ராசி பரிகாரம்: ( Pariharam - Mithuna Rasi ):

மேலே கொடுக்கப்பட்டவை பொதுவான பலன்கள். ஆனால்  உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்துள்ள நிலை, மற்ற கிரகங்கள்  அவற்றைப் பார்க்கும் நிலை அதனால் உங்களுக்கு ஏற்படவிருக்கும் நன்மை அல்லது பாதிப்புகளை அறிந்துகொள்ள ஜோதிடரை தொடர்புகொள்ளுங்கள்

கணித ஜோதிடர் சுப்பிரமணியம் M.A., Astro.,  Cell: 9894720277

2018 புத்தாண்டு பலன்கள் மிதுனம், வருட பலன் 2018 மிதுனம் ராசி, தமிழ் இராசி பலன் மிதுனம், ஜோசியம், 2018 ஆண்டு பலன் மிதுனம் ராசி, வார ராசி பலன் மிதுனம், 2018 மாத ராசி பலன் மிதுனம் ராசி, தமிழ் புத்தாண்டு பலன்கள் மிதுனம் ராசி, ராசிபலன் 2018 மிதுனம், Rasi palan 2018 Mithunam Rasi, tamil puthandu rasi palan 2018 Mithunam Rasi, Rasi Palan In Tamil Mithunam, 2018 New Year Wishes Sms, Puthaandu Raasi Palangal 2018 Mithunam rasi, new year josiyam, Mithunam rasi palangal 2018.

வரலட்சுமி விரத வழிபாட்டு பூஜை முறைகள் | Varalakshmi puja


வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடிப்பதால் முற்பிறவி பாவமெல்லாம் நீங்கும். திருமண பாக்கியம், மாங்கல்ய பலம், குழந்தை செல்வம் மற்றும் எல்லா ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் இந்த வரலட்சுமி விரதம். விரத தினத்தன்று கீழ்காணும் ஸ்லோகத்தைச் சொல்லிக்கொண்டிருக்கலாம்:

பாக்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸௌமாங்
கல்ய விவர்த்தினி
பாக்யம் தேஹி ச்ரியம் தேஹி, ஸர்வகா
மாம்ச்ச தேஹிமே
வரலக்ஷ்மி நமஸ்தேஸ்து விஷ்ணு
வக்ஷஸ்தலஸ்த்திதே
வரம் தேஹி ச்ரியம் தேஹி ஸர்வகாமாம்ச்
சதேஹிமே

பொதுப் பொருள்: அனைத்து பாக்கியங்களையும் அருளும் பாக்ய லக்ஷ்மியே, நமஸ்காரம். மாங்கல்ய பலனை உறுதிப்படுத்துபவளே, நமஸ்காரம். எங்களுக்கு எல்லா நலன்களையும் பாக்கியங்களையும் தந்தருளி, எங்களது அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றித் தரும் வரலக்ஷ்மித் தாயே, நமஸ்காரம். திருமாலின் திருமார்பில் எழுந்தருளியுள்ள தேவியே, எங்களுக்கு அனைத்து வரங்களையும் தந்தருள்வாய் அம்மா.
வரலட்சுமி விரத வழிபாட்டு பூஜை முறைகள் | Varalakshmi puja, முற்பிறவி பாவங்கள் நீங்கும் மந்திரம், Ganapathy Homam, Ganapathy Puja, Ganapathy Mantra, Ganapathy Puja is performed to please Lord Ganapthy to get blessings. Ganapathy homam and puja bestows material benefits and removes all obstacles in life

சமய தீட்சை மந்திரம் | samaya deeksha manthiram

சமய தீட்சை மந்திரம்

"தீட்சை" என்னும் சொல் 'ஞானத்தைக் கொடுத்து மலத்தைக் கெடுப்பது என்னும் பொருளுடையது என ஆகம நூல்கள் விளக்கம் தருகின்றன. இச் சொல்லில் தீ-கொடு என்னும் வினையடி கொடுத்தலைக் குறிக்கின்றது. க்ஷி-அழி என்னும் மற்ற வினையடி அழித்தலைக் குறிக்கின்றது. ஞானமாகிய நற்பேற்றை அளித்து, மும்மலங்களை அழிப்பதனால் இது தீக்ஷா (தீட்சை) எனப்பட்டது.

 நீரினால் வெளி உடம்மைக் கழுவிச் சுத்தம் செய்யலாம்; உள்ளிருக்கும் உடம்பு சூக்கும உடம்பு; அதில் உள்ள தீய அழுக்குகளை, ஆசமனம், மந்திர செபம், அகமர்ஷணம் முதலிய அனுட்டானக் கிரியைகளினாலேயே போக்க முடியும். தீட்சை பெற்றிருந்தால், அனுட்டான சாதனைகளினால், தேகத்தையும் மனதையும் அடக்கி நம் வசப்படுத்தவும், தீச் செயல்கள் தோன்றாமலும் செய்ய முடியும்.

மச்ச முனிவர் தனது “மச்சமுனி திருமந்திரம் 800” என்ற நூலில் குறிப்பிட்டிருக்கு தீட்சை முறைகளைப் பற்றி பார்ப்போம். இவற்றினை “தசதீட்சை” என்கிறார் மச்ச முனிவர். இந்த தீட்சை முறைகள் மறைபொருளில் அருளப் பட்டிருக்கின்றன.

தனது தீட்சை முறைகளை மச்சமுனிவர் பின்வருமாறு துவங்குகிறார்..

திரமான தீட்சை செப்புவேன் கேளு
கரமான நெல்லிக்கனி யதுபோல
சரமான வாசி சங்கர கெவுரி
வரமான தீட்சை மகிழ்ந்திடக் கேளே.

இந்த படிமுறைகளை தினமும் காலையும் மாலையும் 108 தடவைகள் வீதம், தூய்மையான அறையில் பத்மாசனத்தில் இருந்து செய்தல் வேண்டும். முடியாதவர்கள் தங்களுக்கு வசதியான ஓர் நிலையில் உடலை தளர்வாக வைத்து கண்களை மென்மையாக மூடி, மனதினுள் இந்த மந்திரங்களை ஜெபிக்க வேண்டும் என்கிறார்.

முதலாவது தீட்சை
கேளு அம்மென்று கெடியாக மண்டலம்
நாளுடன் செபிக்கில் நமனது விலகுஞ்
சேலுடன் தேகந் திரமது வாகும்
மாலுடன் சித்தும் வந்திடுந் தானே.

முதல் தீட்சையாக "அம்" என்ற மந்திர உச்சரிப்பை ஒரு மண்டலம் தொடர்ந்து செபித்தால் எமன் அண்ட மாட்டானாம்.மேலும் இந்த மந்திரத்தை செபிப்பவர் உடலானது அழியாத நிலையை அடையும் என்கிறார்.மேலும் சில சித்துக்களும் கைவரப் பெறுமாம்.

இரண்டாம் தீட்சை
தானது ரெண்டாந் தீட்சையைக் கேளு
ஆனது உம்மென் றள்புட னீயும்
வானது நோக்கி மண்டலஞ் செபித்தால்
கோனவ னருள்தான் குடியிருப்பாமே.

இந்த தீட்சையில் "உம்" என்ற மந்திரத்தை வானத்தை நோக்கியவாறு ஒரு மண்டலம் செபித்து வந்தால் இறையருள் சித்தியாகுமாம்.நேற்றைய பதிவில் கூறியுள்ள முறைப்படி இந்த மந்திரத்தை செபித்து வர வேண்டும்.

மூன்றாம் தீட்சை
குடியினில் மூன்றாந் தீட்சையைக் கேளு
முடியினில் சென்று முழுமனதாக
அடியினில் சிம்மென் றன்புட னீயும்
வடிவுடன் நன்றாய் வணங்கிடு முத்தியே.

இரண்டாவது தீட்சையை நிறைவேற்றிய பின்னர் இந்த மூன்றாவது தீட்சையை துவங்க வேண்டும். இந்த தீட்சையில் "சிம்" என்ற மந்திரத்தை, மனதை ஒரு முகப் படுத்தி அர்ப்பணிப்புடன் ஒரு மண்டலம் செபித்து வர சித்தியாகும் என்கிறார்.

நான்காம் தீட்சை
முத்தியில் நாலாந் தீட்சையைக்கேளு
அத்த னருளை யன்புட நோக்கி
உத்தம நம்மென் றுரிமையாய்ச் செபிக்கில்
சித்தஞ் சிவமாய்த் தானவ னாமே.

மூன்றாவது தீட்சையை செபித்து அது சித்தியான பின்னர் இந்த நான்காம் தீட்சையை துவங்கிட வேண்டுமென்கிறார்.இந்த முறையில் "நம்" என்ற மந்திரத்தை ஒரு மண்டலம் தடையின்றி செபித்து வர செபிப்பவரின் சித்தம் சிவமயமாகுமாம்.

ஐந்தாம் தீட்சை
தானது அஞ்சாந் தீட்சையைக் கேளு
ஆனது தம்மென் நன்புட னீயும்
வானுட நோக்கி மகிழ்ந்துருக் கொண்டால்
ஊனுடன் தேகம் உறுதியு மாமே.

நான்காவது தீட்சையை செபித்து சித்தியடைந்த பின்னர், ஐந்தாவது தீட்சையாக "தம்" என்ற மந்திரத்தை முழுமனதுடன் ஒரு மண்டலம் செபித்து வர தேகம் உறுதி மிக்கதாகுமாம்.

ஆறாம் தீட்சை
உறுதியா மாறாந் தீட்சையைக் கேளு
நெறி தவறாமல் நேர்மையில் நின்று
சுருதியி லங்கென் றுடர்ந்துருக் கொண்டால்
பருதி போல் தேகம் பக்குவமாமே.

ஐந்தாவது தீட்சை செபித்து அந்த மந்திரம் சித்தியான பின்னர்,ஆறாவது தீட்சையாக "லங்" என்ற மந்திரத்தினை முழு மனதுடன் ஒருமண்டலம் செபித்து வர தேகமானது பருத்தியைப் போல பக்குவமாகுமாம்.

ஏழாம் தீட்சை
பக்குவ மேழாந் தீட்சையைக் கேளு
திக்கும் பொருளாய்த் தானேரம் மென்று
சிக்குமிடந் தன்னில் சென்றுரு செபித்தால்
திக்கு விசையஞ் செய்யலு மாமே.

ஆறாவது தீட்சை முறையாக செபித்து முடிந்ததும், ஏழாவது தீட்சையாக "ரம்" என்ற மந்திரத்தை முழு மனதுடன் ஒருமண்டலம் செபிக்க அனைத்து பகுதிகளுக்கும் சென்று வரும் வல்லமை சித்திக்குமாம்.


எட்டாம் தீட்சை
செய்யவே எட்டாந் தீட்சையைக் கேளு
பையவே பிரம பதியிட மாகிக்
கையது நெல்லிக்கனி யதுபோல
வையகந் தன்னிற் கம்மென நில்லே.

நில்லே நிலையில் நினைவுடன் நின்றால்
தொல்லைகள் அகலுஞ் சோதிகள் காணுந்
தில்லையில் வாழுந்த தெரிசனங் காணும்
நல்லது எட்டுச் சித்துகள் நன்மையே.

ஏழாவது தீட்சை செபித்து முடிந்ததும், எட்டாவது தீட்சையாக "கம்" என்ற மந்திரத்தை முழுமனதுடன் ஒரு மண்டலம் செபித்து வர தொல்லைகள் எல்லாம் நீங்குமாம். மேலும் சோதி தரிசனமும், தில்லையில் வாழும் ஈசன் தரிசனமும் கிட்டுமாம். இந்த எட்டு சித்துக்களும் கைவரப் பெறுவது மிக்க நன்மையாகும் என்கிறார் மச்ச முனிவர்.

ஒன்பதாம் தீட்சை
நன்மையா மென்பதாந் தீட்சையைக்கேளு
உன்னமரும் மெனவே யுகந்துருக் கொண்டால்
சின்மயமான தெரிசனங் காணும்
தன்மை யீதெனவே சாந்திட முத்தியே.

எட்டாவது தீட்சை செபித்து முடிந்ததும் ஒன்பதாவது தீட்சையாக "ரூம்" என்ற மந்திரத்தை முழுமனதுடன் ஒருமண்டலம் செபிக்க சின்மயமான சிவனின் தரிசனம் கிட்டுமாம் அவ்வாறு கிட்டினால், முக்தியும் கைகூடும் என்கிறார்.

பத்தாம் தீட்சை
சாந்திடப் பத்தாந் தீட்சையைக்கேளு
கூர்ந்திடு மந்தக் குறியை நீபார்த்து
ஆர்ந்திடு மம்மென றனுதினம் நோக்கில்
தீர்ந்திடும் பிறவித் திருவு மாமே.

ஒன்பதாவது தீட்சை சிறப்பாக செபித்து முடிந்ததும் பத்தாவது தீட்சையாக "மம்" என்ற மந்திரத்தினை முழுமனதுடன் ஒருமண்டலம் செபிக்க மறுபிறவி நீங்கும் என்கிறார். இதன் மூல பிறவா பேரின்பநிலை சித்திப்பதுடன், சொரூப சித்தியும் கைகூடுமாம்.


Manthiram, Poojas, Temple, Devotional news, Religious, Spiritual துர்கை வழிபாடு
, தமிழ் அர்ச்சனைகள் , ஸ்ரீ கணபதி , மந்திரங்கள், பூஜைகள், ஆன்மீக செய்திகள், ஆலயதரிசனம்.

Wednesday, March 15, 2017

Marriage Temple - Sri Kalyanasundareshwarar



சங்ககாலத்துக்குப் பிறகு வந்த அப்பர் பெருமான் திருநல்லூரை தம் சிரசுச் சிகரத்தில் சூடி மகிழ்ந்த விஷயம் நெகிழ்ச்சுக்குரியது.  திருநாவுக்கரசர் தன் நடை தளரும் வயதிலும் உழவாரப் பணியை வழுவாது செய்து வந்தார். திருச்சத்தி முற்றம் அடைந்து கொழுந்துச் சிவந்திருக்கும் ஈசனைக் கண்டு கண்ணீர் சொரிந்தார். ‘‘கொன்றை சூடிய வேந்தன் தம் நனைந்த திருவடிகளை தேவர்கள் தலையில் வைத்தீராமே!’’ என ஈசனை நோக்கி நெக்குருகினார். அந்த பாக்கியம் எமக்குக் கிடையாதா என ஏக்கமாய்க் கேட்டார். அந்நேரம் அசரீரியாய் ‘நல்லூர் வருவாயாக, விரைவாய் வருவாயாக’ என ஒருமுறைக்கு இருமுறை கட்டியம் கூறுவதுபோல் பகர்ந்தார் ஈசன். திருநல்லூர் திக்கு நோக்கி விரைந்தார். திருநல்லூர் நாயகன் கல்யாணசுந்தரேஸ் வரரின் முன்பு களிப்பெய்தி அமர்ந்தார். சிறு   குழந்தைபோல் தரையில் தவழ்ந்துபோய் கண்ணீரோடு ஈசனைப் பார்த்தார். ‘‘கூற்றம் எனும் எமன் வந்து குலைக்கும் முன் பெருமானே உம் பூவடிகளை என்   தலைமீது பொறிக்க மாட்டீரா’’ என கேவல் பொங்க அழுதார்.

நல்லூர் பெருமான் கனிந்தார். உமையன்னையும் உடன் அமர்ந்தாள். சட்டென்று ஈசன் லிங்கத்தினின்று ஜோதியாய் கிளர்ந்தெழுந்தான். வீரக்கழல் அணிந்த ஈசனின் திருவடி ஜோதியின் ஒளிபட்டுப் பிரகாசித்தது. நாவுக்கரசரின் முகம் ஒளிர்ந்தது. நெகிழ்ந்து கிடந்த அவர் தலைமேல் தம் திருவடிகளை மெல்ல இறைவன் பதிக்க பரவசத்தின் சிகரத்தைத் தொட்டார் அப்பர் பெருமான். புறவுலகின் நினைவை முற்றிலும் இழந்து அகத்தில் பொங்கி ஆர்ப்பரித்த ஈசனின் அருட் சமுத்திரத்தில் கரைந்தார். ஈசன் மெல்ல சுருங்கி லிங்கத்தினுள் ஒடுங்க, அகம் நிறைந்த நாவுக்கரசர் குழந்தைபோல தளர் நடை நடந்து சந்நதிக்கு அருகே அமர்ந்தார். உள்ளுக்குள் பெய்த அருட்பெருமழையை பாக்களாக மாற்றி திருப்பதிகங்களாக திருவாய் மலர்ந்தருளினார். ஒவ்வொரு பதிகத்திலும் ‘நலம் கிளரும் திருவடி என் தலைமேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்லவாறே’ என்று தம் சிரசில் ஈசன் சூடிய திருவடியை நினைந்து நினைந்து நெகிழ்கிறார்.

அதோடு விடவில்லை; நம்மீது கருணை கொண்டவரான அவர், ‘‘எம் தலையில் பதித்ததுபோல் உம்மை நாடிவரும் பக்தர் பெருமக்களின் தலையிலும் திருவடிபதிக்க வேண்டுகிறேன்’’ என வினயமாய் கேட்க ஈசனும் சரியென்று உகந்தான். இத்திருநல்லூர் நான்கு ராஜவீதிகளுடன் சப்தசாகரம் எனும் ஏழுகடல் தீர்த்தத்தோடு விளங்குகிறது. ஏழுநிலை மாடத்துடன் ராஜகோபுரம் வானளாவி உயர்ந்து நிற்கிறது. உட் கோபுரவாயிலுக்குள்ளே இடதுபுறம் அமர்நீதிநாயனாரும், கையில் மழலையுடன் அவர் துணைவியாரும் நல்லூர் பெருமானை வந்து தரிசிக்க வரும் பக்தர்களை வெகு பவ்யமாக வரவேற்கிறார்கள். சிவத்தொண்டர்களுக்கு   ஆடை அளித்து, அவர்கள் பசியாற இன்னமுது படைப்பதையே தனது வாழ்க்கையாக்கிக் கொண்ட குடும்பம் அது. நல்லூர் பெருமானும் வேதியர் வடிவில்   விளையாடல் புரிந்து தன்னோடு சேர்த்துக் கொண்டார் என்கிறது பெரிய புராணம். இத்தலத்திற்கு பெரும் பெருமை சேர்த்த இந்த திவ்ய தம்பதியை சிரம்தாழ்த்தி வணங்கி, உட்பிராகாரம் நோக்கி நகரலாம்.

அந்த செங்குத்தான மாடக்கோயில் படிகளில் ஏறும்போதே செங்கணானின் நினைவு நம் நெஞ்சில் நிழலாடும். கல்யாணசுந்தரேஸ்வரர் சந்நதியை நெருங்க சாந்நித்யம் நெஞ்சை நிறைக்கும். சுயம்புவாய் பொங்கிய லிங்கம், நம்மை சிலிர்த்திட வைக்கும். இன்றும் இந்த லிங்கத்தினுள் சப்தரிஷிகளும் பிரளயத்தின்போது ஒடுங்கிய ஏழு துளைகள் காணப்படுகின்றன. அதுமட்டுமல்லாது பிரபஞ்சத்தின் மாற்றத்திற்குக் காரணமாக இத்தல ஈசன் விளங்குவதால், லிங்கத்தின் நிறம் ஆறு நாழிகைக்கு ஒருமுறை மாறுவது பார்க்க மனம் சிலிர்க்கும். பார்த்துக்கொண்டிருக்கும்போதே அழகாய் நிறம் மாறும் அற்புதம் மனதைக் கொள்ளை கொள்ளும். காலைமுதல் தாமிரம், இளம் சிவப்பு, உருக்கிய தங்கம், கரும்பச்சை, இன்னதென்று சொல்லமுடியாத வண்ணம் என்று இரவுவரை தொடர்ச்சியாக நிறம்   மாறிக்கொண்டே இருக்கும். அதனாலேயே பஞ்சவர்ணேஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள். நாவுக்கரசர் ஈசனிடம் வேண்டிக்கொண்டது போல, இன்றும் பெருமாள் கோயிலில் சடாரி கொண்டு ஆசியளிப்பதுபோல, ஈசனின் திருவடிகளை பக்தர்களின் தலையில் பதித்து ஆசியளிப்பது இங்கு நிரந்தர வழக்கமாக உள்ளது.

சிவன் சந்நதிக்கு அருகிலேயே மலைமகளான கிரிசுந்தரி அருள் அமுதமாக நிற்கிறாள். உயர்ந்த திருவுருவம் கொண்டு, அருளைப் பொழிவதில் மேருவை விட உயர்ந்தவளாய் விளங்குகிறாள். நல்லூரின் புகழ்சொல்லும் இன்னொரு விஷயம், இத்தலத்து பிராகாரத்தில் அமைந்துள்ள நல்லூர் அஷ்டபுஜமாகாளி. பிரளயத்தோடு காளிக்கு நெருங்கிய தொடர்பிருப்பதால் இங்கு அமர்ந்துள்ளாள். காளி என்றாலே கோரமுகமும், ஆவேசமும்தான் நினைவுக்கு வரும். ஆனால், இம்மாகாளி புன்னகை பூக்கும் இனிய நாயகி. மூத்த சுமங்கலி போன்ற மஞ்சள் பூசிய சாந்த முகம் கொண்டவள். ஆக்ரோஷமே இல்லாது அமைதியாய் அமர்ந்திருப்பாள். ஆகவே, மழலைச் செல்வம் இல்லாதவர்கள் காளியை வேண்டிக் கொண்டு, அவளருளால் நிறைசூல் கர்ப்பிணியாக மாகாளி எதிரே அமர்ந்து வளைகாப்பு விழா   செய்து கொள்கிறார்கள். அவளின் இரு கைகளிலும் வளையல்களைப் பூட்டி அழகுபார்க்கிறார்கள்.

அதுமட்டுமல்லாது, கல்யாண சுந்தரேஸ்வரர் அருளால் திருமணமான தம்பதிகள் ‘குழந்தைச் செல்வம் தா தாயே’ என்று கைகூப்பி வேண்டுவதை இங்கு நித்தமும் காணலாம். குந்திதேவி சப்த சாகர தீர்த்தத்தில் நீராடி பூஜித்த லிங்கத்தை கோயிலின் உட்பிராகாரத்தில் காணலாம். இரண்யனை வதம் முடிக்கும் முன்பு, எவ்வுருவம் தாங்கி சம்ஹாரம் செய்வது என்று இத்தலத்து ஈசனிடம் வினவ நரசிங்கனாக செல் என்று ஆசி கூறினாராம். அதற்கு ஆதாரமாக கருவறை விமானத்தின் பின்புறம் நரசிம்மமாகக் காட்சி அளிக்கும் சிற்பம் இத்தலத்து அற்புதம். மேலும், மேலும் நூறாயிரம் விஷயங்களைக் கொட்டும் கோயில் இது. இப்பெருங்கோயில் கும்பகோணம்-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் சுந்தரபெருமாள்கோயில் எனும் ஊருக்கு அருகே உள்ளது. நல்லூர் செல்வோம், நல்வாழ்வு   பெற்றிடுவோம்.

Tuesday, January 3, 2017

Tirupati venkatachalapathy Temple Darshan - திருப்பதி வெங்கடாசலபதி தரிசனம்

திருப்பதி வெங்கடாசலபதி கோயில்


திருப்பதி வெங்கடாசலபதி கோயில் இந்தியாவிலேயே அதிக வருமானம் உள்ள கோவில்.  முடி காணிக்கை மூலம் மட்டுமே பல கோடிகளை சம்பாதிக்கும் தலம். இங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலகப் புகழ் பெற்றதாகும். இந்த பிரசாதமானது திருப்பதி திருமலை தேவஸ்தானத்தினரைத் தவிர வேறெவரும் தயாரித்து விற்கக்கூடாது என்பதற்கான புவிசார் குறியீடு காப்புரிமையை பெற்றதாகும். இந்த லட்டுக்கள் சர்க்கரை, கடலைப்பருப்பு, நெய், முந்திரி பருப்பு, உலர் திராட்சை, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, ஏலக்காய் போன்ற பொருட்களால் பிரத்தியேகமான ஒரு முறையில் தயாரிக்கப்படுகிறது. 1931 ஆம் ஆண்டு திருப்பதியில் லட்டுப் பிரசாதத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் கல்யாணம் ஐயங்கார் எனும் பெரியவர். புரட்டாசி சனி விரதம் இந்தப்பெருமாளை முன்னிட்டே அனுஷ்டிக்கப்படுகிறது. இந்தியாவில் மிக அதிகமான  மக்கள் இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். புரட்டாசி பிரமோற்ஸவத்தின் ஐந்தாம் திருநாளில் கருட சேவை நடக்கும். அன்று சுவாமி பவனியின் போது மூலவரே வெளியில் வருவதாக ஐதீகம். இதன் காரணமாக ஒரு காலத்தில் சுவாமி பவனி முடியும் வரை கோயில் நடை அடைக்கப்பட்டது. தற்போது கூட்டம் அதிகமாக இருப்பதால், பெயரளவுக்கு ஐந்து நிமிடங்கள் மட்டும் நடை அடைக்கப்படுகிறது. இந்த விழாவின் போது ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடுகிறார்கள்.பொதுவாக பெருமாளை பசுக்களை மேய்க்கும் கோலத்தில் தான் பார்த்திருப்பீர்கள். ஆனால் திருப்பதியில் உற்சவப் பெருமாள் மட்டுமே "ஆடு மேய்க்கும்' கோலத்தில் காட்சியளிப்பார். இந்த காட்சியை ஊஞ்சல் உற்சவத்தின் போது தரிசிக்கலாம்.

Online Booking  Tirumala Tirupati VIP Darshan Ticket Timings Process Break Darshan tickets online booking Tirumala Break Darshan procedure Tirumala Break Darshan procedure and Timings Tirumala Tirupati VIP Break Darshan Tickets and information Tirumala Temple tirupati temple vip pass Special Entry Darshan Hotels near Sri Balaji Temple Tirupati Tirupati Cheap Hotels Luxury 5 star Tirupati Hotels மலையப்பசாமி கல்யாண வெங்கடேஸ்வரர் கருடாத்ரி வ்ருஷபாத்ரி அஞ்னாத்ரி வேங்கடாத்ரி சுவாமி புஷ்கரிணி குலசேகராழ்வார் ஆனந்த விமானம் மங்களாசாசனம் திவ்யதேசம் சோழர்108 cholar malayapasami kalyana venkateswarar karudathri virushapathri anjnathri venkadathri swamy pushkarini kulasekaralwar anantha vimanam mangalasasanam dhivya desa Online Booking  Tirumala Tirupati VIP Darshan Ticket Timings Process Break Darshan tickets online booking Tirumala Break Darshan procedure Tirumala Break Darshan procedure and Timings Tirumala Tirupati VIP Break Darshan Tickets and information Tirumala Temple tirupati temple vip pass Special Entry Darshan Hotels near Sri Balaji Temple Tirupati Tirupati Cheap Hotels Luxury 5 star Tirupati Hotels

Sunday, October 23, 2016

Tamil Vastu for house, Vaastu for home, Vastu Consultant, Vastu for commercial buildings



வாஸ்து சாஸ்திரம் பார்ப்பதன் பலன்கள் :


வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம் : 


வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம், மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் பூத்திசெய்வதுடன், கட்டப்படுகின்ற கட்டிடம், மனிதன் இயற்கையுடனும், இப் பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைந்து போவதற்கு உதவுவதுமாகும். வாஸ்து சாஸ்திரம், ஒரு கட்டிடத்தை வெறும் கல்லாலும், மரத்தாலும், கட்டப்பட்ட உயிரற்ற அமைப்பாகக் கருதுவதில்லை.


வாஸ்து சாஸ்திரம் தோன்றிய விதம்:


பண்டைய மனிதர்கள் விண்வெளியில் கிரகங்களின் சுழற்சியைக் கண்டு அறிந்தனர். அவற்றின் இருப்பிடம் பூமியில் கட்டப்பட்டுள்ள ஒரு வீட்டின் எந்த பகுதியோடு தொடர்பு கொண்டுள்ளன என்பதையும், அவை ஒவ்வொரு தனி மனிதரிடத்தின் மீதும் ஆழமான (தூண்டுதல்) மாற்றங்கள் செய்கின்றன என்பதையும் அறிந்திருந்தனர். முறையாக கட்டப்படட்ட வீடு உயர்வும், சுகமான வாழ்வுக்கு உத்திரவாமும் அளிப்பதாகவும் இருந்தன. ஒவ்வொரு கிரகமும் ஒரு மனிதனுடைய தின வாழ்க்கையில்  ஏற்ப்படுத்தும் மாற்றங்களையும் கண்டறிந்ததன் விளைவாக வாஸ்து சாஸ்திரம் உருவானது.


வீடு கட்டும் முறைகள்:


வாஸ்து சாஸ்திரத்தில் கூறியுள்ள படி அதிக இட, அதிக கதவுகளும், அதிக ஜன்னல்களும், அதிக பல்கனிகளும், அதிக தாழ்வாராங்களும் வடக்கு திசையிலும், கிழக்கு திசையிலும் அமைக்க வேண்டும். அதனால் சூரியனின் காலை ஒளிக்கதிர் தடையின்றி வீட்டினுள் வீசும். இதனால் பெரிய மரம், செடி, கொடிகள், உயர்ந்த சுவர்கள், சூரிய ஒளியைத் தடுக்கும். மற்றவையும் வடக்கிலும், கிழக்கிலும் இல்லாது அமைத்தல் வேண்டும். வடக்கிலும், கிழக்கிலும் தரைமட்டம் சற்று குறைவாக இருப்பது நல்லது. வழக்கமாக வடகிழக்கு மூலை தியானம் செய்ய ஏற்றதாக உபயோகப்படுகிறது. 


வாஸ்து சாஸ்திரமும் கிரகங்களின் பார்வையும் :


வாஸ்து சாஸ்திரம் பண்டைய இந்தியாவில் தோன்றியது. இதன் சிறப்பு, யாதெனில் உடல், மனது, ஆவி மூன்றும் உயர்வடையும். பொதுவான நோக்குடன் ஒரே மொழியில் உருவானது. இது தானாகவே மனிதனுக்கும், பஞ்சபூதங்களுக்கும் இடையே எல்லையை வரையறுத்து, நன்றாக திட்டமிட்டு வீடுகட்டுவது மிகவும் அவசியமானதாக ஆயிற்று. அவ்வாறு உருவாக்கப்பட்ட வாஸ்து சாஸ்திரம் தடைகளை அகற்றி பஞ்சபூதங்களை சரியான முறையில் கிரஹிக்க ஏதுவாக திட்டமிட்டு வீடு கட்டப்பட்டது. வாஸ்து சாஸ்திரம் அழியாக் கொள்கைகளை ஆதாரமாகக் கொண்டு, சுற்றுச் சூழ்நிலைகளில் ஆனந்தமான வாழ்க்கை வாழ வழிகாட்டுகிறது. இதனால் மனித உடல்நலம் பஞ்ச -பூதங்களின் பெரும்பாதிப்புக்கு உட்பட்டது என்பது எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. இயற்கையின் நியதியோடு இணைந்து வாழ்வதாலும் வாஸ்து சாஸ்திர முறைப்படி கட்டப்பட்ட வீட்டில் வசிப்பதாலும் நடுநிலை நகலம் அடைய முடிகிறது. (பதினாறும் பெற்று பெருவாழ்வு பெறுதல்) உடல், மனது இவற்றை பாதிக்கும் காஸ்மிக் சக்தி இருப்பதை உறுதியாக கூறுகிறது.


வாஸ்து சாஸ்திரம் மற்றும் உடல் ஆரோக்கியம்:


உங்கள் ஜாதகத்தை கணித்து உங்கள் ஜாததிற்கேற்ற வாஸ்து முறைப்படி வீடு கட்ட வேண்டும். ஏனென்றால் வாஸ்து பகவான் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு உடல்நலம், செல்வம், ஆனந்தத்தை அள்ளி வழங்குவார். உடல்நலமும், உள்ளத்தில் மகிழ்ச்சியும், உணர்வாலும், உடற்பயிற்சியாலும் மட்டும் கிடைப்பதல்ல. மனது கவலையுற்றதால் நடுநிலை இயக்கத்திலிருந்து உடல் தூக்கி எறியப்பட்டு நோயைத் தூண்டுகிறது. உடலில் உள்ள நாடிகள் ஆராய்ந்து அறிய சிரமமான பிராணா ஒழுங்காக இயங்க வாஸ்து வழிவகுக்கிறது. நல்ல உடல்நலமும், செல்வமும், ஆனந்தமும் அருளுகிறது. வாஸ்து சாஸ்திர அறிவை யார் புறக்கணிக்கிறார்களோ அவர்கள் தொடர்ந்து துன்பமும், ஏமாற்றமும் அனுபவிக்க வேண்டி இருக்கிறது.


வீட்டில் உள்ள தீய சக்தியை விரட்டுவது எப்படி ;


தற்பேது நீங்கள் குடியிருக்கும் வீடு அரை செண்ட்டாக இருந்தாலும் சரி, ஐந்து செண்ட்டாக இருந்தாலும் சரி அத்தனையையும் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்தாம இருக்கக் கூடாது. பயன்படுத்தாமல் இருக்கும் போது அதில் எதிர்மறை சக்திகள் குடிகொள்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. சாதாரணமாகவே விட்டுவிட்டாலே புழு, பூச்சியெல்லாம் வருகிறது அல்லவா, அது நமது கண்ணுக்குத் தெரிந்திருக்கிற மாசு. கண்ணுக்குத் தெரியாத மாசு காஸ்மிக் கதிர்கள் அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது, நாம் பயன்படுத்தாம இருக்கிற இடத்தில் ஒரு நெகட்டிவ் ஃபார்மாகும். அதிலும் பாழடைந்த வீடுகள், இடங்களெல்லாம் வைத்துக் கொள்ளக்கூடாது. அது நமது சந்ததிகளை மிகவும் பாதிக்கும். ஆக மொத்தம் பராமரிக்கப்படாத வீடுகள், பாழடைந்த பங்களாக்கள் இவைகளெல்லாம் இருக்கக்கூடாது. அது இருந்தால் பாதிப்பு இருக்கும். குடும்பத்தில் நான்கு நபர்கள் இருந்தால், யாராவது ஒருவரை அந்த நெகட்டிவ் பாதிக்கும். அதனால் வீட்டின் அனைத்து பகுதிகளையும் பராமரித்து சுத்தமாகவும், தெய்வீகத் தன்மையுடனும் வைத்துக் கொள்வது நல்லது. நீங்கள் அடிக்கடி பயன்படுத்தாத அறையாக இருந்தாலும் அந்த இடத்தை சுத்தப்படுத்தி, விளக்கேற்றி வைக்கலாம். உங்களுக்கு தெரிந்த ஸ்லோகங்கள், எந்த மதத்தவர்களானாலும் அவர்களுக்குள்ள வழிபாட்டு முறைகளை கடைபிடிப்பது நல்லது.

 Vastu,  Vastu for home,Vastu ,  Vastu for house,  Vastu for office, Residential  Vastu,  Vastu for Industries,  Vastu for Industry,  Vastu Consultant in Tirupur,  Vastu Consultant in Tirupur,  Vastu Consultant in India, Best  Vastu Consultant, No.1  Vastu Consultant, No1  Vastu Consultant in Tirupur,  Vastu for commercial buildings, Betterment in living by  Vastu,  Vastu tips, Success in life by  Vastu, Natural remedies by  Vastu,  Vastu design for better living,  Vastu House,  Vastu House Plan,  Vastu House Drawings,  Vastu House Photos,  Vastu House Videos, Best  Vastu House Photos, Best  Vastu House Videos,  Vastu,  Vastu for home,Vastu ,  Vastu for house,  Vastu for office, Residential  Vastu,  Vastu for Industries,  Vastu for Industry,  Vastu Consultant in Tirupur,  Vastu Consultant in Tirupur,  Vastu Consultant in India, Best  Vastu Consultant, No.1  Vastu Consultant, No1  Vastu Consultant in Tirupur,

Monday, August 1, 2016

குரு பெயர்ச்சி பலன்கள் பரிகாரம் 2016-17, Gurupeyarchi palangal 2016-17


12 ராசிக்குமான குரு பெயர்ச்சி பலன் மற்றும் பரிகாரம்: 




குரு பெயர்ச்சி பலன்கள் மேஷம் ராசி - Gurupeyarchi palankal for Mesham Rasi


குரு பெயர்ச்சி பலன்கள் ரிஷபம் ராசி - Gurupeyarchi palankal for Rishabam Rasi

குரு பெயர்ச்சி பலன்கள் மிதுனம் ராசி - Gurupeyarchi palankal for Midhunam Rasi

குரு பெயர்ச்சி பலன்கள் கடகம் ராசி - Gurupeyarchi palankal for Kadagam Rasi

குரு பெயர்ச்சி பலன்கள் சிம்மம் ராசி - Gurupeyarchi palankal for Simmam Rasi

குரு பெயர்ச்சி பலன்கள் கன்னி ராசி - Gurupeyarchi palankal for Kanni Rasi

குரு பெயர்ச்சி பலன்கள் துலாம் ராசி - Gurupeyarchi palankal for Thulaam Rasi

குரு பெயர்ச்சி பலன்கள் விருச்சிகம் ராசி - Gurupeyarchi palankal for Viruchigam Rasi

குரு பெயர்ச்சி பலன்கள் தனுசு ராசி - Gurupeyarchi palankal for Dhanusu Rasi

குரு பெயர்ச்சி பலன்கள் மகரம் ராசி - Gurupeyarchi palankal for Magaram Rasi

குரு பெயர்ச்சி பலன்கள் கும்பம் ராசி - Gurupeyarchi palankal for Kumbam Rasi

குரு பெயர்ச்சி பலன்கள் மீனம் ராசி - Gurupeyarchi palankal for Meenam Rasi

Sunday, July 24, 2016

குரு பெயர்ச்சி பலன்கள் 2016-17 மீனம் ராசி - Gurupeyarchi palangal 2016-17 Meenam Rasi (Pisces)


Ø  ராசி : மீனம்
Ø  நட்சத்திரம் : பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய
Ø  அதிஷ்ட கல் : மரகதம்
Ø  அதிஷ்ட வண்ணம் : வெள்ளை
Ø  அதிஷ்ட எண் : 2, 8, 9
Ø  அதிஷ்ட திசை : North - East


குரு பெயர்ச்சி பலன்கள் 2016-17 மீன ராசி - Gurupeyarchi palangal 2016-17  Meena Rasi (Pisces):

வெற்றி வேணுமா போட்டு பார்க்கணும் எதிர்நீச்சல் என்ற கொள்கையுடைய மீனராசி அன்பர்களே!

மனத்தில் பட்டதை மறைக்காமல் பேசுபவர் நீங்கள். கடந்த ஆண்டு ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரித்த குருபகவான் ஏழாம் பாவமான திருமணம், கூட்டு தொழில், வாழ்க்கை துணை, வெளிநாட்டு வாழ்க்கை, காதல் ஆகிய காரகங்களைக் குறிப்பிடும் ஸ்தானத்தில் இருந்து மீன ராசியை பார்க்கிறார். அஷ்டமத்து சனியில் கூட இவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க வில்லை!. ஆனால் கடந்த ஆண்டு பட்ட பாடு சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனையை உருவாக்கி விட்டது


பொதுவாக ராசி நாதனோ தசா நாதனோ உச்ச ராசியை நோக்கி போனால் ஆரோகணம் பலன்களை செய்யும். அதே போல் அவரோகணம் அதாவது நீச வீட்டை நோக்கி போனால் கடுமையான கஷ்டங்களை தரும்.!! ஆனால் உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் பூர்த்தியாகும் நல்ல நேரம் வந்து விட்டது. குரு தன்னுடைய ஜந்தாம் பார்வையால் லாப ஸ்தானத்தை பார்க்கப் போகிறது. குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் தீரும்.பல வருஷங்களாக முயற்சி செய்த விசயங்களை எளிதில் முடிப்பீர்கள். முன்னேற்றமான வேலை தொழில் சம்பாதித்தியம் அமையும். வெளிநாடு தொடர்புடைய வேலைகள் அமையும் சம்பாதிக்கும் பணம் சொத்து வசதி வாய்ப்பு பெருக்கும். பகைமைகள் மாறும். உடன்பிறப்பால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும்

ராசிக்கு அதிபதி கேந்திர திரிகோணத்தில் வந்தால் நிச்சயமாக நல்ல பலனை தான் செய்வார். பகை வீட்டில் அமரும் குரு கேந்திராதிபதி தோஷத்தை கொடுக்க மாட்டார் சுபகாரியம் திருமணம் கூட்டு தொழில் போன்ற நன்மைகளை செய்வார். பொதுவாக ராசி லக்னத்தை குரு பார்த்தால் தேகபலம்,மனோபலம் பணபலம் ஆகிய முன்றும் கிடைக்கும். முயற்சி ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பொருளாதார நிலையில் இருந்த முட்டுகட்டைகள் அகலும். வரவேண்டிய பாக்கிகள் வரும் கடன்கள் அடைப்படும்.சேமிப்புகள் சேரும் மொத்தத்தில் 80 சதவிதம் நன்மைகள் நடக்கும்.

பரிகாரம்மீன ராசி

மீன ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள் ;
திருசெந்தூர் செந்திலாண்டவரை தரிசனம் செய்துவர வேண்டும். காவல் தெய்வங்களுக்கு உரிய முறைப்படி வணங்க வேண்டும். இருக்கன்  குடி மாரியம்மன் வழிபாடு செய்தல் வேண்டும்.

மீன ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் துன்பங்கள் நீங்கும்.

                        “ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம
மீன ராசி குரு பெயர்ச்சி பலன்கள், மீன ராசி பலன்கள், சனிப் பெயர்ச்சி பலன்கள் மீன ராசி, Meena Rasi Gurupeyarchi palangal 2016-17-, குரு பெயர்ச்சிபலன்கள் 2016-17 மீன ராசி Pisces, Guru Peyarchi Plalangal 2016-17 for Meenam Rasi (Pisces), Jupiter Transit 2016–17 for Meenam Rasi (Pisces), Guru Peyarchi Plalangal 2016-17 for Meenam Rasi (Pisces), குரு பெயர்ச்சிபலன்கள் 2016-17 மீனம் ராசி, Astrology for Meenam Rasi (Pisces), Chinese astrology for Meenam Rasi (Pisces), daily rasipalan for meena rasi, daily astrology for Meenam Rasi (Pisces), astrological signs for Meenam Rasi (Pisces), rashi and nakshatram,porutham, jathaga porutham, horoscope matching for meena rasi, astrology compatibility for Meenam Rasi (Pisces), astrologer for Meenam Rasi (Pisces), love astrology for Meenam Rasi (Pisces), birth astrology for Meenam Rasi (Pisces), astrology horoscopes for Meenam Rasi (Pisces), Free daily horoscopes for Meenam Rasi (Pisces), weekly horoscopes for Meenam Rasi (Pisces), monthly horoscopes for Meenam Rasi (Pisces), chinese horoscopes for Meenam Rasi (Pisces), love astrology for Meenam Rasi (Pisces), tarot reading for Meenam Rasi (Pisces), numerology for Meenam Rasi (Pisces), lucky number for meena rasi, Gemstone for Meenam Rasi (Pisces), lucky color for Meenam Rasi (Pisces), business for Meenam Rasi (Pisces)
பொருத்தமான வரனை தேர்ந்தெடுங்கள் @ www.kalyanasolaimatrimony.com
AstrologyPalan, Jathagam, jathagapalan, birthdayhoroscope, Josiyam, stars, gurutransit, rahuketu, sanipeyarchi, tamilnewyearrasipalan, Josiayam, subhamuhurtamdates, dailyhoroscope, horoscopetoday, numerology, horoscope, horoscopestars, freehoroscopeonline, horoscopereading, astrologyhoroscope, mobilehoroscope, freeyearlyhoroscope, yearlyhoroscopes, joshiyam, rahuketutransit, rahuketupeyarchi, transitastrology, saturntransit, jupitertransit, subhamuhurthadays, subhamuhurtham, subhamuhurthamdates, jathagakanippu, horoscopematching, raasi, rashinakshatra, raasiporutham, rasipalan, kalyanaporutham, vastu, vaastu, vastutips, vaastuforhome, vastuhouse, vaastushastra, mesham, rishabam, mithunam, kadagam, simmam, kanni, thulaam, viruchigam, dhanusu, magaram, kumbam, meenam, Horoscopematch, MatchMaking, RasiMatch, MatchPalan, AstrologyResearch, VirtualPooja, Palmistry, monthlyhoroscopes, AstrologyRasipalan, dailyastrology, weeklyhoroscopes, loveastrology, birthastrology, astrology, horoscopes, aries, taurus, gemini, cancer, leo, virgo, libra, scorpio, sagittarius, capricorn, aquarius, pisces, Freedailyhoroscopes, astrological, astrologicalsigns, astrologer, astrologicalsign, tarot, DailyHoroscopes, YearlyHoroscope, monthlyhoroscope, weeklyhoroscope, palan, jathaga, birthday, guru, transit, rahu, ketu, sani, peyarchi, Josiyar, daily, today, weekly, online, reading, mobile, saturn, subha, muhurtham, days,dates, kanippu, matching, rashi, nakshatra, porutham, rasi, kalyana, Jathaka, Match, Making, monthly, birth.